Daily Archive: February 23, 2018

அந்தக்குயில்

  தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்று வாசிப்பு நமக்கு முக்கியமான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கிய வாசிப்பு எவ்வாறெல்லாம் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறது என்று  காட்டுகிறது அது. வேறெந்த மொழியை விடவும் தமிழ் வாசகனுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நமது வாசிப்பில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்ற கேள்வி பல சமயம் ஒரு துணுக்குறலாகவே நம்மை வந்தடைகிறது. தமிழின் கவியரங்குகளில் வாசிக்கப்படும் பிரபலமான ‘கவிதைகளை’ப் பாருங்கள்.   சர்வசாதாரணமான அரட்டைவெடிகள், மேடைக்கர்ஜனைகள் சாதாரணமான வரிகளால் எழுதப்பட்டு உரக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16770

தாந்த்ரீக பௌத்தம் – கடலூர் சீனு

இனிய ஜெயம்   கடந்த சில தினங்களாக  பௌத்தம் குறித்து இணையத்தில் ஆங்காங்கே தேடி , கிடைக்கும் ஆங்கில தகவல்களில் இருந்து  என்னால் இயன்றவரை  , மொழிபெயர்த்து புரிந்து கொண்டு வாசித்து வருகிறேன் .   வாசித்த வரையில் சில ஆச்சர்ய தகவல்கள் கிடைத்து . கிட்டத்தட்ட பௌத்தத்தின் அத்தனை பிரிவுகளையும்   பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த காலச்சக்கரம் எனும் நூல்  பாதித்து இருக்கிறது . வஜ்ராயன பௌத்தத்தின் காலச்சக்கர தந்திரம் எனும் நூலை [ஓடிசாவின் ரத்னகிரி பௌத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106827

இலக்கிய டயட் -பரிந்துரை

அன்புள்ள ஜெ..   பல இலக்கிய கூட்டங்கள நடத்தியுள்ள உங்களுக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும்  .. குறிப்பிட்ட சிலர் இப்படி சொல்வார்கள்  -கலந்து கொள்ள ரொம்ப ஆசை சார்.. இம்முறை வர முடியாமல் போய் விட்டது.. அடுத்த முறை கண்டிப்பாக வருவேன்.. இவர்கள் ஒருபோதும் கூட்டத்துக்கு வர மாட்டார்கள். ஆனால் இதே போல மெயில் அனுப்புவார்கள். சும்மா ஃபார்மலாக எழுதுகிறார்கள் என நினைப்போம்…தவறு.அவர்கள் கலந்து கொள்ள நிஜமாகவே விரும்புகிறார்கள்…என்றாவது ஒரு நாள் வீட்டில் வேலைகள் இல்லாதபோது ஞாயிற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106961

நீர்க்கோலம் -முன்பதிவு

ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது.   அத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவரும் பிறிதொருவராகிறார்கள். ஊழால் உருமாற்றம் அடைகிறார்கள். ஆழ்மனத்தில், கனவில் உருமாற்றம் அடைகிறார்கள். ஒளிந்துகொள்ள மாற்றுருக் கொள்கிறார்கள். நிகழ்ந்தவை கதையெனச் சொல்லப்படும்போது மாற்றமடைகின்றன. உருமாற்றம் என்பதனூடாக உருவமென உடலைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107024

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69

பகுதி பத்து : பெருங்கொடை – 8 கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன் குழலை நீவி தோளுக்குப் பின்னால் இட்டான். அவன் எழப்போகிறான் என சுப்ரியை எண்ணினாள். வெடித்துக் கூச்சலிட்டபடி வாளை உருவக்கூடும். அல்லது வெளியே செல்லக்கூடும். ஆனால் அந்த மெல்லிய அசைவுத்தோற்றம் மட்டும் அவனுடலில் ததும்பியதே ஒழிய அவன் எழவில்லை. துரியோதனன் மீண்டும் அமர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107001