Daily Archive: February 15, 2018

க்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்

  திருத்தர்   அன்புள்ள ஜெயமோகன்,   எடிட்டிங் பற்றிய உங்கள் கட்டுரையில் கீழ்க்கண்ட வரிகளைக் கண்டேன்:   ‘இமையத்தின் ஆறுமுகம் நூலின் முன்னுரையில் ‘க்ரியாவின் மொழிக்கொள்கையின்படி இந்நாவலை இமையத்தை  எங்களுடன் மாதக்கணக்கில் அமரச்செய்து மறுஆக்கம் செய்தோம்’ என்று ஒரு வரி இருக்கும். ‘   உங்கள் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வரி முழுக்க முழுக்க உங்கள் கற்பனை. இந்த வரியின் சாயலைக்கூட ’ஆறுமுகம்’ நூலின் முன்னுரையில் நீங்கள் பார்க்க முடியாது.   உங்கள் வசதிக்கு ‘ஆறுமுகம்’ நாவலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106832

ஒரு ‘செரெண்டிபிட்டி’அனுபவம் – மாதவன் இளங்கோ

  அன்பு ஜெயமோகன்,   என் கடிதங்கள் உங்களை வந்தடைந்ததா என்று தெரியவில்லை. வழமைபோல் உங்கள் தளத்தில் பிரசுரித்து பதில் அளிப்பீர்கள் அல்லது கடிதமாவது வரும் என்று நினைத்தேன். இதுவரை கிட்டத்தட்ட என்னுடைய எல்லா கடிதங்களுக்கும் அத்தகைய சமிக்ஞை கிடைத்திருப்பதால் ஒரு சம்சயம்.   இந்த வாரம்  முழுவதுமே ஏதாவது ஒரு காரணத்துக்காக  சிரித்துக்கொண்டே இருக்கிறேன். நல்லதுதானே. இதுபோன்ற தருணங்கள் அரிதாகவே வாய்க்கிறது. ஒரு மூன்று காரணங்களை மட்டும் கூற விழைகிறேன்.   முதல் காரணம் –  உங்களுடைய “கஞ்சிமலையாளம்” கட்டுரை. குறிப்பாக அருண்மொழி அவர்களின் “எந்து பட்டீ”. :-)) வீட்டில் நாங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106741

கடிதங்கள்

  ஜெ,   இரவு குழந்தையை யார் தூங்கவைப்பது என்ற  சலிப்பின்பொருட்டான  இருவரின் தன்அகங்கார பனிச்சண்டையில் வெற்றிபெற்ற நான் கையில் வெண்கடலுடனும்,   மனைவி  மகனுடனும் பிரிந்தமர்ந்தோம். வாசிக்கதொடங்கிய பிழை சிறுகதை சரித்திரத்தின் மேல் ஈயாக என்னை உள்ளிளுத்துக்கொண்டது.  காட்சிவிவரணைகளான  கதையில் நானே  லட்சுமண  ரானேவாக  நின்று குஜராத்திக் கிழட்டு விவசாயியைபோல இருந்த அம்மகாத்மவின் குதுகளித்த அவ்ஈர கண்களின் வழி, இரு கலைகளின் ஊடே நிகழ்ந்த ஒரு வரலாற்று சிருஷ்டியின் தரிசன ம் கிடைத்தது,  கதையை வாசித்து முடித்த உடன்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106369

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 6 கர்ணனின் அரண்மனையில் சிற்றவையை ஒட்டிய சிறிய ஊட்டறையில் விருஷாலி தாரைக்கு அருகே பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள். இப்போதுகூட பிழையென ஏதும் நிகழவில்லை, எழுந்து சென்றுவிடலாம் என அவள் எண்ணினாள். ஆனால் உடலை எழுப்பமுடியவில்லை. அவள் கைவிரல்களை பின்னிக்கொண்டே இருப்பதைக் கண்ட தாரை “அரசி, இது முறைமைமீறல் அல்ல. இது அரசரின் அவை அல்ல. அவைக்குத்தான் அரசமுறைமைகள்” என்றாள். “அறியாது பேசுகிறாய் நீ. உனக்கு இங்குள்ள நடைமுறைகள் தெரியாது” என்றாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106585