Daily Archive: February 18, 2018

ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா

  சிலநாட்களுக்கு முன்னர் நண்பர் கே.பி.வினோத் நாகர்கோயில் வந்திருந்தார்.கணியாகுளம் பாறையடி வரை மாலைநடை சென்றிருந்தோம். கடந்துசென்ற பைக் ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கிய இருவர் எங்களைத்தெரியும் என்றனர். பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் தன்னை குமார் என்றும் வாசகர் என்றும் சொன்னார். புகைப்படநிபுணர், தொழில் அதுவே. அவர்கள் அருகே உள்ள வேளிமலை உச்சியிலுள்ள  ஆனைக்கல் துளிச்சொட்டு  சாஸ்தாகோயில் செல்ல வழிதேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்   பின்னர் வீட்டுக்குவந்து மின்னஞ்சலைப் பார்த்தபோதுதான் அவர் என் நெடுநாள் வாசகரான குமார் முல்லைக்கல் என தெரிந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106894

மயிலாடுதுறை பிரபு வலைப்பூ

அன்பின் ஜெ, ஒரு வலைப்பூ துவங்கியுள்ளேன். இதழ்களில் வெளியான எனது பயணக்கட்டுரைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் பதிவேற்றி உள்ளேன். http://prabhumayiladuthurai.blogspot.in அன்புடன், பிரபு மயிலாடுதுறை  

Permanent link to this article: https://www.jeyamohan.in/106907

காடெனும் அனுபவம்

அன்புள்ள ஜெ,   நலமா. கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களாக உங்களைப் படித்து வருகிறேன் என்ற போதிலும் இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். புதிய வாசகர்களின் கடிதங்களை நீங்கள் மிகச்சிரத்தையாக பதிவு செய்யும் நாட்களில் எல்லாம் உங்களுக்கு “வணக்கம்” சொல்லியாவது ஒரு கடிதம் எழுதத்தோன்றும். ஆனால் அதைச் செய்யவில்லை. வெறும் வணக்கம் சொல்லும் இடத்தில் நீங்கள் இல்லை. அது என் கடிதத்திற்கான முறையும் இல்லை. என் முதல் கடிதம் காடு நாவல் குறித்ததாகத்தான் இருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106786

மகாபாரதம் பூர்வகதை

  அன்புள்ள ஜெயமோகன், நலம். நாடலும் அதுவே. வியாசரின் பாரதத்தில் இதுவரை எழுதியவற்றை “மகாபாரதம் பூர்வகதை” என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன். https://kesavamanitp.blogspot.in/2018/02/blog-post_8.html அன்புடன், கேசவமணி     அன்புள்ள கேசவமணி   நூல் கண்டேன். நான் வாசித்தவரை மகாபாரத கதைவிவரிப்புகளில் சிறந்தது, நவீன உரைநடையில் அமைந்தது அ.லெ.நடராஜனின் மகாபாரதம்.அ.லெ.நடராஜன் அறுபது எழுபதுகளில் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள், இதிகாச  மறுஆக்கங்கள் , சிந்தனை அறிமுகநூல்கள் முக்கியமானவை. எளிமையான நேரடி உரைநடையில் எழுதப்பட்டவையாதலால் முழுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106650

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–64

பகுதி பத்து : பெருங்கொடை – 3  ஹிரண்யகர்ப்பம் என்னும் அதர்வவேதக் குழுவில் அவனை சேர்க்கலாம் என்று தந்தை முடிவெடுத்தபோது அன்னை அதற்கு ஒப்பமாட்டாள் என்னும் ஐயம் அவருக்கு இருந்தது. பல நாட்களாகவே அவரைத் தேடி அக்குருநிலையிலிருந்து வைதிகர்கள் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் அங்கிரீசரின் சொற்குலம். அதர்வம் அவர்களுக்கு பழிசேர்ப்பது. “மைந்தரை அதர்வத்திற்கு அனுப்புவது எத்தனை துயரளிப்பதென்று அறிவோம். ஆனால் அவன் அங்கிரீச குலத்தவன் என்பதே அவனுக்குக் காப்பென்றுணர்க! ஒரு பிழையும் நிகழாது இயற்றப்படும் அதர்வம் பிற மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106690