Daily Archive: February 10, 2018

அகாலக்காலம்




முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் திரிச்சூரில் ஓர் இலக்கியக்கூட்டம். திரிச்சூர் ஒரு விந்தையான பண்பாட்டு மையம். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். வணிகத்தலைநகரம் கொச்சி. கலாச்சாரத் தலைநகரம் திரிச்சூர். அங்கே கேரள சங்கீத நாடக அக்காதமி, கேரள சாகித்ய அக்காதமி, கேரள லலிதகலா அக்காதமி போன்ற பல அமைப்புக்கள் இருப்பதனால் தெருவெங்கும் கலைஞர்கள் பகல்முழுக்க கலைப்போதையிலும் அந்திக்குப்பின் சாதாரண போதையிலும் தென்படுவார்கள். அரசியல்போதை இரண்டையும் இருகைகளில் ஏந்தியிருக்கும். அந்தக்கூட்டத்தில் நான் பேசினேன். திரிச்சூரைச்சேர்ந்த ஒரு கவிஞரின் நூல்வெளியீடு அது. …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/105987

ஆர்கைவ் தளம் முடக்கம்




அன்புள்ள ஜெ ஆர்கைவ் தளம் (www.archive.org) TRAI உத்தரவின் படி பல இடங்களில் முடக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு முடக்கப்பட்டு இணைய செயல்பாட்டாளர்களின் முயற்சியால் தடை நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் ரகசியமாக தடை செய்திருக்கிறார்கள். இது மிகவும் அபாயகரமானது. ஒரு ஜனநாயக அரசுக்கு இதைச் செய்ய, அதுவும் திருட்டுத்தனமாக செய்ய எந்த அனுமதியும் இல்லை. தீவிரவாதம் பொதுநலன் என்று எந்த காரணம் சொன்னாலும் இது ஒரு பிற்போக்குதனமே. சீனா வடகொரியா போன்ற சர்வாதிகார நாட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லையா …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/106674

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56




பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 1 அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் வந்திருப்பதை அங்கநாட்டின் பேரமைச்சர் ஹரிதர் விருஷசேனனின் அவையிலிருந்து நேரில் வந்து உரைத்தபோதுதான் விருஷாலி அறிந்தாள். அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் முந்தைய நாள் மாலையிலேயே சம்பாபுரிக்கு வந்தான் என்றும், சம்பாபுரியின் அரசப்பெருமாளிகையில் விருஷசேனனும் உடன்பிறந்தாரும் அமர்ந்து பின்னிரவு வரை சொல்சூழ்ந்தனர் என்றும், மறுநாள் சம்பாபுரியின் குடிப்பேரவை ஒன்று கூட்டப்பட்டு அதில் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை அனைத்தையும் சுஜாதன் விரித்துரைத்தான் என்றும் ஹரிதர் சொன்னார். “நம் அரசரை அஸ்தினபுரியின் அரசவைக்கு அழைக்கவில்லை. …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/106444