Daily Archive: February 27, 2018

கேரளத்தின் காலனி

  மலையாள ‘யானை டாக்டர்’ ஒரு மொழியாக்கம் அல்ல, மறு ஆக்கம். மூலத்தைவிட முப்பது விழுக்காடு நீளம் மிகுதி. அதில் ஒரு பகுதி அந்நூல் வெளியானதுமே வாதமாக ஆகியது. வசைகளும் இருந்தன. அதில் மலையாளிகள் காடு பற்றி கொண்டுள்ள உளநிலை கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது   காடு கேரளத்தின் காலனியாதிக்கப் பகுதி. காடு என்ற சொல்லே மலையாள மொழியில் எதிர்மறைப் பொருள் கொண்டது. மொழியில் கட்டுபாடின்மை காடுகேறுதல் எனப்படுகிறது. பாழடைதல் காடுபிடித்தல் எனப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள காடு சார்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107078

திராவிட இயக்கங்கள் -கடிதம்

திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு   ஜெ, திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு கட்டுரையை வாசித்தேன். அடிப்படையில் திராவிட இயக்கங்களின் பிறப்பு சாதிக்காழ்ப்பிலிருந்து. பரப்பியல் அரசியலில் இருந்து. ஆனால் அதிலிருந்து ஜனநாயக அரசியல் நோக்கிய ஒரு நகர்வை அண்ணா செய்தார். அதனால்தான் அவர்கள் ஆட்சியைப்பிடிக்கமுடிந்தது. அதாவது முதல்முறை மறுபிறப்பு அடைந்தபின்னர்தான் அவர்கள் வளர்ந்து இன்றிருக்கும் நிலையை அடைந்தனர். பெரியாரை நிராகரித்திருக்காவிட்டால் திராவிட இயக்கம் அன்றே இன்றிருக்கும் நாம்தமிழர் கட்சி மாதிரித்தான் இருந்திருக்கும்.   இன்று இன்னும் ஒருபடி மேலே சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107076

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73

பகுதி பத்து : பெருங்கொடை – 12 அவைக்கு வருபவர்களை அறிவிக்கும் சங்கொலிகள் ஓய்ந்ததும் வேள்வியரங்கு முழுமைகொண்டுவிட்டதா என்று காசியப கிருசர் எழுந்து நின்று நோக்கினார். அவருடைய மாணவர்கள் அந்தணர்நிரையிலும் அரசர்நிரையிலும் முனிவர்நிரையிலும் நின்று விழிகளால் தொட்டு எண்ணி நோக்கி அவைநிறைந்துள்ளது என உணர்ந்ததும் கைகூப்பி அவருக்கு அறிவித்தனர். காசியப கிருசர் திரும்பி வேள்விப்பொருட்களை மேல்நோக்கு செய்துகொண்டிருந்த குத்ஸ தாரகரிடமும் அப்பால் வேள்விக்குளங்களை நோக்கிக்கொண்டிருந்த மௌத்கல்ய தேவதத்தரிடமும் வினவினார். அவர்கள் கைகூப்பியதும் அவருடைய மாணவனிடம் மெல்லிய குரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107095