Daily Archive: February 14, 2018

இந்திய ஓவியங்களை ரசிப்பதன் தடை என்ன?

  அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன் வணக்கம் திரு ஜெயமோகன் இன்று உங்கள் தளத்தில் வந்த ‘அருகமர்தல் ஏ.வி.மணிகண்டன்’ பதிவை வாசித்தேன். இந்திய கலைகளை, குறிப்பாக ஓவியக்கலையை அணுகுவதற்க்கும் அறிவதற்க்கும் முக்கிய சிக்கலாக இருப்பது – நம்மிடம் கலைகள் மட்டுமே உள்ளன கலைஞர்களை பற்றி எதுவும் இல்லை. படைப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன படைப்பாளிகளை பற்றி பெரிதாக எதுவும் நம்மிடம் எஞ்சியில்லை. ஆனால் அங்கு அப்படியில்லை. ரினைசான்ஸின் முகமாக டா வின்சியும் மைகெலான்ஜிலோ வும் இருக்கிறார்கள் பரோக்கிற்கு பெர்னினி இருக்கிறார். அவர்களின் முுலமாகவே நாம் அந்த கலையயும் அறிகிறோம். பின்னால் வந்த இம்ப்ரஷனிஸத்திலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106475

நவீனின் யாக்கை

யாக்கை அன்புள்ள ஜெயமோகன், யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின் போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106736

ஏழாம் உலகம் பற்றி

  அன்புள்ள ஜெ, நலம் தானே? கடந்த ஆண்டு “நான்காவது கோணம்” இதழுக்காக ஒரு கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். உங்களின் ஏழாம் உலகம் நாவல் குறித்து கொஞ்சம் பெரிய கட்டுரை. அதை வாசித்த என் அனுபவத்தை உங்களுடன் முன்பே பகிர்ந்து கொண்டேன். இது முழுமையான கட்டுரை. இன்று என்  வலைத்தளத்தில் பதிவு ஏற்றினேன். அதன் சுட்டி இங்கே. வாசித்துப் பாருங்கள் ஜெ. மகாத்மாக்களும் உருப்படிகளும் – ஏழாம் உலகத்தை முன் வைத்து அன்புடன், தீனதயாளன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/106605

கைதி- நாடகம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, Red Elephant theater company” என்னும் நாடக அமைப்பை திருவண்ணாமலையில் புதிதாக துவங்கியிருக்கிறோம். நாடக அமைப்பின் முதல் நிகழ்வாக தங்களின் வெண்கடல் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் “கைதிகள்” சிறுகதையை ” கைதி” என்னும் நாடகமாக பொதுமக்களின் பார்வைக்கு அரங்கேற்றம் செய்யவிருக்கிறோம். நாடக ஆசிரியர் திரு.சந்திரமோகன், ஸ்காலர், நேஷனல்  ஸ்கூல் ஆஃ ப் டிராமா ,திரிபுரா, Acting department Ex.Faculty  – பாலுமகேந்திரா சினிமா பட்டறை, BOAFTA, நடிகர்,பங்கேற்பாளர் நிகழ் நாடக மையம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106802

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 5 காவலர்தலைவன் வந்து சேய்மையிலேயே நின்று தலைவணங்கி “அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், அரசி” என்றான். சேடி விருஷாலியின் ஆடைகளை சீரமைத்தாள். இன்னொருத்தி அவள் படைப்பன்னம் உண்ட இலைகளையும் தொன்னைகளையும் அகற்றினாள். கூந்தலை சீரமைத்து விருஷாலி நிமிர்ந்து அமர்ந்தாள். தொலைவில் ஹரிதர் வழிநடத்த விகர்ணனும் குண்டாசியும் அவர்களுக்குப் பின்னால் தாரையும் நடந்துவருவதை அவள் கண்டாள். அவர்களுக்கு முன்னால் வீரன் ஒருவன் எதிரே எவரும் வராமல் விலக்கியபடி வந்தான். இடையில் அறிவிப்புச்சங்கு செருகியிருந்தான். தொலைவில் நடந்தணையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106630