Daily Archive: February 28, 2018

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’

  ஜன்னல் இதழில் தொடராக வெளிவந்த   ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ இதுவரை நூல்வடிவம் பெறவில்லை. இணையத்திலும் வெளியாகவில்லை. அருண்மொழி அவற்றைத் தொகுத்து மின்னூலாக ஆக்கியிருக்கிறாள். இணைப்பு கீழே   ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’     நூல் முன்னுரை   இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107106

எழுத்தாளனின் ரயிலடி

ஜெ, இந்தக்கடிதம் உங்கள் பார்வைக்கு, இந்த ரயிலடி விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன? விமலாதித்த மாமல்லன் மின்நூல்களுக்கான உரிமையை ஆசிரியர் விட்டுக்கொடுக்கவேகூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார் ஜெயராம் *** அன்புள்ள ஜெயராம், ஓர் ஆண்டுக்கு முன் என நினைக்கிறேன், சோ.தருமன் அழைத்திருந்தார். கண்ணீரும் குமுறலுமாகப் பேசினார். காலச்சுவடு அவருடைய கூகை நாவலை வெளியிட்டிருக்கிறது.. ஒப்பந்தம் ஆங்கிலத்தில். அதில் என்ன பெரிதாக இருக்கப்போகிறது என அவரும் எவரையும் வைத்துப் படித்துப்பார்க்கவில்லை. எவரேனும் நல்லபடியாக வெளியிட்டால் சரி என்றுதான் அவருக்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107087

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74

பகுதி பத்து : பெருங்கொடை – 13 கர்ணன் இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருப்பதை சுப்ரியை கண்டாள். அவை அவருடைய சொல்லுக்காகவே முதற்கணம் முதல் காத்திருந்தது எனத் தெரிந்தது. காசியப கிருசர் “அவையின் ஆணை அவ்வாறென்றால் அங்கநாட்டரசர் வெளியேறுவார்” என்று சொல்லி காத்திருந்தார். சுப்ரியை துரியோதனனை நோக்கினாள். மாறா கல்தன்மையுடன் அவன் அமர்ந்திருந்தான். காசியப கிருசர் “அவை முடிவை வேள்வித்தலைவர் அறிவிக்கவேண்டும்” என்றார். வேள்வித்தலைவரான அமூர்த்தர் “நெறிகளின்படியும் இந்த அவைகொண்ட முடிவின்படியும் அங்கநாட்டரசர் சூதர் என்றே கொள்ளப்படவேண்டும். வேள்விக்காவலராக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107109