Daily Archive: February 12, 2018

கொடியை மதிப்பது

  ஜெ   எனக்கும் ஒரு நண்பருக்கும் அலுவலகத்தில் விவாதம். அவர் தேசியப்பாடலுக்கு எழுந்து நிற்கமாட்டேன் என்றும் தேசியக்கொடியை மதிக்கமாட்டேன் என்றும் சொன்னார். கேட்டால் அது தன் தனியுரிமை என்றும் அதில் அரசு தலையிடக்கூடாது என்றும் சொன்னார். இன்னொருவரும் அதேபோல இந்திய அரசு ஒரு மோசடியான அரசு என்றும் ஆகவே தானும் மதிப்பதில்லை என்றும் சொன்னார். என் அலுவலகத்தில் நேர்பாதிப்பேர் அதை ஆதரித்தார்கள். ஒரு நாட்டின் தேசியக்கொடியையும் தேசியப்பாடலையும் மதிப்பது என்பது தவறானதா என்ன? அது ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106706

அனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து

பொதுவாக ஈழப் புனைகதைகள் புலி எதிர்ப்பு, புலி ஆதரவு, இனப் படுகொலை ஆவணம், புலம் பெயர் வாழ்வின் அவலம் எனச் சில பாதைகளில் பயணிக்கும். அனோஜன் கதைகளில் ‘பலி’ கதையை தவிர்த்து வேறு கதைகளில் போர் நேரடியாக நிகழவில்லை. எனினும் கதிரொளி குடிக்கும் கார்மேகமாக போர் அனோஜனின் கதைப்பரப்பின் மீது கவியும்போது அது மேலும் பிரம்மாண்டமாகிறது.   அனோஜன் பாலகிருஷ்ணன் பச்சை நரம்பு என்னும் சிறுகதைத் தொகுதி- சுனீல் கிருஷ்ணன் [நரோபா] அனோஜன் பாலகிருஷ்னன் பேட்டி

Permanent link to this article: https://www.jeyamohan.in/106729

பகுத்தறிவும் டாக்கின்ஸும் – கடலூர் சீனு

இனிய ஜெயம்   அன்று கடலூர் சந்திப்பில் நீஙகள் ,முற்போக்கா ,பிற்போக்கா என வினவிய இளைஞர் திராவிட கழகத்தை சேர்ந்தவர் என பின்னர் நண்பர்கள் வழியே அறிந்தேன் .   எனது இருபது வயதில் இதே கேள்வியுடன் நான் பெரியாரை அணுகினேன் .   பத்து அல்லது பதினோரு வயது , அப்பாவின் பின்னால் ஒளிந்தபடி அந்த கருப்பு உடை மனிதர்களின் ஆவேச கூச்சலை ,பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன் . மௌனமாக நகர் வழியே கடந்து சென்று கொண்டிருந்தனர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106472

கலை -கடிதம்

கலைகளின் மறுமலர்ச்சி மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சென்னையில்  நேற்றைய தங்களது உரை ஒரு கிளாசிக். இதுவரை இலக்கியம், சமூகம், பண்பாடு பற்றிய பல தளங்களில் தங்களின் உரைகளை கேட்டுள்ளேன். ஓவியம் இசை சிற்பம் போன்ற சக நுண்கலைகளை பற்றிய மிக செறிவான உரை இது.புது அனுபவம்.   எனக்கு இசை நடனம் ஓவியம் எதை பற்றிய எந்த நுட்பங்களும் தெரியாது. ஆனால் இசையோ நடனமோ நான் விட பிடியாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அமர்ந்து இறுதி வரை கேட்பதுண்டு.பார்ப்பதுண்டு. அக்கலைகளை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106618

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 3 கலிங்கச் சிற்பிகளால் மூலஸ்தான நகரியிலிருந்த மாபெரும் சூரியதேவன் ஆலயத்தின் அதே வடிவில் செந்நிற மென்கற்களைக் கொண்டு சம்பாபுரியின் மையத்தில் கட்டப்பட்ட நாளவன்கோட்டம் பன்னிரு வாயில்கள் கொண்டு வட்ட வடிவில் அமைந்திருந்தது. தரையிலிருந்து நான்கு ஆள் உயரத்தில் எழுப்பப்பட்ட அரைக்கோள வடிவிலான பீடத்தின் மீது ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கப்பட்ட ஏழு முகடுகளுடன், உச்சியில் கூர்ந்துநின்ற பொன்முலாம் பூசப்பட்ட கலத்துடன், மணிமுடிசூடிய தலைபோல் தொலைவிலிருந்தே அது தெரிந்தது. விருஷாலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106529