Daily Archive: April 4, 2018

சடக்கு – ஒரு மகத்தான முயற்சி

அன்பான ஜெ.       கேமரன் மலையில் இருந்த புத்தர் கோயிலில் உங்களிடம் சொல்லியதாக நினைவு. எழுத்தாளர்களின்  அவர்கள் செயல்பாடுகளின் புகைப்படங்களைt தொகுத்து   வல்லினம் மூலம் இணையத்தளம் உருவாக்கப்போவதாக. விஜயலட்சுமியின் தொடர் முயற்சியில் அது முழு வடிவம் பெற்றுள்ளது. சடக்கு என பெயரிட்டுள்ளோம்.     அப்போது நாஞ்சில் நாடன் தன்னிடம் ஒரே ஒரு சிறுவனாக இருந்தபோது உள்ள படம் உள்ளது என்றார். உண்மையில் தமிழ் எழுத்தாளர்களின் படங்களை சேமிக்கும் முயற்சிகள் அந்தந்த நாட்டில் தொடங்கப்பட்டால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108026

அசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்

  புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும, மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவ தில்லை – அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரத்தான் – ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107851

நாயக்கர் கலை -கடிதம்

  நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும் இனிய ஜெயம்     சில நாட்கள் முன்பு  சிதம்பரம் , வைத்தீஸ்வரன் கோவில்  கும்பகோணம் ,தஞ்சாவூர் என ஒரு சிறிய பயணம் போனேன் .ஒவ்வொரு மன்னர் வம்சமும் ஒவ்வொரு மூர்த்தி வடிவை வளர்த்து எடுத்திருக்கிறார்கள் .அதில் சோழர்கள் வளர்த்து எடுத்த மூர்த்தி சதாசிவ மூர்த்தி . பல முகங்கள் [நூறு ]கொண்ட சிவன் . சிவனின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு மூர்த்தி .அதன் படி சிவன் தன்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107827

கவிதை மொழியாக்கம் -எதிர்வினை

  வெ.ஸ்ரீராம் கவிதை மொழியாக்கம் -கடிதம் இனிய ஜெயம் தனது மொழியாக்கம் குறித்த நண்பர் சூர்யா அவர்களின் எதிர்வினையை கண்டேன் . நியாயப்படி இக் கடிதத்தினை சூர்யா அவர்களுக்கு எழுதி இருக்க வேண்டும் .  தொடர்ச்சி கருதி இதையும் உங்களுக்கே எழுதுகிறேன் . நீரின் சாவி     ரிஷிகேஷத்திற்கு பிறகு கங்கை இன்னும் பசுமை. சிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம். நாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல். மேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா. நீலவெளிகளில் வெண்பாறைகளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108052

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11

இளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். இளைய யாதவர் திரும்பவோ சொல்லெடுக்கவோ செய்யாமல் நேர்கொண்ட நோக்குடன் செல்ல பீஷ்மர் அவ்வப்போது நின்று அந்த இடத்தை கூர்ந்தபின் தொடர்ந்தார். அவர்களின் காலடியோசைகள் சூழ்ந்திருந்த இருண்ட மரக்குவைகளில் பலவாறாக எதிரொலித்து உடன் பலர் தொடர்வதுபோல் செவிமயக்கு கூட்டின. கோமதியின் கரையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107830