Daily Archive: March 21, 2018

மன்னார்குடி

  இன்று மாலை நானும் அருண்மொழியும் கிளம்பி காலை தஞ்சை சென்று  அங்கிருந்து மன்னார்குடி  செல்கிறோம்.நாளையும் மறுநாளும் அங்கிருப்போம். நண்பர் டோக்கியோ செந்தில் ஊருக்கு வந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தின் வெண்ணைத்தாழி விழாவுக்கு வருவது அவர் வழக்கம். நண்பர்கள் அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு.ஒவ்வொரு ஆண்டும் என்னை அழைப்பார். இம்முறை சென்று வரலாம் என நினைத்தேன். வெண்ணைத்தாழி விழா, மறுநாள் தேர்விழா கண்டு திரும்புகிறோம். ஈரோடு,சென்னை,திருச்சி நண்பர்கள் வருகிறார்கள். ஒரு விழாமனநிலை உடனடியாகத் தேவைப்படுகிறது.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/107484/

வெண்முரசு–நூல் பதினேழு- இமைக்கணம்

வெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தது இமைக்கணம். நைமிஷாரண்யம் என்றால் நிமிஷ+ ஆரண்யம். விழியிமைக்கும் கணமே காடென்றானது. இது ஒரு கணத்தின் கதை.   வரும் மார்ச் 25 முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன்.   வெண்முரசு விவாதங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/107330/

இமையத் தனிமை – 3

  இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1 தர்மசாலாவில் சிலநாட்கள் தங்கலாமென்றுதான் நினைத்திருந்தேன்.. ஆனால் அங்கே பலவகையிலும் பதிவுசெய்யப்பட்டிருந்த திபெத் விடுதலைப்போராட்டச் செய்திகள் என் உள்ளத்தை உலுக்கின. நெடுங்காலம் மலையுச்சியின் தனித்த நிலமாக, தனிப்பண்பாட்டுடன், தனிமொழியுடன் திகழ்ந்த திபெத் ஆங்கிலேய ஆட்சியிலும் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டது. அதை சீனா தனக்குச் சொந்தம் கொண்டாடியது. இந்தியா திபெத் ஸ்விட்சர்லாந்து போல ஒரு பொது நிலமாக, இன்று பூட்டான் இருப்பதுபோல ராணுவப் பாதுகாப்புக்கு உட்பட்ட தனிநாடாக, திகழலாம் என கருதியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107291/

பீட்டரும் காடும்

சிம்லாவில் இருந்து ஊருக்குத்திரும்பும்போதுதான் குரங்கணி விபத்து குறித்த செய்திகளை வாசித்தேன். அதை ஒட்டிய விவாதங்களையும். அதில் மிக எரிச்சலூட்டியது முன்னாள் காட்டிலாகா அதிகாரிகளின் ‘பையத்தூக்கிட்டு வந்திடறானுங்க….’ பாணியில் அமைந்த பேட்டிகள். காடென்றால் என்னவென்றே தெரியாயதவர்களின் நல்லுபதேசங்கள். உண்மையில் காட்டிலாகாவின் பொறுப்பின்மை, ஊழல் அனைத்தையும் மறைப்பதற்காக முன்வைக்கப்படும் பிலாக்காணங்கள் இவை. தமிழகக் காட்டிலாகா சென்ற ஐம்பதாண்டுகளாக தமிழகக் காடுகள் மொட்டையாக்கப்பட்டதற்கான கூட்டுப்பொறுப்பை ஏற்கவேண்டும். அவர்கள் முன்பு காட்டுகொள்ளையர்களை தடுக்கவில்லை. பலசமயம் உடந்தையாகவும் இருந்தார்கள். தமிழகக் காட்டுக்கொள்ளை ஓரளவேனும் நின்றது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107340/

பயணம் கடிதங்கள்

இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1   அன்புள்ள ஜெ,   மீண்டும் நீங்கள் பயணம் செல்வது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.உங்கள் இமயத்தனிமை புறப்பாடு 3 என எனக்குப் பட்டது. மூன்றும் கலந்து கால ஒழுக்கின்றி அனைத்தும் கலந்தே என்னால் உணர முடிந்தது. குளிர் என்றவுடன் இரண்டாம் புறப்பாடு (?) அதில் இரயிலில் ராதே கிருஷ்ணா பக்தர்கள் நடுவில் குளிர் தாங்காது நின்ற அந்த காட்சி வந்து சென்றது. புறப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள். ஆழ்ந்த இனிமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107421/

இரவு பற்றி…

. இரவுகளின் தனிமையை கொஞ்ச காலம் ரசிக்கலாம், அதன் ஆழமான அமைதியை கொஞ்ச நேரம் அனுபவிக்கலாம், அச்சமோ அர்த்தமற்ற உணர்வோ விவரிக்க முடியாத அந்த சின்னஞ்சிறு பயங்களை கொஞ்சம் உணரலாம், யாருமற்ற வீதிகளில் சற்றே தனியாக நடந்து பார்க்கலாம், நாம் உறங்கும் வேளையில் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவ்வப்போது உளவு பார்க்கலாம்.. இப்படி இரவு குறித்த எந்த செயலானாலும் அது அவ்வப்போது என்று இருக்கிற வரை ஆனந்தம் தான் ஆனால் அதுவே வாழ்க்கை என்றாகிவிட்டால் எப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107319/