Monthly Archive: February 2018

படைப்பூக்கம்

  அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,   நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   ஒரு முறை உங்கள் சந்திப்பில், இன்றைய சூழலில்  படைப்பு மனம் என்பது, கண்ணாடிக் குடுவையில் திறந்து வைத்திருக்கும், புகை உமிழும் அடர்த்தியான நைட்ரஜன் அமிலம்போன்றது. வெளியில் உள்ள‍ அனைத்தும், அந்த கொதிநிலையையை  உறிஞ்சி நீர்த்துப்போக்கும் வேலையை  மட்டும்  செய்கின்றன என்றிருந்தீர்கள்.     இலக்கியம்  என்னும் மாபெரும் சொற்களனில், ஆரம்ப நிலை  பங்கேற்பாளனாக,   முழு அர்பணிப்புடன், அண்மைக்கால பயன் எதையும்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106276

கலையில் மடிதல்- கடிதங்கள்

  கலையில் மடிதல் அன்பு ஜெயமோகன்,   ‘ஓட்டன் துள்ளல்’ நடனக் கலைஞர் கலாமண்டலம் கீதானந்தன் அவர்களின் மறைவையொட்டி நீங்கள் எழுதியிருந்த “கலையில் மடிதல்” பதிவை வாசித்தேன். இந்த வரிகளை வாசித்துவிட்டு, நீங்கள் பகிர்ந்திருந்த காணொளியையும் பார்த்தேன்.   It gave me Goosebumps!   “… நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்கிறார். உயிரிழக்கக்கூடும் என்று தோன்றியிருக்கலாம். ஆகவே பாதி ஆட்டத்தில் திரும்பி ஆட்டத்தை முடிக்கும் முகமாக பாடகரை வணங்கியபடி சரிந்து விழுந்துவிட்டார்.   அர்ப்பணிப்பு அந்தச் சிறிய செயலில்தான் வெளிப்படுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106982

கலை -கடிதங்கள் 2

கலைகளின் மறுமலர்ச்சி ஆசிரியருக்கு,   வணக்கம்.  நலமா?  சீனிவாசன் நடராஜன் அவர்களது புத்தக வெளீட்டு விழாவில் நீங்கள் பேசிய உரையை பார்த்தேன். மிக சிறப்பான உரை.   உங்களது வருகையின் போது உங்களுடன் ஓவிய கண்காட்சிக்கு சென்ற நியாபகம் வந்தது.   அருமையான தருணம். துரதிருஷ்டவசமாக  மனைவி எனக்கு பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் வேலையை கொடுத்து உங்களுடன் முழு நேரம் செலவிட முடியாமல் போனது. ஓவிய ரசிகையும், உங்கள் வாசகியுமான அவருக்கு மிக சிறப்பான வாய்ப்பு கிடைத்தது.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106964

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71

பகுதி பத்து : பெருங்கொடை – 10 ஊட்டறைக்குள் நுழைவதுவரை அங்கே எவரெல்லாம் வரப்போகிறார்கள் என அவள் அறிந்திருக்கவில்லை. அவளை சம்புகை வரவேற்று மேலே கொண்டுசென்றபோது வேறுவேறு எண்ணங்களில் அலைபாய்ந்துகொண்டிருந்தாள். பானுமதியை பார்த்ததும்தான் அங்கே விருந்துக்கு வந்திருப்பதை அவள் அகம் உணர்ந்தது. “என் விருந்தறைக்கு வந்து என்னையும் அஸ்தினபுரியையும் மதிப்புறச் செய்துவிட்டீர்கள், அங்கநாட்டரசி. வருக!” என முகமன் உரைத்து பானுமதி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கே புண்டரநாட்டரசி கார்த்திகையும் வங்கநாட்டரசி சுதையும் அமர்ந்திருந்தனர். முகமன் உரைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107033

காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம்

அன்புள்ள ஜெ, காரைக்குடி  புத்தக கண்காட்சியில் மூன்றாவது ஆண்டாக ஒரு அரங்கு எடுத்து புத்தகங்களை விற்பனை செய்தேன். நவீன இலக்கிய வாசிப்பும் அறிமுகமும் உள்ளவர்கள் காரைக்குடியில் எத்தனை பேர் உள்ளார்கள் என அறிந்து கொள்வதும் ஒரு நோக்கம் தான்.நவீன இலக்கியத்திற்கான வாசக பரப்பு அமைந்தால் தானே அங்கிருந்து எழுத்தாளர்கள் எழ முடியும். மரபிலக்கியம் வேரூன்றிய அளவுக்கு நவீன இலக்கியம் இங்கு வேர்கொள்ளவில்லை. இந்த சிந்தனைகளின் தொடர்ச்சியாக இப்பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து சிறிய கூடுகையை ஏற்பாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107058

திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   இத்தலைப்பில் எழுதியுள்ள தங்களது இரண்டு கட்டுரைகளையும் படித்தவுடன் இக்கடித்தை எழுதுகிறேன்.     திராவிட இயக்கத்தின் பங்களிப்பை மதிப்பிட்டும் அதேசமயத்தில் ஒரு வெற்று பரப்பியமாக அது தமிழ் சமூக பண்பாட்டு தளத்தின் பின்னடைவிற்கு ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை கறாராக நிறுவியுள்ளீர்கள்.   தங்கள் வாசகனாக பெருமிதம் கொள்கிறேன் .   இப்போதுள்ள தேக்க நிலைகளிலிருந்து மீள்வதற்கான  இயக்கங்களை சமூகம் உருவாக்கிக்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?  இதுபற்றி தங்கள் சிந்தனை என்ன என்பதை அறிய விழைகிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106568

தை அறுவடை

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம். 2018 உற்சாகமான தொடக்கம். பழனி பாதயாத்திரை, முதல் அறுவடை மற்றும் பணியிலும் மாற்றம் இப்படியே பயணிக்கிறது.   நெல் மார்கழிக்கு பின் தண்ணீர் கட்ட வழியின்றி வறண்டு போனது. மாட்டிற்கு அறுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறோம். உளுந்து விளையவில்லை, அவ்வப்போது தண்டபானி அண்ணணிடம் படங்கள் அனுப்பி அறிவுரைகள் பெற்று வந்தோம் ஒரு முறை இதற்கு மேல் பலனில்லை மடக்கி உழுதுவிடுங்கள் பின் கூலிக்குக்கூட ஆகாது என்றார். சரி என்று ஏற்பாடுகள் செய்தோம் எப்பொழுதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106967

காடன் விளி- வாசிப்பு

  காடன்விளி [சிறுகதை] அன்புள்ள எழுத்தாளர் ஜெமோ அவர்களுக்கு,     உங்கள் “காடன்விளி” சிறுகதை வாசித்தேன்.     காடன்  எல்லாவற்றையும்  பார்க்கிறது. ஒரு சரிக்கு  ஒரு தவறை  கழித்துக் கொள்கிறது.   தவறு அதிகமானால்,  கிராமம் அழியும்.  ஏழாவது முறையாக  அழிந்தால்   மீட்சி இல்லை.  ஆக, ஒரு  அழிவுக்கு பின் மீண்டும்  அது  புனரமைக்கப் பட்டிருக்கிறது.   இறுதியில்  அந்தபுணரமைப்புக்கும்  ஒரு  எல்லை இருக்கிறது என்பது  கதையில் விதியாக பாவிக்கப்படுகிறது.     “காடன்” என்பது சரி, தவறு என்கிற இருமையை  பிரிக்கவென  உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது.  ஆனால் என்ன  நடந்தது  என்று எதுவும்காட்சிகள்  இல்லை. ஆக, சரி , தவறை  தத்துவார்த்த ரீதியில் சிறுகதை  பாவிப்பதாக  கொள்ளலாம்.   காடன் எருமை தோற்றம். எ ருமை எமனின் வாகனம்.  அந்த நள்ளிரவில்,   அவன் எருமையின்  முயக்கத்தை பார்க்கிறான்.  யார் மீது  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106931

கனேரி குகைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   ஒரு  முறை சிதறாலுக்கு சென்று வந்து, அந்த பயண அனுபவங்களை ஒரு கடிதமாக உங்களுக்கு எழுதினேன். அதற்கு தங்களின் பதிலில் ‘பயண விதிமுறைகள் ‘ என,  பயணம் எவ்வாறு முன் தயாரிப்புகளுடன் செல்ல வேண்டும் என அறிவுபூர்வமாக விளக்கியிருந்தீர்கள் .  இம் முறை எனக்கு 8 நாட்கள் மும்பையில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது .  அதில் தலையாய நோக்கம், மும்பைக்கு அருகில் உள்ள போரிவெளி என்னும் நகரில் உள்ள ‘கானேரி குகைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106748

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70

பகுதி பத்து : பெருங்கொடை – 9 களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள் சுழன்று சென்றிருந்தது. பித்தளைத்தாழ் எவரோ வந்துசென்றதன் தடயம் என அசைந்துகொண்டிருந்தது. சொல்லி முடித்த உதடுபோல மெல்ல அமைந்தது சாளரத்திரை. அவள் பெருமூச்சுடன் எழுந்து சென்று உப்பரிகையை அடைந்து இருண்ட தோட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். இருளுக்குள் இலைகள் அசைவிழந்திருந்தன. பின்னர் மீண்டுமொரு காற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107021

Older posts «

» Newer posts