Monthly Archive: March 2018

அசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்  

ஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட கேள்வி : உங்கள் கதைகளிலே எதில் பெண்ணை பற்றி சிறப்பாக எழுதியுள்ளதாக நினைக்கிறீர்கள் ?   பதில் – இனி வேண்டியதில்லை என்ற சிறுகதை.   பிறகு லைப்ரரியில் தேடி இந்த சிறுகதையை வாசித்தேன். எப்படி இந்த கதையை பற்றி யாரும் இதுவரை எழுதவே இல்லை என்று நொந்துக்கொண்டேன். மிக அருமையான கதை. வழக்கமான அசோகமித்திரன் ஸ்டைல் இதிலும் இருக்கிறது. ஒரு கதையுனூடகவே நிகழும் நிகழ்வுகளை சொல்லும் போது பிறிதொன்று மேலெழும்பி நிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107725

கிளம்புதல்,பெண்கள்

    நல்லிடையன் நகர் -1 நல்லிடையன் நகர்-2 * இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1   சார் வணக்கம்   உங்களின்  இணையதளம்  மீண்டும்  இயங்குவதிலும்  ’’இமைக்கணம் ’’  துவங்கியதிலும்  மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக ,  நாள் தவறாமல்  வாசித்தும்  அலுப்போ சலிப்போ  ஏற்படாமல் சிறிய   இடைவெளிக்கே  பித்துப்பிடித்தது போலாகும்   வாசகர்கள்  நாங்கள்.  இடைவெளி  குறித்து  வந்திருக்கும்க டிதங்கள் அனைத்தும் பிரதி எடுத்து பெயர் மட்டும்  மாற்றி எழுதினது  போலிருக்கின்றது.   இப்போது  மீண்டும்  வாசிக்கத்  துவங்கியபின்னர் முன்பைவிட இன்னும்மகிழ்ச்சியாக இருக்கின்றது.   அரியதையும்  மிகப்பிரியமானதையும்   தொலைத்து, வருந்தி, பின்  மீண்டும்  அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107672

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள் லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய இக்கட்டுரை விந்தையான சில உணர்வுகளை எழுப்பியது. இன்றில்லை, என்றேனும் இவற்றை விரிவாக எழுதியாகவேண்டும் என நினைத்துக்கொண்டேன். 2000 த்தில் நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும் வாங்கி எல்லா தவணைகளையும் கட்டியபின்  மாதம் 1700 ரூபாய் மட்டுமே கையில்வரும், எனக்கும் அருண்மொழிக்கும் சேர்த்து. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலம். சுவரில் முட்டிக்கொண்ட திகைப்பு. நான் எவரிடமும் பொருளுக்கு நிற்கலாகாதென்பதனாலேயே கஞ்சனாக என்னை மாற்றிக்கொண்டவன். அந்நிலையை கற்பனை செய்திருக்கவில்லை   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107718

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-7

குருகுலத்து வசுஷேணர் நூறாண்டு வாழ்ந்தார். முதுமையில் மைந்தரும் பெயர்மைந்தரும் சூழ அரண்மனையில் அமைந்த வசுஷேணர் நெடுநாட்கள் புதிதென எதுவும் இயற்றாமையால் உடலும் உள்ளமும் ஓய்ந்தவராக இருந்தார். ஒவ்வொருநாளும் மாறாமல் அன்றாடத்தையே ஆற்றினார். முதற்புலரி எழுகை, தெய்வம் தொழுகை, இன்சுவைகொண்ட நல்லுணவு, இசை, நூல்நவில்தல், அணுக்கருடன் சொல்லாடுதல், நோயிலா உடல்பேணல், நல்லுறக்கம். ஒருமுறையேனும் ஒன்றும் குறைவுபடாமையால் ஒவ்வொருநாளும் பிறிதொன்றென்றே நிகழ்ந்தது. அன்றாடத்தின் சலிப்பு அவருள்  அனலை அணைத்து பழகிய செயல்களுக்கு அப்பால் அவருடைய சித்தம் செல்லாதாக்கியது. அன்றாடத்திற்கு அப்பாலுள்ளவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107652

அஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்

  நண்பர் நிர்மால்யா இக்கடிதத்தை அனுப்பியிருந்தார்.    ஊட்டி 29 03 2018 அன்புள்ள  ஜெயமோகனுக்கு,  வணக்கம். கடந்த  16அம்  தேதி  மறைந்த   மலையாள  எழுத்தாளர்  எம்.சுகுமாரன்  அவர்களைப் பற்றிய  குறிப்பு   தங்கள்  தளத்தில்  இடம்  பெறுமென்று   எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றத்தை  உணர்கிறேன். எழுத்திலும்  தனிப்பட்ட  வாழ்க்கையிலும்  வெளிப்படுத்திய  அரசியல்  உணர்வும் நேர்மையும்  நவீன  மலையாள  இலக்கியத்தில்   தனித்தன்மை  வாய்ந்த  குரலாக சுகுமாரனை  அடையாளம்  காட்டின.     அவர்  அரசியல்  சார்ந்த  நவீனத்துவத்திற்கு அடித்தளமிட்ட  இலக்கியவாதி.  அரசியல்  நிலைபாட்டைக்  காரணம்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107832

இணைப்புகளின் வலைப்பாதை

  நல்லிடையன் நகர்-2 நல்லிடையன் நகர் -1 அன்புள்ள ஜெ , நல்லிடையன் நகரில் ஸ்ரீராஜகோபாலனை பற்றி எழுதியிருந்தீர்கள். இந்தக்கோயில் சாக்தத்துடன் இணைத்து சொல்லப்படுகிறதே, ஸ்ரீவித்யா  ராஜகோபாலன் என்று சொல்கிறார்கள். சாக்தம் வைணவத்துடன் இணைத்து சொல்லப்படுவது  எவ்வாறு.  சில  இடங்களில்  சம்மோஹன  கிருஷ்ணன் என்று சொல்கிறார்கள், இவையெல்லாம் பிற்கால இணைப்புகளா? வைணவ தத்துவங்கள் இதையெல்லாம் அங்கீகரிக்கிறதா? தாமரைக்கண்ணன், பாண்டிச்சேரி அன்புள்ள தாமரைக் கண்ணன்,   வரலாற்றுரீதியாக என் புரிதல் இது. ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்துமரபின் உட்பிரிவுகளான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107677

ஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி

  ஸ்டெர்லைட் அன்புள்ள ஜெ, நலம் விழைகிறேன். நான் வேதாந்தா குழுமத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் Sterlite நிறுவனம் பற்றி எனது கருத்து. பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. வேதாந்த நிறுவனம் சுற்றுப்புற சூழலை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்பது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்போது அந்த நிறுவனம் கொஞ்சம் திருந்திவருகிறது. இப்போது கடைபிடிக்கப்படும் சுற்றுசூழல் பாதுகாப்பு விதிமுறைகளை எளிதில் மீறி விடமுடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். NEERI போன்ற அமைப்புகள் காற்று மாசுபாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107764

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-6

இளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா?” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய யாதவர் பேசாமல் நின்றார். அருகணையாமல் ஏதும் சொல்லாமல் கர்ணனும் நின்றான். நெடுநேரம் கழித்து கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவ்வோசை மிக உரக்க என ஒலித்தது. “உள்ளே வருக, அங்கரே” என்றார் இளைய யாதவர். அவன் சிலகணங்கள் தயங்கியபின் மீண்டும் குடில்வாயில் வழியாக வெளியே சரிந்திருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107644

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா

எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால  நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார். நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு  நீடித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107783

நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்

  இம்முறை ராமசாமிகோயில் சிற்பங்களைப் பார்த்துவிட்டு தாராசுரம் செல்லும் வழியில் நாயக்கர்காலச் சிற்பங்களை முன்வைத்து ஓரு விவாதம் எழுந்தது. ராஜமாணிக்கம் ஒரு வழக்கமான கலைஆர்வலரிடம் தமிழகச் சிற்பங்கள் பற்றிப் பேசும்போது ராமசாமிக்கோயில் சிற்பங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவர் உடனே “அய்யய்யோ, அதெல்லாம் சிற்பங்களே இல்லை. நாயக்கர் காலச் சிற்பங்கள்  எல்லாம் பொம்மைகள். பரோக்’ என்றாராம்.   அவர் சிற்பங்களில் ஓரிரு நூல்களினூடாக பழக்கமடைந்து அதைப்பற்றி எழுதுபவர். சிற்பங்கள் குறித்தோ குறித்தோ, பொதுவாக கலைகுறித்தோ பேசுவதற்கு இந்தத் தகுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107583

Older posts «