Monthly Archive: April 2018

பிறந்தநாள் கணக்கு

அன்பு ஜெ அவர்களுக்கு, வணக்கம். ஏப்ரல் 22 ம்தேதியே பிறந்த நாள் வாழ்த்து கூற முடியவில்லையே என (குற்றுணர்வுடன்) நினைத்திருந்தேன். என்னைப்போன்றவர்களுக்கு 26ம் தேதிவரை நீட்டிப்பு கொடுத்தமைக்கு ஒரு நன்றியும், பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். பிறந்த நாள் கொண்டாடுவதில் எப்பொழுதுமே சின்ன குழப்பம் உண்டு. ஜென்ம நட்சத்திர நாளிலா, ஆங்கில பிறந்த நாள் தேதியிலா என்று. அப்புறம் வைரமுத்து பாணியில் சிந்தித்து, இந்த ஆங்கிலேயர்கள் வராமலேயே இருந்திருந்தால் நாம் எப்படி பிறந்த நாளை கொண்டாடடியிருப்போம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108743

நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

அன்பின் ஜெ. நண்பர் முருகானந்தம் இந்தக் காணொளியை அனுப்பியிருந்தார். பேராசிரியர் ஜீன் ட்ரீஸ் மற்றும் பேராசிரியர் அமர்த்தியா சென்னும் இணைந்து எழுதிய, “An Uncertain Glory – India and its contradictions” என்னும் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக உரை. இந்தப் புத்தகம், சுதந்திர இந்தியப் பொருளாதாரம் பற்றிய ஒரு பருந்துப் பார்வையை, அதன் வெற்றி தோல்விகளை முன்வைக்கிறது. முக்கியமான புத்தகங்களில் ஒன்று. பாஸ்கர் அவர்களின் அறிமுக உரை, சுவாரஸ்யமான நடையில் அமைந்திருக்கிறது. இது, பொதுவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108737

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-37

தென்னகத்து விறலியின் கரிய கன்னங்களில் அருகிருந்த விளக்குகளின் ஒளி மின்னியது. அவள் உடல் எண்ணை பூசப்பட்ட கருங்கல் சிலை என மின்னியது. வெண்விழிகளும் வெண்பற்களும் பெரிய வட்ட முகத்தில் மின்னித்தெரிந்தன. சிறிய மூக்கில் அணிந்திருந்த ஏழு வெண்கற்கள் பதிக்கப்பட்ட மூக்குத்தி அம்மின்னொளிகளுடன் இணைந்துகொண்டது. வண்டு முரலுதல்போல கீழ்சுதி நிலையில் நின்றாள். குறுமுழவென எழுந்த குரல் உச்சங்களில் சிறகசைக்காமல் நீந்தும் பருந்தெனச் சுழன்றது. இறகென தழைந்தது. அவள் உடலில் இருந்து விழிகளை விலக்க இயலவில்லை. அவள் குரல் செவிகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108711

கீதை உரைநூல்கள்

ஜெ, ஜெயதயால்கோயந்தகா எழுதிய கீதை உரை [கோரக்பூர் பதிப்பு] என்னிடம் உள்ளது. பெரிய புத்தகம். மிகக்குறைந்த விலைக்கு நான் அதை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். முழுக்கப் படிக்கவில்லை. சமீபத்தில் ஓர் எழுத்தாளர் அதை அவருடைய ஐந்து நூல்களில் ஒன்றாகச் சேர்த்திருந்தார். அந்நூலைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? படித்திருக்கிறீர்களா? எஸ்.ராஜகோபால் ***   அன்புள்ள ராஜகோபால், ஜெயதயால் கோயந்தகாவின் நூல் மிக மலிவானது. ஆகவே பெரும்பாலானவர்கள் அதை வாங்கி வைத்திருப்பார்கள். இதேபோலப் பரவலாகக் கிடைக்கும் இன்னொரு நூல் பகவத்கீதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108628

இரண்டு கணவர்கள்

  சீதையும் ராமனும் காட்டில் தங்கியிருக்கும் அகலிகையைப்பார்க்க செல்கிறார்கள். சீதை அரசியாக பொலிவுடன் இருக்கிறாள். ராமனின் நெற்றியில் அனுபவ ரேகை படிந்திருக்கிறது. ராமனும் கௌதமனும் வெளியே செல்ல அகலிகை சீதையிடம் தனியாகப்பேசுகிறாள். கௌதம முனிவரின் மனைவியாக காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த அகலிகை தன் கணவனின் நிழலாக அவனுக்குப் பணிவிடை புரிந்து பிறிதொரு நினைப்பே இல்லாமல் வாழ்ந்தாள். பேரழகியான அவளைக் கண்டு காதல் கொண்டான் இந்திரன். ஒவ்வொரு நாளும் கௌதமர் விடியற்காலையில் எழுந்து கங்கைக்குச் சென்று நீராடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108651

சோர்பா கடிதங்கள் 2

சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை சோர்பா கடிதங்கள் அன்புள்ள ஜெ நலம்தானே? அருணா அக்காவின் சோர்பா எனும் கிரேக்கன் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான விமர்சனக் கட்டுரை. பொதுவாக எனக்கு கீழை தத்துவங்கள் சார்ந்த மேலை நாட்டுப் படைப்புகள் மீது ஒரு விலகல் உண்டு. தோரோ, எமர்சன் போன்ற சில விதி விலக்குகள் தவிர. பல முறை மெத்தப் படித்த என் இந்திய நண்பர்களுக்கும், சில அமெரிக்க நண்பர்களுக்கும் நம் ஆன்மீக, தத்துவப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108701

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-36

பகுதி எட்டு : சுடர்வு யமன் நைமிஷாரண்யக் காட்டின் எல்லையைக் கடந்து சோர்ந்த அடிகளுடன் சென்று தன் ஆலயத்தின் முன் அமர, அங்கு அவரைக் காத்து நின்றிருந்த காலகையான துர்கமை அருகே வந்து வணங்கினாள். யமன் விழிதூக்க “தங்கள் அடிபணிந்து ஒரு செய்தியை அறிவிக்க விழைந்தேன்” என்றாள். சொல் என யமன் கைகாட்டினார். “உபப்பிலாவ்யப் பெருநகரியில் அரண்மனைத் தனியறையில் நான் பாண்டவர்களின் அரசி திரௌபதியை கண்டேன். அவள் ஒரு வைரத்தை உண்டு உயிர்மாய்க்கும் தருணத்தில் அங்கே சென்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108697

செய்திதுறத்தல்

நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள்   பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108786

குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம்

குற்றவாளிகளின் காவல்தெய்வம் குற்றவாளிகளின் காவல் தெய்வம்-கடிதங்கள் அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம். நான் தங்கள் எழுத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்து வருகிறேன். விஷ்ணுபுரம் , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் , இந்திய ஞானம் , இந்தியப் பயணம், அருகர்களின் பாதை, நவீன தமிழிலக்கிய அறிமுகம் , பின் தொடரும் நிழலின் குரல் , உலோகம், இரவு, அனல் காற்று, ஊமைச்செந்நாய், ஈராறு கால்கொண்டு எழும் புரவி, கன்னி நிலம் , அறம் சிறுகதைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108643

சவரக்கத்தி மேல் நடை -கடிதங்கள்

சவரக்கத்திமுனையில் நடப்பது   ஜெ   சவரக்கத்திமுனையில் நடப்பது கட்டுரை படித்தேன். என்னுடைய அனுபவமும் ஏறத்தாழ இதேதான். உங்கள் எழுத்து எனக்குப்பிடிக்கும். ஆனால் அதை எங்கேனும் பேசத்தொடங்கினால் வரும் எதிர்வினைகள் ஒரே மாதிரியானவை   பெரும்பாலானவர்களுக்கு உங்கள் பெயர் மட்டும்தான் தெரியும். ஆனால் தெரிந்ததுபோல காட்டிக்கொள்வார்கள். தெரியுமே இந்த நூலை எழுதியவர் என்று சொல்லிவிட்டு இந்துத்துவா இல்ல, கருணாநிதிய திட்டினார்ல என்று ஏதாவது சொல்வார்கள்.   உங்களுக்கு எதிரான மனநிலை திராவிடக் கட்சி, இடதுசாரிக் கட்சிக்காரர்களிடம் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108618

Older posts «