Daily Archive: February 17, 2018

வாசிப்பும் சமநிலையும்

எழுத்தாளருக்கு வணக்கம், எழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகம். I shaped my conduct based on his writings. So, he is more than a writer to me. இத்தனைக்கும் அவருடைய ஒரு சில புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு இலக்கிய நண்பர்கள் யாரும் இல்லை. தெரிந்த நண்பர்களுக்கு சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இலக்கியம். தற்செயலாக ஏதோ இணையத்தில் தேடி உங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தேன். உங்கள் மூலமாகத்தான் எனக்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25477

பேலியோ -ஒரு கடிதம்

பேலியோ பேலியோ -ஓர் அனுபவக் கடிதம் பேலியோ பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கூறியிருப்பது நானும் ஆமோதிக்கிறேன். நான் அன்றாடம் வாசிக்கும் தளங்களில் ஒன்று அவருடையதும். :-) குறுகிய காலத்துக்கு ஒரு உணவுமுறையைப் பின்பற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. உணவுமுறை மட்டுமல்ல; எந்தப் பழக்கமுமே. ஆனால் அதிக பருமனாக இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றி குறைத்து விட்டு பிறகு கவனமாக பராமரிக்கலாம் என்கிற நியாயமான எண்ணமிருந்தால் செய்யலாம். நீங்கள் கூறியது போல உணவுப் பழக்கங்களை மெதுவாகத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106743

நீர்க்கோலம்

    ’நீர்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னை போர்க்கோலஞ் செய்துவிட்டார்க்கு உயிர்கொடாது அங்கு போகேன்’ என்ற கம்பராமாயண வரியிலிருந்து இந்த நாவலுக்கான தலைப்பை அடைந்தேன். நீர்க்கோலம் என உருமாறிக்கொண்டே இருக்கும் மானுடர்களின் கதை இது. போர்க்கோலம் கொள்ளவிருப்பவர்கள் கொள்ளும் உருவமழிதல் விளையாட்டு. ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106645

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63

பகுதி பத்து : பெருங்கொடை – 2 புருஷமேத வேள்வியில் தன்னாகுதி அளிக்க நூற்றெட்டு அதர்வர் அமர்ந்த வேதக்கூடலில் தெரிவு செய்யப்பட்ட அவிரதன் எனும் இளைய வைதிகன் வேள்விக்காட்டின் வடக்கு எல்லையில் கங்கைக் கரையில் கோரைப்புல்லால் கட்டப்பட்ட சிறுகுடிலில் நோன்பு மேற்கொண்டு தங்கியிருந்தான். மரவுரி அணிந்து, ஒருவேளை உணவுண்டு, காலை, உச்சி, அந்தி என மூவேளை நீர் வணங்கி எரியோம்பி நாற்பத்தொரு நாட்களாக அவன் அங்கு தங்கியிருந்தான். அவன் விழிகள் மானுடர் எவரையும் நோக்கலாகாதென்றும் அவன் செவியிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106683