Daily Archive: February 8, 2018

ஆலுவா

    நேற்று மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி இன்று [7-2-2108] காலை ஆலுவா வந்தேன். எர்ணாகுளத்திற்கு அருகே இருக்கும் இந்த ஊர் எனக்கு உணர்வுரீதியாக முக்கியமானது. இது என் அன்புக்குரிய லோகித் தாஸ் இருபதாண்டுக்காலம் வாழ்ந்தது. நான் அவரைப்பார்க்க இங்கே பலமுறை வந்துள்ளேன். இன்று அவர் இங்கில்லை. அவர் வாழ்ந்த   இல்லமும்.   ஆலுவாவுக்கு அதற்கு முன்னர் சுந்தர ராமசாமியுடன் வந்தேன். இங்கு திருவிதாங்கூர் அரண்மனை இன்று ஓர் உயர்தர விடுதி. அதில் அன்று தங்கியிருந்தோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106598/

சட்டமும் சாமானியனும்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,   வணக்கம்.   ஏற்கனவே கூறியிருந்தீர்கள், நாளிதழ்களை வாசித்துக் கொந்தளிக்காதீர்கள் என்று!. என்ன செய்வது இப்படிப்பட்ட செய்திகளிலும் எனது பார்வையில்பட்டு,மனதை மிகுந்த வேதனைப்பட வைக்கிறது.நாம் நாகரீக உலகில் வசிக்கிறோமா அல்லது காட்டுமிராண்டி கூட்டங்களிடையே வாழ்கிறோமோ தெரியவில்லை.நாட்டின்  தலைநகரிலேயே தாய்,தந்தையின் கண் முன்னால் – வேறொரு பெண்ணை காதலித்த குற்றத்திற்காக – மகனை வெட்டி படுகாயப்படுத்திய  கொடியவர்களை தடுக்கமுடியாமலும், பின் உயிருக்கு போராடிய மகனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உதவிகேட்டும் பக்கத்தில் இருந்த எவரும் உதவிக்கு வராத நிலையில்,அரைமணி நேரம் கழித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106483/

வெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு

அன்புள்ள ஜெ,   நவம்பர் 2017ல் இருந்து 28 அத்தியாயங்களாகச் சுட்டி விகடனில் வெளிவந்த தங்களின் ‘வெள்ளி நிலம்’ தொடரை, விகடன் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்து வந்தேன்.   ஸ்பிடி சமவெளியில் ஒரு பௌத்த மம்மி கண்டுபிடிக்கப்படுவதில் ஆரம்பித்து,  அதைத்திருட முயலும் ஒரு குழு, ராணுவத் தலையீடு என்று ஒரு புதையல் வேட்டையைப்போலத் தொடர்ந்து திபெத் வரை சென்று முடிகிறது. வெறும் கதையாக இல்லாமல், அந்த நிலத்தைப்பற்றிய அடிப்படைச் செய்திகள், சரித்திரம்,மக்களின் உடலமைப்பு, வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், தற்போதைய ராணுவக் கேந்திரங்கள், தகவல் தொடர்பு, பனிமலை அவர்களுக்கு அளிக்கும் நடைமுறைச்சிக்கல்கள், பனிப்புயலால் ஏற்படும்  ஆபத்துகள், தற்காப்பு என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106553/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 4 சிற்றவைக்கூடத்தில் நின்ற வாயில்காவலனிடம் பலந்தரை அவளில் எப்போதும் எழும் எரிச்சல் கலந்த குரலில் “என் வரவை அறிவி” என்றாள். எப்போதும் ஆடையில் ஒரு பகுதி அவள் உடலில் இருந்து சரிந்து எரிச்சலை தான் வாங்கிக்கொள்ளும். அன்று அவளுடைய தலையாடை சரிந்தபடியே இருந்தது. “உச்!” என ஒலியெழுப்பி அவள் அதை இழுத்து அமைத்தாள். எரிச்சலுடன் அமைப்பதனாலேயே அது கொண்டைமேல் சரிவர அமையாமல் முன்னால் இழுபட்டது. அவள் கை தூக்கியபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106434/