Daily Archive: March 27, 2018

இமையம் என்னும் சொல்

  அன்புள்ள ஜெ,   உங்கள் இமையத்தனிமை கட்டுரையில் இமையம் என்று சொல்லியிருந்தது தவறு, சரியான சொல் இமயம் என்பதுதான், உங்கள் ஆசானுக்குச் சொல் என்று என் அலுவலக நண்பர் சொல்லிக்கொண்டே இருந்தார். நையாண்டியாகவும் இமையம் என்ற சொல்லைவைத்துப் பேசினார்.  வயதானவர், நன்றாகத் தமிழ் தெரிந்தவர். இலக்கணத்திலே ஆர்வம் கொண்டவர். நான் பார்த்தபோது முன்பு பழைய கட்டுரையில் இமயச்சாரல் என்றுதான் பயன்படுத்தியிருந்தீர்கள். இப்போதுதான் இமையம் என எழுதியிருக்கிறீர்கள். எது சரியானது? தவறான சொல்லாட்சி என்றால் திருத்திக்கொள்வீர்களா?   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107512

ஸ்டெர்லைட்

  ஒருமுறை தூத்துக்குடி சென்றிருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை இருக்குமிடம் வழியாகச் செல்லவேண்டியிருந்தது. கூடிப்போனால் இருபதுநிமிடம். என் வாழ்நாளின் மறக்கமுடியாத இருபது நிமிடம். மூச்சடைப்பு, குமட்டல், தலைசுற்றல். அத்தனை நாற்றம். ஆனால் அங்கே மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள்.   ஆலைகள் வேண்டாம் என நாம் சொல்லமுடியாது, அவை இல்லாமல் வாழமுடியாதென்னும் நிலையை நாம் தெரிவுசெய்து அதில் திளைக்கிறோம். அந்த ஆலை வேறெங்காவது, வேறுமக்களை அழிப்பதாக அமையட்டும் என்னும் ஐரோப்பிய,அமெரிக்க மேட்டிமைவாதம் நமக்குக் கட்டுப்படியாகாது. ஆனால் நாம் வாழ்ந்தாகவேண்டும். நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107646

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

  மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,     தங்கள் தெய்வங்கள்,பேய்கள்,தேவர்கள் தொகுப்பை இந்த இணையதள இடைவெளி நாட்களில் படித்தேன்.இடைவெளிவிட்ட அத்தனை நாட்களையும் மிகச் சுலபமாக என்னால் கடந்து செல்ல முடிந்தது.ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்றாட செயல்களுள் முதன்மையானதாக அதுவே  இருந்திருக்கின்றது.எனக்குத் தெரிந்து நான் அதிகமாகவும் ஆழ்ந்தும் படிப்பது தங்கள் எழுத்துக்களைத்தான். மற்ற எழுத்தாளர்களின் சில படைப்புகளையே வாசித்துள்ளேன்.தங்கள் வாசகர்கள் சென்ற வாசிப்பு தொலைவுகளில் எனது, இறுதி இடம்தான் என அறிவேன்.சில நேரங்களில் உங்கள் எழுத்துக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107630

வெண்முரசு ஒலிவடிவம்

அன்புள்ள ஆசிரியருக்கு… தமிழ் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் மகாபாரதக் கதை மேலான விருப்பின் பாலும் உடல் அழிந்த பின்னும் குரல் இருக்கும் என்ற சுயநலத்தின் மேலும் வெண்முரசு நாவலை ஒலிநூலாக்குகிறேன் என்று சொன்னேன். சுழன்றடிக்கும் வாழ்வின் கரங்களுக்கிடையில் பிடித்துக் கொள்ளக் கிடைத்த சில நுனிகளில் இப்பணியும் ஒன்றாகி இருக்கின்றது. வரிசையாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்த வசதிகளைக் கொண்டு, வாய்த்த நேரங்களில், பின்னொலிக்கும் இடைஞ்சல்களோடு படித்துப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மேற்கொள்ளும் எந்தவொரு செயலையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107659

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர் தன் வீணையை மீட்டியபடி அசையாமல் நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டு மெல்ல விசையழிந்து தலை தாழ்த்தி அமைதி கொண்டது எருமை. சினம் தணிந்த யமன் “நாரதரே, நீர் ஏன் இங்கு வந்தீர்? என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க!” என்றார். நாரதர் “உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107441