Daily Archive: March 22, 2018

செதுக்குகலையும் வெறியாட்டும்

மறைந்த மணிக்கொடிக் காலகட்ட எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம்  என் கதைகள் இரண்டில் கதாபாத்திரமாக வந்திருக்கிறார்.அவரை நான் முதன்முதலில் சந்தித்தது 1992ன் தொடக்க த்தில். நான் அருண்மொழியைத் திருமணம் செய்து சில மாதங்களே ஆகியிருந்தன. அருண்மொழியின் சித்தப்பா கலியமூர்த்தி கும்பகோணத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் எம்.வி.வெங்கட்ராமுக்கு அணுக்கத்தொண்டர் போல . அவர்தான் “வாங்க மாப்பிளே, அவரு மணிக்கொடி எழுத்தாளர். பாத்திட்டுவருவோம்” என என்னை அழைத்தார். எம்.வி.வெங்கட்ராம்  மணிக்கொடி எழுத்தாளர்களில் அன்று எஞ்சியிருந்த மூவரில் ஒருவர்.   சிறிய பழங்காலவீடு. நீளமாக உள்ளே சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106871

கேரளக் காலனி

கேரளத்தின் காலனி பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,   வணக்கம்.   தங்களின் ‘கேரளத்தின் காலனி‘ கட்டுரை படித்தேன். மலையாளிகள் என்றாலே காடுகளை போற்றுவர்கள்,நன்கு பேணுபவர்கள்,அதனாலேதான் கேரளா முழுவதும் மரங்கள் அடர்ந்து எங்கும் பசுமையாகவே காட்சியளிக்கிறது என்ற தவறான மனச்சித்திரத்தை இதுவரை கொண்டிருந்தேன்.மேலும் அவர்களில் பெரும்பாலோர்கள் அறிவுஜீவிகள்,அடிப்படை மனித நாகரீகமுடையவர்கள்,எளியவர்களின் நலத்தில் மிகுந்த அக்கறை கொள்பவர்கள் என்றும் நினைத்திருந்தேன்!.இந்த நீண்ட கட்டுரை அதை பொய்யாக்கி என் மனதை வெறுமை அடையச்செய்துவிட்டது.   அன்புடன்,   அ .சேஷகிரி.   அன்புள்ள ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107358

அஷ்டவக்ரகீதை

அன்பு ஜெமோ, நலம்தானே? வரும் 31 மார்ச் அன்று அஷ்டாவக்ர கீதையின் இசைவடிவ வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். அஷ்டாவக்ர கீதாவின் முதல் ‘தன்னறிதல்’அத்தியாயத்துக்கு எனக்குத்தெரிந்து இசை வடிவம் ஏதும் இல்லை. இது முதல் முயற்சி என்று நினைக்கிறேன். அகாபெல்லா இசையில் உலகப்புகழ் பெற்ற லிக்விட் 5th ஸ்டூடியோ இசைக்கலப்பு செய்துள்ளனர். யூடியூபில் வீடியோவுடன் வெளியிட்டிருக்கிறோம். மாரிஸ்வில்லில் உள்ள 519 சர்ச் ஆடிட்டோரியத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தத்துவத்தில் உயராய்வு செய்யும் தம்பதியர் பேரா. ழாக் பசான், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107343

பயணம் கடிதங்கள்

  இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   ஒரு இடைவெளிக்குப் பிறகு எனது மின்னஞ்சலில் தங்களது வலைத்தளத்தின் கடிதத்தை பார்த்ததில் மகிழ்ச்சி. தங்களின்  இமயத்தனிமை   படிக்கிறேன். தங்களின் வெளிப்படையான உண்மையான எழுத்துதான் , உங்களிடம் எங்களை அழைத்து வருகிறது.   உங்களுக்கு நான் என்ன சொல்ல இருக்கிறது. சீரியஸான கட்டுரையின் வாசகன் என்றாலும், தமாஷாக ஒரு குறிப்பு. என்னைப்போலவே உங்களுக்கும் செல்ஃ பி எடுக்கும்பொழுது சிரிக்கத் தெரியவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107432