Daily Archive: April 3, 2018

அசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்

  பகுதி – 1   ‘புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…’ என அசடன் நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார் ஜெ. மிக மிகச் சரியான கூற்று. பிற எந்த நாவல்களை விடவும் அசடனை மிக மிக வேறுபடுத்திக் காட்டுவது என்பது இந்த ஊசி முனையில் விரவும் மைதானம் தான். பொதுவாக ஒரு நாவலில் வரும் பாத்திரங்களின் வளர்சிதை மாற்றங்களே அந்நாவலின் மையத் தரிசனத்தையும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107841

நாடோடிமன்னன்

நேற்று அருண்மொழியும் அஜிதனும் நானும் நாகர்கோயில் கார்த்திகை திரையரங்கு சென்று எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தோம். நான் அந்தப்படத்தை முதல்முறையாகப்பார்த்தது 1972 ல். நான் ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்போது. அன்று கண்ட காட்சிகள் பலவும் நினைவில் அப்படியே நீடிக்கின்றன. அன்றெல்லாம் நாடோடி மன்னன் வெளியாவதென்பது ஒரு திருவிழா போல. வருடாந்தரத் திருவிழா. பலரும் பத்துப்பதினைந்து தடவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அரங்கில் கூட்டம் நெரிபடும். படம் முழுக்க ரசிகர்களின் எதிர்வினை இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107977

நல்லிடையன் நகர் -கடிதங்கள்

நல்லிடையன் நகர்-2 நல்லிடையன் நகர் -1 அன்புள்ள ஜெ, சென்னைக்கு வந்தபின் மன்னார்குடியோடு தொடர்பு விட்டுப்போனது. பல வருட இடைவெளிக்குப்பிறகு சென்ற இந்த திருவிழா, நீங்களும் வந்ததால் இன்னமும் சிறப்பானதாக ஆகிவிட்டது. அம்மாவும் அப்பாவும் காசிக்கு இரண்டுவார பயணமாக சென்றிருந்தனர். நான் ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். முன்பு நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டு உரிமையாளரும் அவர்தான். அவர் உங்கள் புத்தகங்களை இன்னும் வாசித்திருக்கவில்லை என்பதால் வரத்தயங்கிவிட்டார். அத்விகா, உங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107762

கவிதை மொழியாக்கம் -கடிதம்

வெ.ஸ்ரீராம் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், நண்பர் கடலூர் சீனு எழுதி உங்களுடைய தளத்தில் வெளிவந்த http://www.jeyamohan.in/107633#.WrsSIabraSF எனும் குறிப்பில் நான் மொழிபெயர்த்த ஆக்டோவியா பாசின் கவிதையை குறிப்பிட்டு நண்பர் கூறிய விஷயங்கள் சார்ந்து ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதன்பொருட்டு இதை எழுதிகிறேன். வெறும், அர்த்தத்தை மட்டும் தோண்டியெடுப்பதல்ல கவிதை மொழிபெயர்ப்பு. கவிதையே பிரதானம். மொழிபெயர்ப்பில் அகராதிக்கு அப்பாலும் ஒரு சிலவேலைகள் இருக்கின்றன. என்றே நினைக்கிறேன், அகராதியை மட்டும் நம்பியே அது இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107992

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-10

மூன்று : ஒருமை நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வரும்வரை யமன் கர்ணனின் உருவில்தான் இருந்தார். கருக்கிருட்டில் தன் ஆலயமுகப்புக்கு வந்து அங்கிருந்து யமபுரிக்கு இமைக்கணத்தில் மீண்டார். உவகையுடன் தன் அரண்மனைக்குச் சென்று அதன் முதல்படியில் காலடி வைக்கும் வரை பிறிதொரு வினா இல்லாது நிறைந்திருந்தது அவர் உள்ளம். தூக்கிய கால் நின்றிருக்க திகைத்தபின் பின்னெடுத்து ஊன்றினார். திரும்பி தன்னைத் தொடர்ந்த காரானூர்தியை நோக்கிய கணமே மீண்டும் மண்ணுலகை அடைந்தார். அவரைச் சூழ்ந்த காலவடிவ ஏவலரிடம் “செல்க, இவ்வினாவைவிட விசைகொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107781