Daily Archive: February 21, 2018

கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி

கொற்றவை அச்சாகி வெளிவந்த ஒரு மாத காலத்திற்குப் பின் அதன் ஆசிரியர் ஜெயமோகன் நீண்ட ஓய்வை அறிவித்தார். திட்டமிட்ட பெரிய பணி கச்சிதமாக முடிந்து விடும் நிலையில், நீண்ட ஓய்வொன்றை விரும்புவது மனித இயல்பு. 25 ஆவது வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்து விட்டு நீண்ட ஓய்வை அறிவித்திருக்கிறார் ஜெயமோகன். 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டுள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/465

வீடுதிரும்புதல்

ஜெ முகநூலின் நக்கல்களுக்கு சில சமயம் ஓர் அழகு உண்டு. இது மனுஷயபுத்திரன் கவிதை எப்படி வீடு திரும்புகிறேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் எப்படியோ வீடு திரும்பிவிடுகிறேன் இதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்று நானும் இப்படித்தான் இருந்தேன். அப்புறம் குடிக்கிறத குறைச்சுகிட்டேன்  குபிரென சிரித்துவிட்டேன். சண்டை சச்சரவுகள், போலிப்புரட்சிகள், மதவெறி எல்லாவற்றுக்கும் நடுவே முகநூலை விடமுடியாமலிருப்பது இதனால்தான்   எஸ்.கிருஷ்ணன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/107008

ஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்

நெல்லை புத்தகக் கண்காட்சியில் செல்வேந்திரன் ஆற்றிய உரையைப்பற்றி முதலில் சொன்னவர் எனக்கும் செல்வேந்திரனுக்கும் நட்புண்டு என்று தெரியாத ஒரு நண்பர் “செல்வேந்திரன்னு ஒரு சின்ன பய சார், என்னா பேச்சு” என்றார். சின்னப்பையன் என்று அவர் சொன்னது சற்றே மிகைதான். ஆனால் பேச்சு அவரைக் கவர்ந்திருப்பது தெரிந்தது அதன்பின்னர் அப்பேச்சின் எழுத்துவடிவை வாசித்தேன். ஒர் அபாரமான உரை. அந்தரங்கத்தன்மையும் உணர்ச்சிகரமும் கூடவே செய்திகளும். அதேசமயம் அலைபாயாமல் நேர்த்தியான வடிவையும் கொண்டிருக்கிறது. மேடையுரை என்றாலே சம்பந்தமில்லாமல் சென்றுகொண்டே இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106970

விஷ்ணுபுரம் வாசிப்பது பற்றி…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு… உங்களுடைய கதையோ கட்டுரையோ அல்லது விமர்சனமோ எதை படித்தாலும் உங்களுக்கு உடனே கடிதம் எழுத தோன்றும். ஆனால் எழுதுவதில்லை. காரணம் சிலாகிக்கிறேன் என்ற பெயரிலோ அல்லது விமர்சிக்கிறேன் என்ற பெயரிலோ உளறி கொட்டி நான் வெளிப்பட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தினால் தான். மேலும் ஒருசில காரணங்கள் உண்டு  அவையும் காரணங்கள்தாம். வெள்ளிக்கிழமை விகடனை காத்திருந்து வாங்குவதற்கு காரணமாயிருந்தது ஞாநியின் ஓ பக்கங்கள்தாம். விகடனில் ஓ பக்கங்கள் நிறுத்தப்பட்ட பிறகு சுமார் இரண்டாண்டுகள் நான் விகடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106270

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67

பகுதி பத்து : பெருங்கொடை – 6 புலரியில் சுப்ரியை ஒரு கனவு கண்டாள். மிகச் சிறிய படிகள். அவை சதுர வடிவான கிணறு ஒன்றுக்குள் மடிந்து மடிந்து இறங்கிச் செல்ல மங்கலான ஒளியில் அப்படிகளின் மேற்பரப்பை மட்டுமே நோக்கியபடி அவள் காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றுகொண்டே இருந்தாள். மேலும் மேலுமென படிகள் இருளிலிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தன, ஏடு புரளும் முடிவற்ற நூல் என. தலைக்குமேல் மெல்லிய ஒளியுடன் தெரிந்த அச்சதுரத் திறப்பு சிறிதாகியபடியே சென்றது. இருமுறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106987