Daily Archive: March 2, 2018

சென்னையில் பேசுகிறேன்…

  சென்னையில்  வரும் 4- 3-2017 அன்று பேசுகிறேன். கவிஞர் வெயில் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் இடம் :   டிஸ்கவரி புக்பேலஸ் நாள்        4- 3- 2018 நேரம்     காலை 1030 இளங்கோ கிருஷ்ணன், மண்குதிரை, சச்சின்,பாரதி கனகராஜ் ஆகியோரும் பேசுகிறார்கள். இந்த தொகுதியைப்பற்றிப் பேசுவதற்கு ஒப்புக்கொண்டதற்கு முதன்மைக்காரணமே இதன் தலைப்புதான். ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ பல வகைகளில் நானே எழுதிய அழகிய படிமம் அது. இவ்விழாவுக்காகவே இங்கிருந்து கிளம்பி சென்னை வந்து திரும்புகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107155/

இலக்கியம் என்பது என்ன?- மீண்டும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,     நான் MBA படித்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம்  இருந்தாலும் ,  பொன்னியின்  செல்வன் போன்ற  சில வரலாற்று  புதினங்கள்  மற்றும்  சில  ஆங்கில புத்தகங்களை  மட்டுமே படித்திருக்கிறேன். சமீபத்தில்  உங்கள் “காடு”  நாவலை படித்தேன்,  மிகவும்   பிடித்து விட்டது.  உங்கள்  வாசகனாக  மாறிவிட்டேன். காலம் மிக  தாமதமாக  உங்களை  எனக்கு  அறிமுகபடுத்தியுள்ளது வருத்தமளிக்கிறது. உங்களை  நேரில் சந்திக்க  வேண்டும் என்பதற்காகவே  “விஷ்ணுபுரம்”   இலக்கிய விழாவிற்கு  வந்திருந்தேன்.  உங்களை மிக அருகில்  காண நேர்ந்தும்  தயக்கத்தினால்  பேசாமல்சிறு புன்னகையுடன்   நிறுத்திக்கொண்டேன் .     சில காலமாக  “இலக்கியம்”   என்றால் என்ன? என்ற கேள்வி  மனதில் இருந்து வருகிறது. இந்த கேள்வியை  google செய்தேன் ஆனால் கிடைத்த  பதில்கள்  என்னை  சமாதனப்படுத்தவில்லை.  பெரும்பாலான  பதில்கள்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106655/

சூல் -ஒரு கடிதம்

  அன்பின் ஜெ..   சோ.தர்மனின் சூல் படித்தேன். இன்னும் 2-3 முறை படிக்க வேண்டும். உங்கள் உரையில் குறிப்பிட்ட து போல்,  இயல்பு வாத அழகியலும், நாட்டார் கூறுகளும் இணைந்த ஒரு பார்வை. இன்னுமொரு கோணம். ஆனால், 2 நோக்குகளில், இந்தப் படைப்பு மிகவும் நிரடுகிறது.. பழங்காலப் பொற்கால கம்மாக் கரை   x இன்றைய நவீனத்துவத்தால் சீரழிந்த கிராம்ம்  – இவ்வளவு எளிமையா உலகம்?  அன்றைய காலத்தின் எதிர்மறைகள் எதுவுமே தென்பட வில்லை. ஆனால் இன்றைய உலகின் எதிர்மறைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன.  இந்தக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107111/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76

பகுதி பத்து : பெருங்கொடை – 15 இளைய யாதவர் தணிந்த குரலில் “கௌதம முனிவரின் நற்சொற்களைக் கேட்கும் பேறு பெற்றேன். இந்நாளும் இங்குள்ள ஒவ்வொரு எண்ணங்களும் என்றும் என் நெஞ்சில் நிலைகொள்வதாக!” என்றார். “ஆனால் தங்கள் சொற்களை எதிர்கொண்டாகவேண்டிய நிலையில் உள்ளேன். நான் சாந்தீபனி குருநிலையின் வழித்தோன்றல் என்பதனால். என் கொள்கை தங்களுடையதை மறுக்கிறது என்பதனால். அனைத்தையும்விட மேலாக தாங்கள் தங்கள் சொற்களை இங்கே வகுத்துரைத்தமையால். அவை கருத்துக்கள் என உருக்கொண்டமையாலேயே தாங்களே கூறியபடி மறுப்பையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107142/