Daily Archive: February 13, 2018

புதிய வாசகர் சந்திப்பு ஈரோடு 

நண்பர்களே, வருகிற பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இவ்வருடத்திற்கான  புதிய வாசகர் சந்திப்பை ஈரோட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம், இது வழக்கம் போல ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே உள்ள   வழக்கறிஞர் செந்திலின் பண்ணை இல்லத்தில் சனி காலை 10 முதல் ஞாயிறு மதியம் வரை நடைபெறும்.   ஜெ வை ஓரிரு முறை சந்தித்தவர்கள் புதியவர்கள் ஆகியோர் அவரை சந்திக்கலாம்.   இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர் , வயது , தற்போதைய  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106809

ரதிசுகஸாரே…

அருண்மொழி ஊரில் இல்லை. தனிமையான வீடு. எழுதி எழுதிச் சொற்கள் எஞ்சாத தனிமை எப்போதும் அஷ்டபதிக்கே கொண்டு சேர்க்கிறது. வேறெந்த பாடலிலாவது இத்தனை ஆண்டுகளாக மூழ்கிக்கிடக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப்பித்து ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. பெரும்பாலும் ஓர் இரவுக்கு  ஒரே பாடல். திரும்பத்திரும்ப, இரவு முழுக்க. இன்று இது. ரதிசுகஸாரே…   எல்லா வடிவிலும் எல்லா குரல்களிலும் இந்தப்பாடலைக் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன். ஒரிஸாவிலும் வங்கத்திலும் பிகாரிலும் விருஜபூமியின் எத்தனையோ களங்களில் இதை நெஞ்சுக்குள் பாடிக்கொண்டிருக்கிறேன். கங்கையிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106778

வீடு

  என் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாகக் கிடைத்தது. ஆனால் அவர்கள் மணம் புரிந்துகொண்டது என் அப்பாவை, ஒருபோதும் அவர்கள் மணம்புரிந்துகொள்ளக்கூடாத ஒரு மனிதரை. வேறு எந்தப் பெண்ணுக்கும் இலட்சியக்கணவராக இருந்திருக்கக்கூடிய, ஆனால் அம்மாவுக்கு மரண வடிவமாகவே மாறிய மனிதரை.   ஆகவே அம்மா முழுத்தனிமையில் இருந்தார்கள். வீடெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1477

சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,     நலமாக இருக்கிறீர்களா? பணி அலைச்சல் காரணமாக வாசிக்கவும் எழுதவும் சாெற்ப நேரங்களே கிடைக்கின்றன. ஞாயிறு விடுமுறையும்   வீட்டில் தங்காவண்ணம் கழிந்து காெண்டிருக்கிறது.    அப்படி இப்படி இழுத்துப் பிடித்து   சுநீல் கிருஷ்ணன் அவர்களின் “அம்புப்படுக்கை” சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.  அதைப் பற்றி நான் எண்ணியதைத் தாெகுத்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளேன். என் வாசிப்பு முறை சரியா தவறா இன்னும் நான் எதைக் கவனத்தில் காெள்ளவேண்டும் என அறிவுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106732

ஜானிஸ் பரியத் – கோவை விவாதம்

சென்ற டிசம்பரில் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் மேகாலய எழுத்தாளர் ஜானிஸ் பரியத் கலந்துகொண்ட விவாத அரங்கில் நிகழ்ந்த முக்கியமான ஒரு வினாவிடை குறித்து அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.   Uneasy on my tongue

Permanent link to this article: https://www.jeyamohan.in/106764

ஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ

ஞாநியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே. நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய ‘விசாரணை’ திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை.” என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106745

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 4 அஸ்தினபுரியிலிருந்து விகர்ணனும் அவன் துணைவி தாரையும் உடன்பிறந்தான் குண்டாசியுடன் சம்பாபுரிக்கு வந்திருக்கும் செய்தியை முன்புலரியில் கதிரவன் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் விருஷாலி அறிந்தாள். தேரில் செல்லும்போதுதான் அணுக்கச்சேடி ஒவ்வொரு செய்தியாக அவளிடம் சொல்வது வழக்கம். சூழ்ந்தமைந்த அன்னையரை வழிபட்டு, கதிர்முகம் எழுகையில் தாமரை மலர்களை படைத்து நாளவனை வணங்கும்பொருட்டு அவள் உள்முற்றத்தில் இறங்குகையில் அவளைக் காத்து ஹரிதர் நின்றிருந்தார். உடன் துணையமைச்சர் துங்கரும் இருந்தார். “இன்று ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106573