Daily Archive: March 28, 2018

அண்ணா ஹசாரே மீண்டும்

அண்ணா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அனேகமாக தமிழ் ஊடகங்கள் அனைத்துமே அவரை புறக்கணித்துவிட்டிருக்கின்றன. ஏனென்றால் அவை இங்கே உருவாக்கும் அரசியல்களப் புனைவில் அப்போராட்டத்திற்கு இடமில்லை. மோடி X மோடி எதிர்ப்பு என்னும் ஒரு வரைவை அவை உருவாக்கி அனைவரையும் அதற்குள்ளாகவே சிந்திக்கவைத்துக்கொண்டிருக்கின்றன   மெய்யான காந்தியராக தன் கோரிக்கையில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறார் அண்ணா ஹசாரே.எல்லா காந்தியப்போராட்டங்களையும்போல இதுவும் இரண்டு முகம் கொண்டது. ஒன்று நேரடியான நடைமுறைக் கோரிக்கை. லோக்பால் அமைப்பை உருவாக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107649

ஐரோப்பாக்கள்

ஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு? ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26932

வெ.ஸ்ரீராம்

இனிய ஜெயம்   மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களுக்கு ஒரு விழா குறித்த செய்தி அறிந்து மகிழ்ந்தேன் . இந்த மாதம் இங்கே கடலூரில் ,கவிஞர் கனிமொழி முன்னெடுக்கும் ஆம்பல் இலக்கியக் கூடுகை வழியே மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம் அவர்களுக்கு ,அவரது மொழிபெயர்ப்புகள் மீது ,ஒரு கூடல்  ஏற்பாடு செய்திருந்தோம் .   சுந்தர ராமாமி தனது ஜே ஜே சில குறிப்புகள் வழியே ,நவீன தமிழ் இலக்கியத்தின் கருத்தியல் மையமமாக உயர்ந்தது இலக்கிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107633

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4

இரண்டு : இயல் கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி ஓடிய பாதையில் இருந்த ஒற்றைப்புள்ளியில் ஒருகணத்தில் கிழக்காகத் திரும்பியது. சத்யயுகத்தில் முதல் சௌனக முனிவர் அதன் கரைக்காட்டில் தவம்செய்கையில் நீர் விளிம்பில் வேள்விசாலையை அமைத்து வேதியரையும் முனிவரையும் அழைத்து அகாலயக்ஞம் என்னும் பெருவேள்வி ஒன்றை ஒருக்கினார். காலத்தை நிறுத்தி அதிலெழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107480