Daily Archive: February 9, 2018

அருட்செல்வப் பேரரசன் சந்திப்பு

  சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் வாரந்தோறும் நிகழ்ந்துவரும் பொன்மாலைப்பொழுது என்னும் நிகழ்ச்சியில் வரும் 10 [சனிக்கிழமை] மாலை 630  க்கு ஏற்பாடுசெய்யபட்டுள்ள நிகழ்ச்சியில் அருட்செல்வப்பேரரசன் வாசகர்களைச் சந்திக்கிறார். கிசாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மகாபாரதத்தை அருட்செல்வபேரரசன்  கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தன் இணையதளத்தில் தமிழாக்கம் செய்து வெளியிட்டுவருகிறார் அரசனின் இணையதளம் -முழுமகாபாரதம் மகாபாரதத்தின்  கங்கூலி மொழியாக்கம் மிகப்புகழ்பெற்றது. மகாபாரதத்தை கிசாரிமோகன் கங்கூலி 1883 and 1896  வாக்கில் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106666

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

  மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம். என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான்  சமர்ப்பணம் செய்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/578

செழியன், கடிதங்கள்

அஞ்சலி , செழியன் [கனடா] அன்பின் ஜெ!   தளத்தில் செழியன் அவர்களுக்கு தாங்கள் எழுதிய அஞ்சலியைக் கண்ட பின் இணையத்திலிருந்து அவரது ‘’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’’ நூலை தரவிரக்கம் செய்து வாசித்தேன். படைக்கலனை மட்டுமே நம்பியவர்கள் மிகத் திட்டமிட்டு எழுதிய ‘’வரலாறு’’ காலத்தின் தவிர்க்க இயலாத நிகழ்வுகளால் ஓர் அவலமாக எஞ்சி நிற்கிறது. நீதிக்காக அகம் எழுந்த ஒரு கலைஞனின் போராளியின் பதிவுகள் கலைக்குரிய அழிவற்ற தன்மையுடன் வரலாற்றின் முன் நிற்கிறது. சகோதர இயக்கத்தால் வேட்டையாடப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106603

பயண இலக்கியம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் பயணம் செய்வதை மிகவும் விரும்புபவன். பயணம் பற்றிய புத்தகங்களையும் விரும்புபவன். எனக்குத் தெரிந்த, பயணம் பற்றிய புத்தகங்களை தொடந்து படித்து வருகிறேன். தொடந்து பயணித்தும் வருகிறேன். தனித்து மது அருந்தியும், தனித்து பயணம் செய்தும் பழகவே கூடாது. அவை பெரிய போதை ஆகிவிடும். இது எனது அனுபவம். பயண இலக்கியம் பற்றி உங்கள் கருத்து என்ன? கடந்த ஐம்பது ஆண்டுகளில் நீங்கள் பொருட்படுத்தும்படி பயணம் பற்றி எழுதும் எழுத்தாளர்கள், புத்தகங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106547

கலைகளின் மறுமலர்ச்சி -கடிதம்

கலைகளின் மறுமலர்ச்சி அன்புள்ள ஜெமோவிற்கு, ஓவியர் சீனிவாசனின் ‘அச்சப்படத் தேவையில்லை’ புத்தக வெளியீட்டில் நீங்கள் பேசியதைப் பற்றி அடுத்தநாளே எனது முகநூலில் எழுதியிருந்தேன். அதையே என்னுடைய Blogயிலும் பதிவேற்றி இருந்தேன். நேற்று உங்களது இணையத்தில் கலைகளின் மறுமலர்ச்சி எனும் தலைப்பில் அந்தப் பேச்சின் சுட்டியை கொடுத்திருந்தால், மீண்டும் ஒருமுறை அந்த உரையை முழுமையாக கேட்டேன். நன்றி. அந்த உரைபற்றி நான் எழுதியது கீழுள்ள சுட்டியில் உள்ளது. https://umayaal.wordpress.com/2018/01/10/ஓவியங்களும்-சிற்பங்களும/ -உமை யாழ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/106498

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 5 பலந்தரை எழுந்து சென்றுவிடுவதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தாள். அன்னை எத்தனை பெரிய வீண்நெஞ்சத்தவள் என தோன்றியது. இந்நாடுகள் நகரங்கள் அரசவைகள் போர்கள் மட்டுமல்ல நூல்களும் கொள்கைகளும் வேதங்களும் என ஆண்கள் வகுத்து அமைத்து அவர்கள் மட்டுமே அமர்ந்து ஆடும் பெருங்களம் இது. அதில் பெண்கள் கருக்கள், பேசுபொருட்கள், சிலையுருக்கள் மட்டுமே. அவர்கள் அதில் ஈட்டுவதும் இழப்பதும் ஏதுமில்லை. அவர்கள் மீது பெண்களுக்கிருக்கும் ஒரே சொல்கோன்மை அவர்களின் குருதியை மைந்தராக்கி அளிக்கவியலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106437