Daily Archive: March 19, 2018

இமையத் தனிமை -1

  மார்ச் மூன்றாம்தேதி சென்னைக்குச் செல்லும்போது அங்கிருந்து எங்காவது செல்லவேண்டும் என்னும் எண்ணம் இருக்கவில்லை. ஒருநாளில் திரும்பி வரவேண்டும் என்னும் கணிப்புதான். வழக்கமாக ஒருநாளுக்கு என்றால் இரண்டுநாளுக்கான ஆடைகள் எடுத்துக்கொள்வது என் இயல்பு., நீண்டகால அனுபவத்தால் அமைந்த நடைமுறையறிவு. ஆனால் ரயில் கிளம்பியபோது எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றியது. ரயிலில் அமர்ந்திருப்பதே ஒரு பெரிய சுமையுடன் இருப்பதுபோல திணறவைத்தது. நிர்மால்யாவைக் கூப்பிட்டு ஊட்டிக்கு வருகிறேன், குருகுலத்தில் சிலநாட்கள் தங்கவேண்டும் என்று சொன்னேன். சென்னை சென்றபின் மனம் மாறிவிட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107262

குற்றமும் தண்டனையும் பற்றி…

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு, கடந்த இருபத்தைந்து நாட்களாக ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள் எழுதிய “குற்றமும் தண்டனையும்” என்ற மிகப் பெரிய நாவலை வாசித்து, நேற்று முடித்தேன். அது எனக்கு மிகவும் உயர்தரமான மேம்பட்ட நாவலாகத் தெரிகிறது. எங்கேயும் எந்தவிதத்திலும் அது வாசிப்பவர்களை உணர்ச்சிவசப்படவைக்க முயலவில்லை. தன்னிச்சையாகத்தான் நான் உணர்ச்சிவசப்பட்டு அழநேர்ந்தது. அதுவும் நிறைய நேரம் நீடிக்கவில்லை. உடனடியாக தீவிரத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. அவசரம் அவசரமாக கண்களைத் துடைத்துவிட்டு வேகவேகமாக அவர்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107310

நம்பியின் சொல்

  அலை அலைமேல் அலை அலைகிறது அலை கட்டுமரங்கள் மேல் மீனவர்கள் கடல் இசைக்கும் ராகம் சூரியோதயம் சந்திரோதயம் தாய்தயவில் தெற்குக் கடைசியில். இவன் கனவில் அடிக்கடி ஒயில் பெண்கள் நிறைய தரம் புதையல் அபூர்வமாய் மழை ஒவ்வொரு நேரம் பௌர்ணமி நிலா சிலசமயம் மலையருவி எப்போதாவது இராட்ஷஸன் நேற்று நீலவானம் முந்தா நாள் நீ ஒரே ஒரு தடவை கடவுள்   சாயைகள் வெற்றி பெற்றவனும் புலம்புகின்றான் தனிமையில் ஏன் சும்மாவா வரும் வெற்றி சுமந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107374

ஏழாம் உலகம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ நான் அதிகம் கவிதைகளையே நேசிக்கவும் வாசிக்கவும் செய்தேன். எனது நண்பர் ஒருவர் உங்கள் இணையதள முகவரியை அனுப்பிய போது உங்கள் புத்தகங்களுக்கான பின்னூட்டங்களை வாசித்தேன்.ஏழாம் உலகம் மிக வேறுபட்ட ஒரு புத்தமாக இருக்க வேண்டுமென்று தோன்றிற்று. இலங்கையில் புத்தகசாலைகளிலே தேடிப்பார்த்தேன் அப்போது கிடைக்கவில்லை, ஒருவாறு புத்தகக்கண்காட்சியில் வாங்கி விட்டேன்.உங்கள் படைப்புகளில் நான் வாங்கிய முதல் புத்தகம் இதுதான். வாங்கிய புத்தகத்தை வாசிக்க சரியான நேரம் கிடைக்கவில்லை, இடையில் ஒருமுறை வாசித்தேன், அந்த மொழி வழக்கும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107307