Daily Archive: March 29, 2018

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா

எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால  நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார். நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு  நீடித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107783

நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்

  இம்முறை ராமசாமிகோயில் சிற்பங்களைப் பார்த்துவிட்டு தாராசுரம் செல்லும் வழியில் நாயக்கர்காலச் சிற்பங்களை முன்வைத்து ஓரு விவாதம் எழுந்தது. ராஜமாணிக்கம் ஒரு வழக்கமான கலைஆர்வலரிடம் தமிழகச் சிற்பங்கள் பற்றிப் பேசும்போது ராமசாமிக்கோயில் சிற்பங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவர் உடனே “அய்யய்யோ, அதெல்லாம் சிற்பங்களே இல்லை. நாயக்கர் காலச் சிற்பங்கள்  எல்லாம் பொம்மைகள். பரோக்’ என்றாராம்.   அவர் சிற்பங்களில் ஓரிரு நூல்களினூடாக பழக்கமடைந்து அதைப்பற்றி எழுதுபவர். சிற்பங்கள் குறித்தோ குறித்தோ, பொதுவாக கலைகுறித்தோ பேசுவதற்கு இந்தத் தகுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107583

விழிநீருடன் நிலவு

  நாற்பதாண்டுகளுக்கு முன்பு ஒரு மழைநாளில், ஏதேதோ உணர்வுக்கொந்தளிப்புகளால் துயில் மறந்து கிடக்கும்போது திருவனந்தபுரம் ரேடியோவில் இந்தப்பாடல் ஒலித்தது. விரகத் துயர்நிறைந்த இப்பாடலை நான் ஒருவகையான தாலாட்டாகவே கேட்டேன்.. அதன்பின் எப்போதும் என் உள்ளங்கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆனால் அரிதாகவே இதைக் கேட்பேன்.   நீலாம்பரி ராகம் தாலாட்டுக்குரியது என்று பின்னர் அறிந்தேன்.  இப்பாடலின் வரிகளாலும் இது அணுக்கமாக உள்ளது. என் இளமையின் பகுதியாகத் திகழும் ஜெயச்சந்திரனின் குரலும் ஹர்ஷபாஷ்பம் தூகி  பஞ்சமி வந்நு இந்துமுகீ ! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107810

உலோகம் ஒரு மதிப்பீடு

  அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம், என் கணவர் உங்களின் எழுத்திற்கு தீவிர வாசகர் ,உங்களின் வெண்முரசினை படித்துக்கொண்டிருக்கிறார், நான் இப்பொழுதுதான் விட்ட வாசிப்பினை தொடங்கியிருக்கிறேன், உங்களுடைய உலோகம் படித்துக்கொண்டிருக்கிறேன், என் கணவர் உலோகம் படித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் என் மகளை படிக்கசொல்லியிருந்தார், அவளும் தேடி தேடி படிக்கும் ரகம். அதை படித்த அவள் அவளுக்கு தெரிந்த வகையில் கதை பற்றிய தன் கருத்தை பதிவிட்டிருக்கிறாள், அதனை உங்கள் பார்வைக்காக இங்கு பகிர்ந்துள்ளேன்,   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107654

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-5

ஏழு ஆழங்களுக்கு அடியில் தன் இருண்ட மாளிகையில் இருள்வடிவ அரியணையில் அமர்ந்து அறம்புரந்த மறலியின் முன்னால் வந்து வணங்கி நின்ற ஏவலனாகிய வேளன் பணிந்து “அரசே, தங்கள் ஆணையின்படி திரேதாயுகத்திலிருந்து நைமிஷாரண்யத்தில் காத்துநின்றிருந்தேன். இன்று காலைமுதல் அங்கே இளைய யாதவன் ஒருவன் வந்து குடில்கட்டி குடியிருப்பதைக் கண்டேன். கருமுகில்நிற மேனியன். விளையாட்டுப்பிள்ளையின் விழிகள் கொண்டவன். பீலிசூடிய குழலன். தனித்து தனக்குள் சொல்திரட்டி அங்கிருந்தான்.” “அரசே, அவன் சென்றவழியெங்கும் பின்தொடர்ந்து சென்று நோக்கினேன். அவன் கடந்துசென்றபோது அனைத்து தாமரைகளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107606