Daily Archive: February 19, 2018

யானைவந்தால் என்ன செய்யும்?

இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் மிகுந்த ஆசைப்பட்டுத்தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், முயற்சிசெய்துகூட பார்த்திருப்பார். பெரியமனிதர். ஆனால் இடுக்கண் வந்து கொஞ்சநாள் கழித்து நகைப்பது சாத்தியம்தான் என்று எனக்கும் தோன்றுகிறது. சொல்லப்போனால் பழைய இடுக்கண்களைப்போல சிரிப்பு வரவழைப்பது ஏதுமில்லை. முதல்விஷயம் நாம் அவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். உயிரோடு நலமாக இருக்கிறோம். ஊழையும் உப்பக்கம் கண்டுவிட்டால் அதன்பிறகு ஊழாவது கூழாவது. கேரளத்தில் யானை அதிகம். மிகப்பெரிய துன்பத்தை யானைக்கு உவமிப்பதை அங்கே நாட்டார் சொலவடையாகப் பார்க்கலாம். மலையாளிகளுக்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68601

பேலியோ -நியாண்டர்செல்வன்

    பேலியோ -ஒரு கடிதம்   அன்புள்ள ஜெயமோகன்,   வணக்கம். மாதவன் இளங்கோ எனும் வாசகரின் கடிதம் கண்டேன். இரத்தவகை டயட் நூலை நான் படித்ததில்லை. கேள்விப்பட்டதை வைத்து எழுதுகிறேன்.   இரத்தவகை டயட் எனும் கோட்பாடே பிழையானது. அறிவியல் அடிப்படை அற்றது. ஏனென்றால் நம் இரத்தவகை என்ன என்பது பரிசோதனை செய்ய்யாமல் யாருக்கும் தெரியாது. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போனால் தமிழ்நாட்டில் பலருக்கும் தம் ரத்தவகை என்ன என்பதே தெரியாது. ஆக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106939

பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

பெருமதிப்பிற்கும் அன்புக்குமுரிய ஆசானே,     இன்னைக்குத்தான் நேர்ல பாத்தேன் “அச்சப்படத் தேவையில்லை “விழால. பாதிலதான் வந்தேன்(மன்னிப்பு). நீங்க பேசிட்டுருந்தீங்க. பல விஷயம் மண்டைல ஏறுச்சு.எங்க ஊர்லயும் ஒரு உச்சினி மாகாளியம்மன் கோயில் இருக்கு கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதே நிலைமைல. எத்தனையோ தடவ அந்த கோயில் வழியா போயிருக்கேன். இப்பதான் உள்ள போய் பாக்கணும்னு தோனுது. அங்க கொடை நடக்கும்போது இரவு வெளில எங்க வீடுகளில் வெளில விட மாட்டாங்க. முக்கியமா சூலிப்  பெண்களை. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106620

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65

பகுதி பத்து : பெருங்கொடை – 4 அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான் சித்தத்தில் அது உறைத்தது. அவள் நிலையழிந்து அகத்தளத்தில் சுற்றிவந்தாள். அணுக்கச்சேடி சபரியும் பிறரும் அவளுடைய பயணத்துக்கான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தார்கள். அவள் அதெல்லாம் தனக்காக என்பதை மெல்ல மெல்லத்தான் உள்வாங்கினாள். சபரியிடம் “நான் சென்றுதான் ஆகவேண்டுமா என்று பிறிதொருமுறை அரசரிடம் கேட்டுவரச்சொல்” என்றாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106758