Daily Archive: April 1, 2018

இரண்டு முகம்

ஜெ   நான் இப்போது ஒரு  பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறேன். எப்படியென்றால் வட்டிக்கார கிழவியை கொலை செய்யப்போகும் ரஸ்கோல்னிகோவ் மனநிலயைப்போல.2016 ல் கல்லுரி முடித்ததும் .ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன் துளியும்  வெலை ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு விட்டேன் இரண்டு மாதங்களாக வேலை இல்லாமல் இருக்கிறேன்   போட்டித்தேற்வுகளுக்கு படிக்கவும் மனம் ஒப்ப மறுக்கிறது. இலக்கியம் வாசித்தல் தவிர வேறு ஒன்றிலும் நாட்டம் இல்லை.சில தனிமைப் பயணம்க்கள் மேற்கோண்டேன் அது இன்னும் என்னை குழப்பத்தில் ஆழ்த்துகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107692

எதிர்மறைத்தன்மை -கடிதம்

  தமிழர்களின் உணர்ச்சிகரம் நல்லிடையன் நகர் -1 நல்லிடையன் நகர்-2 ஆசிரியருக்கு,   வணக்கம். தமிழக திருவிழா பற்றி நீங்கள் எழுதினால் அது மிக சிறந்த திறப்பை வாசகர்களுக்கு அளிக்கும். 21ம் நூற்றாண்டின் மொழியில் இந்து பாரம்பரிய தொடர்ச்சியை தெரிந்து கொள்வது புதிய தலைமுறைக்கும் அவசியம்.காணொளி காட்சியாக பின்னனி கமெண்டரியுடன் விழாக்காட்சிகள் யூ ட்யூபில் இப்பொழுதெல்லாம் கிடைத்தாலும், அதை மரபில் நின்று நவீனத்தினை கையாளத் தெரிந்த மொழியில் சித்திரமாக எழுதப்படும் பொழுது அத்தியாவசியமாகின்றது.   தமிழர்களின் உணர்ச்சிகரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107636

மன்னார்குடி -கடிதங்கள்

அன்புள்ள ஜெ   காலையில் எழுந்தவுடன் Youtube –ல் உங்க்கள் மலையாள பேச்சை கேட்டுகொண்டிருந்தேன் வெண்முரசிற்காக நீங்கள் மாத்ரூபூமிக்கு கொடுத்திருந்த பேட்டி….. .காலையில் நாகையிலிருந்து புறப்படும்போதே சிறிய தயக்கம் இருந்தது.இது வரை உங்களை இலக்கிய  சந்திப்புக்களிலியே சந்தித்திருக்கிறேன். இது முதன் முறையாக ஒரு பயணச்சந்திப்பில் சந்திக்க வருகிறேன் உங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்பது என் இலட்சிய கனவுகளில் ஒன்று.கிளம்புவதற்கு முன் கிருஸ்ணன் (ஈரோடு) போன் செய்த போது கிடைத்த மறுமொழி தயக்கத்தை போக்கி உற்சாகத்தை கொடுத்தது..மன்னார்குடியில் டோக்கியோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107687

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-8

விண்ணின் மூச்சுலகில் அப்போதும் வசுஷேணர் எஞ்சியிருந்தார். வேறு ஒரு காலத்தில் விழிநிலைக்க அமைந்து அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்கள் அனைவரும் மூச்சுலகிலிருந்து வேறுலகுகளுக்கு எழுந்துசென்றபின் அவர் மட்டும் அங்கே எஞ்சினார். அவர் எவரென்று அங்கிருக்கும் பிறரும் அறிந்திருக்கவில்லை. அங்கு அவ்வாறு நின்றுவிட்டவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு முற்றிலும் தனித்துவிடப்பட்டு வான்தெளிந்த கோடைகால இரவுகளில் மட்டும் நடுங்கும் சிறு விண்மீன் என மண்ணில் சிலர் விழிகளுக்கு தென்பட்டனர். அவர்களை அண்ணாந்து நோக்கியவர்கள் அவ்விண்மீன்கள் உணர்த்திய பெருந்தனிமையை நெஞ்சுணர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107662