Daily Archive: February 20, 2018

அலைகளில் அமைவது

பாவியல்பு [lyricism] புதுக்கவிதைகளில் கைகூடுவது அரிது. ஏனென்றால், அந்த வடிவமே பாவியல்பை புறக்கணிக்கும்பொருட்டு எஸ்ரா பவுண்ட் போன்ற முன்னோரால் உருவாக்கப்பட்டது. பாவின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, இசைத்தன்மையை நிராகரித்துவிடவேண்டும் என்பது அவர்களின் வழிகாட்டல் ஆனால் விரைவிலேயே பாவியல்பு புதுக்கவிதைக்குள் திரும்பி வந்தது. புதுக்கவிதைக்கு முன்பு அது யாப்பின் வரையறுக்கப்பட்ட ஓசையை கொண்டிருந்தது. அல்லது இசைப்பாடலின் பண் சூடியிருந்தது. அவை இரண்டையும் துறந்து ஒலியமைப்பினாலும், உள்ளுறைந்த உணர்வொருமையாலும் பாவியல்பை அடைந்தது புதுக்கவிதை. தமிழில் பிரமிள், அபி,தேவதேவன், சு.வில்வரத்தினம் போன்றவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106936

கைதி-நாடகநிகழ்வு

  கைதி- நாடகம் ஜெ, அன்புடன் கோ எழுதுவது. நேற்று 18.2.2018 ஞாயிற்றுக்கிழமை இங்கே திருவண்ணாமலையில் red elephant theater 4 bee artists இணைந்து நடத்திய “கைதி” நாடகம் பார்க்க சென்றிருந்தேன். நேற்று தான் அந்த தியேட்டரில் நாடகம் அரங்கேறும் முதல் நாள். அதனால் துவங்க சற்று தாமதித்துவிட்டது .ஏற்பாட்டாளர்கள் தயாராகத்தான்இருந்தார்கள். அவர்கள் மட்டும் தயாராக இருந்தால் போதுமா… முதலில் S.ராமகிருஷ்ணனின் “அக்கடா”-வின் ஒருப்பகுதியை அரங்கேற்றினார்கள் .குழந்தைகளுக்கான நாடகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல .நடிப்பதற்கும் தான். எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106953

அகாலக்காலம் -கடிதங்கள்

  அகாலக்காலம் அன்புள்ள ஜெ   நீங்கள் சென்ற தடம் இதழில் எழுதியஅகாலக்காலம் கட்டுரையை வாசித்துக்கொண்டு இருந்தபோது தினமணி கைக்குச் சிக்கியது. அதன் செய்தி ஒன்றை வாசித்து குபீரென்று சிரித்துவிட்டேன். நீங்கள் அக்கட்டுரையில் சொல்லும் நடப்பு முப்பதாண்டுகளுக்கு முன்பு. இது இன்றைய யதார்த்தம். இன்னும் நூறு வருசம் கழித்து 2118ல் கூட ’இதேபோல இலக்கியம் அன்றாட வாழ்க்கையை எழுதவேண்டும்’ என்று யாரோ ஒருவர் ஏதோ ஒருவிழாவிலே பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என நினைக்கிறேன்   மகாதேவன்   அன்புள்ள ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106950

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66

பகுதி பத்து : பெருங்கொடை – 5 துறைமேடையில் விருஷசேனனும் விருஷகேதுவும் சத்யசேனனும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். கர்ணன் கிளம்பிய பின்னரே அங்கே சென்றுசேரவேண்டுமென எண்ணி அவள் பிந்தி கிளம்பியிருந்தாள். தேரிறங்கியதும் விருஷசேனன் வந்து தலைவணங்கி “அஸ்தினபுரிச் செலவு அவர்களுக்கும் நமக்கும் நலம் பயப்பதாகுக, அன்னையே” என்றான். அவன் தலைதொட்டு “வெற்றி நிறைக!” என வாழ்த்தினாள். பிற மைந்தரும் அவள் கால்தொட்டு வாழ்த்து பெற்றனர். கர்ணனும் சிவதரும் ஏறிய அரசப்படகின் அமரமுனையில் எழுந்த தலைமைக் குகன் கொம்பொலி எழுப்ப படகுத்துறையிலிருந்து மேடைமேலேறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106768