Daily Archive: March 31, 2018

அசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்  

ஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட கேள்வி : உங்கள் கதைகளிலே எதில் பெண்ணை பற்றி சிறப்பாக எழுதியுள்ளதாக நினைக்கிறீர்கள் ?   பதில் – இனி வேண்டியதில்லை என்ற சிறுகதை.   பிறகு லைப்ரரியில் தேடி இந்த சிறுகதையை வாசித்தேன். எப்படி இந்த கதையை பற்றி யாரும் இதுவரை எழுதவே இல்லை என்று நொந்துக்கொண்டேன். மிக அருமையான கதை. வழக்கமான அசோகமித்திரன் ஸ்டைல் இதிலும் இருக்கிறது. ஒரு கதையுனூடகவே நிகழும் நிகழ்வுகளை சொல்லும் போது பிறிதொன்று மேலெழும்பி நிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107725

கிளம்புதல்,பெண்கள்

    நல்லிடையன் நகர் -1 நல்லிடையன் நகர்-2 * இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1   சார் வணக்கம்   உங்களின்  இணையதளம்  மீண்டும்  இயங்குவதிலும்  ’’இமைக்கணம் ’’  துவங்கியதிலும்  மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக ,  நாள் தவறாமல்  வாசித்தும்  அலுப்போ சலிப்போ  ஏற்படாமல் சிறிய   இடைவெளிக்கே  பித்துப்பிடித்தது போலாகும்   வாசகர்கள்  நாங்கள்.  இடைவெளி  குறித்து  வந்திருக்கும்க டிதங்கள் அனைத்தும் பிரதி எடுத்து பெயர் மட்டும்  மாற்றி எழுதினது  போலிருக்கின்றது.   இப்போது  மீண்டும்  வாசிக்கத்  துவங்கியபின்னர் முன்பைவிட இன்னும்மகிழ்ச்சியாக இருக்கின்றது.   அரியதையும்  மிகப்பிரியமானதையும்   தொலைத்து, வருந்தி, பின்  மீண்டும்  அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107672

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய இக்கட்டுரை விந்தையான சில உணர்வுகளை எழுப்பியது. இன்றில்லை, என்றேனும் இவற்றை விரிவாக எழுதியாகவேண்டும் என நினைத்துக்கொண்டேன். 2000 த்தில் நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும் வாங்கி எல்லா தவணைகளையும் கட்டியபின்  மாதம் 1700 ரூபாய் மட்டுமே கையில்வரும், எனக்கும் அருண்மொழிக்கும் சேர்த்து. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலம். சுவரில் முட்டிக்கொண்ட திகைப்பு. நான் எவரிடமும் பொருளுக்கு நிற்கலாகாதென்பதனாலேயே கஞ்சனாக என்னை மாற்றிக்கொண்டவன். அந்நிலையை கற்பனை செய்திருக்கவில்லை   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107718

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-7

குருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி எழுகை, தெய்வம் தொழுகை, இன்சுவைகொண்ட நல்லுணவு, இசை, நூல்நவில்தல், அணுக்கருடன் சொல்லாடுதல், நோயிலா உடல்பேணல், நல்லுறக்கம். ஒருமுறையேனும் ஒன்றும் குறைவுபடாமையால் ஒவ்வொருநாளும் பிறிதொன்றென்றே நிகழ்ந்தது. அன்றாடத்தின் சலிப்பு அவருள்  அனலை அணைத்து பழகிய செயல்களுக்கு அப்பால் அவருடைய சித்தம் செல்லாதாக்கியது. அன்றாடத்திற்கு அப்பாலுள்ளவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107652