Daily Archive: February 16, 2018

தேசியகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும்

அன்புள்ள ஜெ   தேசியக்கொடிக்கு வணக்கம் செய்வதைப்பற்றி உங்கள் கருத்தை வாசித்தேன். எளிமையாக உடனே எழும் அடுத்த கேள்வி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வணக்கம்செய்ய காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்திராதது பற்றி உங்கள் கருத்து என்ன? அதையும் இதையும் எப்படி வேறுபடுத்துகிறீர்கள்?   செல்வா நாகேந்திரன்   அன்புள்ள செல்வா,   எந்தவகையிலும் வேறுபடுத்தவில்லை. காஞ்சி சங்கராச்சாரியார் செய்திருப்பது பிழை. கண்டிக்கத்தக்கது.  இது ஓர் இந்துவாக என் கண்டனம்.   சங்கராச்சாரியார் ஒரு குறிப்பிட்ட சாதிசார்ந்த, புரோகித அமைப்பின் தலைவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106814

புர்க்காவும் சவூதி அரேபியாவும்

ஜெ   சவூதிஅரேபியாவின் மதவாதம் பற்றி எழுதியிருந்தீர்கள், இப்போதைய அரசர் வந்தபின் தெளிவாகவே சீர்த்திருத்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உங்கள்பார்வைக்கு   http://www.arabnews.com/node/1243446/saudi-arabia   இனிமேல் சவூதி அரேபியாவில் பெண்கள் புர்க்கா போட்டாகவேண்டும் என்று சட்டம் இல்லை. அது எவ்வகையிலும் மதக்கடமை அல்ல. தலைமை மதகுருக்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவரிடமிருந்தே அறிவிப்பு  வந்திருக்கிறது. எதிர்காலத்தில் மேலும் சீர்திருத்தங்கள் வரக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.   இந்தியாவில் மிகச்சில இஸ்லாமியக் குழுக்களைச் சேர்ந்த மட்டுமே எண்பதுகளுக்கு முன் புர்க்கா போட்டுக்கொண்டிருந்தார்கள். சவூதிஅரேபியாவிலிருந்து வஹாபிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106761

பெரியார்மதம்

  ஈவேரா -உண்மைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   எந்த விமர்சனமும் இன்றி ஈ வெ ராமசாமி அவர்களையும் திராவிட இயக்கத்தையும் அணுகுபவர்களில்   ஒருவன் அல்ல நான்.  எனினும் அதை பற்றிய தீவிர ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை என்பது போல நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. 1990களுக்கு பிறகு எஸ் வி ராஜதுரை – வ கீதா, MSS பாண்டியன் போன்று ஆய்வு புலம் சார்ந்தவர்களின் பணிகளை நீங்கள் மறுப்பதையும் கவனித்திருக்கிறேன். அப்படி நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106496

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62

பகுதி பத்து : பெருங்கொடை – 1 அஸ்தினபுரியின் மையப் படகுத்துறையிலிருந்து வலமாகப் பிரிந்து கங்கைக்கரை ஓரமாகவே செல்லும் பாதையின் இறுதியில் அஜமுகம் என்னும் சிறிய பாறை கங்கைக்குள் நீட்டி நின்றிருந்தது. அதை ஒரு சிறு துறைமேடை என்றாக்கி அங்கே சிறிய மீன்பிடிப்படகுகளும் அக்குறுங்காட்டில் வேட்டைக்கு வருபவர்களின் வாள்படகுகளும் அணையும் வழக்கமிருந்தது. அஸ்தினபுரியின் தலைமையில் தொடங்கவிருக்கும் பெரும்போர் வெல்லும் பொருட்டு ஒருக்கூட்டப்படும் புருஷமேத வேள்விக்காக அஸ்தினபுரியின் தலைமை வைதிகராக அமைக்கப்பட்ட காசியப குலத்து கிருசர் வடக்கே இமயமலைச்சாரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106641