Daily Archive: February 11, 2018

கலையில் மடிதல்

  பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,   வணக்கம்.   நேற்று இரவுதான் முகநூலின் மூலம் இச்செய்தியை அறிந்தேன்.கடந்த 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை இரிஞ்சாலகுடா கோவிலில் தான்  நடத்திய  “ஓட்டன் துள்ளல்” நாட்டிய  நிகழ்ச்சியின்போது மேடையிலேயே மரணமடைந்தார் கலாமண்டலம் கீதானந்தன்.அதன் சிறிய வீடியோ பதிவையும் பார்க்க நேரிட்டது!.நாட்டியத்தின் போது  பின் பாட்டு பாடுகிறவரை(சரியாக குறிப்பிட்டிருக்கிறேனா ?) சம்பிரதாயமாக வணங்கும் போதே அந்த மேதை  உயிர் விட்டதை கண்டு கண்ணீர் விட்டேன்!.என்ன ஒரு கலைக்கான முழு அர்ப்பணிப்பு! என்ன ஒரு பாக்கியம்!!.   Kalamandalam Geethanandan passes away while dancing   அன்புடன்,   அ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106695

அகாலக்காலம் கடிதங்கள்

அகாலக்காலம் ஜெமோ,     நீங்கள் அடிக்கடி கூறுவது போல இலக்கியம் எனபதும் ஒரு வகையான பிரச்சார ஊடகம் மட்டுமே என்பது வலிந்து இடதுசாரிகளின் மண்டையில் ஏற்றப்பட்டுள்ளது. கண்டிப்பாக உங்களை “ஏன் சமகால பிரச்சினைகளைப் பற்றி எழுதவில்லை?” என்ற கேள்வியைக் கேட்ட அந்த தாடிக்காரர் பொன்னுலக கனவில் வாழும்  கம்யூனிசக்காரராகவே இருக்கமுடியும் என்பது என்னுடைய ஊகம். இவர்களைப் பொறுத்தவரை நல்வாழ்வு எதிர்காலத்தில் மட்டுமே உள்ளது. நிகழ்காலம் ஒரு துன்பியல் காலம்; கடந்த காலம் என்ற ஒன்று இல்லவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106527

இரவு ஒரு கடிதம்

ஜெ   முதலில் என் விருப்பமும் அதன் காரணங்களையும் கூற விழைகிறேன். வெண்முரசு தவிர்த்து  உங்களிடம் இருந்து   ஒரு நாவலை எதிர்பார்க்கின்றேன் மிகுந்த பசியாக இருக்கிறது ” இரவு”  போன்ற ஒரு நாவலையும் அதன் மயக்கத்தையும் மீண்டும் எப்பொழுது கொடுப்பீர்கள் வெண்முரசு இதர பணிச்சுமைகள்பயணங்களுக்கிடையே இதையும் சாத்யப்படுத்த தங்கலால் முடியும்.என்னை போன்றே பலரின் எதிர்பார்ப்பும் இருக்கலாம் அறியேன்தவறு இருந்தால் மன்னிக்கவும்.   சிநேகமுடன்:     சக்தி (குவைத்)   அன்புள்ள சக்தி   என்னைப்பொறுத்தவரை புனைவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106616

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57

பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 2 அக்கோடையில் கர்ணன் சம்பாபுரிக்கு தெற்காக அமைந்த தென்புரி என்னும் அரண்மனையில் தங்கியிருந்தான். அரண்மனையை ஒட்டிய சிறிய அவைக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் குடியவையும் அரசவையும் கூடின. ஆனால் அவை மிகச் சிறிய அளவில் வெறும் சடங்கென்றே நிகழ்ந்தன. குடியவைக்கு முதிர்ந்து, விழியும் செவியும் மங்கிய மூன்று குடித்தலைவர்கள் தங்கள் கொடிகளுடனும் முறையாடைகளுடனும் சென்று அமர்ந்தனர். அரசவையில் சிற்றமைச்சர் கருணர் தன் மைந்தனுடன் சென்று முறைமைகள் அனைத்தையும் இயற்றினார். அவற்றை எவரும் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. நகர்மையத்திலிருந்த அரண்மனையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106459