Daily Archive: March 26, 2018

நல்லிடையன் நகர்-2

  நல்லிடையன் நகர் -1   காலையில் எழுந்ததுமே கும்பகோணம் சென்று அங்கிருந்து தாராசுரம் சென்றுவரலாம் என்று திட்டம். கிருஷ்ணனும் நண்பர்களும் அங்கிருந்து அப்படியே ஈரோடு திரும்ப எண்ணியிருந்தனர். அந்தியூர் மணியும், கோவை தாமரைக்கண்ணனும் பேருந்தில் வந்து கும்பகோணத்தில் இறங்கியிருந்தார்கள். நாங்கள் காரில் கும்பகோணம் சென்றோம். ராமசாமி கோயில் முகப்புச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு தாராசுரம் செல்லலாம் என்பது திட்டம்   ராமசாமிகோயில் முகப்புச் சிற்பங்கள் தமிழ்சிற்பக்கலையின் மிகச்சிறந்த மாதிரிகள். அங்குள்ள தலைக்கோலி சிலை, ராமர்சிலை இரண்டும் அவற்றின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107559

எம்.வி.வியும் கோயாவும்

செதுக்குகலையும் வெறியாட்டும் வணக்கம் திரு ஜெயமோகன்     இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சி. எம் வி வெங்கட்ராம் அவர்களை பற்றி நீங்கள் எழுதியதை படிக்கையில் எனக்கு பிரான்சிஸ்கோ டே கோயா என்ற ஸ்பெயின் ஓவியர் பற்றி ஞாபகம் வந்தது.     பிரான்சிஸ்கோ டே கோயா ரொமாண்டிசிசம் ஓவியங்களை வரைவதிலும் போர்ட்ரைட் ஓவியங்களை வரைவதிலும் புகழ் பெற்றவர். ஸ்பெயினின் முக்கியமான ஓவியர்களின் முதன்மையானவராக கருதப்பட்டவர். நெப்போலியன் ஸ்பெயின் மீது படை எடுத்து வந்தபோது நடந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107508

மகாபாரதம் அரிய உண்மைகள்

இனிய ஜெயம்   தமிழ் சிந்தனையாளர் பேரவை என்றொரு தளம் யூ டியூப் இல் கண்டேன் .அதில் இருந்த ஒரு அதிபயங்கர ஆய்வு  என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது .   நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவர் .   சகுனி யூதன் .   இங்கிருந்தோர் யூத பிராமணர்கள் .   கிருஷ்ணன் தமிழர் .   பாரதப்போர் நிகழ்ந்து கவ்ரவர்கள் புதைக்கப்பட்ட இடம் நம்மூர் ஆதிச்ச நல்லூர் .   இந்த சிந்தனையாளர் எப்படியாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107608

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-2

பன்னீராயிரமாண்டுகாலம் பிரபாவன் விண்முகில்கள் மேல் அலைந்தது. மழையும் வெயிலும் மீளமீள வந்துசென்றன. நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண் என்று பிரபாவன் உணர்ந்தது. எனவே விண்ணில் எதுவும் நிகழ்வதேயில்லை என்று தெளிந்தது. ஒன்றுபோல் மறுநாள் அமையும் அப்பெருவிரிவின் அலையற்ற காலத்தை அதன் சித்தம் உணர்ந்தது. தன் சிறகுகளால் அக்காலத் தேங்கலை அசைக்கமுடியும் என்று கண்டுகொண்டது. சிறகசைவை எண்ணி காலத்தை கணக்கிடத் தொடங்கியதும் தயங்கியபடி பிரிவின்மையிலிருந்து முக்காலம் சொட்டி வடிந்து அதை வந்தடைந்தது. அதன் ஊசலில் முடிவிலாது ஆடியது பிரபாவன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107438