Daily Archive: February 7, 2018

திருத்தர்

  ஜெ   இப்போது பலரும் நாவல் எடிட்டிங் செய்வதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு படைப்பிலக்கியத்தை இன்னொருவர் எடிட்டிங் செய்யமுடியுமா? செய்வதென்றால் அதற்கான எல்லைகள் என்ன? உங்கள் படைப்புகளை எடிட்டிங் செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு உங்கள் நூல்களில் கிரெடிட் கொடுத்திருக்கிறீர்களா? இவை இன்றைய சூழலில் பதிவுசெய்யப்படவேண்டும் என நினைக்கிறேன்   ஆர்.மகேஷ்   அன்புள்ள மகேஷ்,   சில அடிப்படை விளக்கங்கள். தமிழில் எல்லா நூல்களும் எல்லா காலகட்டத்திலும்நூல்திருத்தல் [எடிட்டிங்] செய்யப்பட்ட பின்னரே வெளியாகியிருக்கின்றன. பண்டைநாளில் அதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106575/

யாக்கை

சாரமுணர்ந்து எழுதப்படும் வலுவான விமர்சனங்களின் வழியாக எழுத்தாளன் ஆற்றலுடன் எழமுடியும் என்பதற்கான சான்று இந்தக்கதை. நவீன் எழுதிய சிறந்த கதை எனச் சொல்வேன். அவர் கதைகளில் முன்னர் இருந்த பெரும்பாலான சரிவுகள் நீங்கி உருவிய வாள்போல் வடிவம் கொண்டிருக்கிறது. இரு யதார்த்தங்கள் ஒன்றையொன்று முட்டி விலகிச்செல்லும் புள்ளி நுட்பமாகத் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. சென்ற முறை போயாக் மீதான விமர்சனங்களின்போது அடுத்தகதையை எழுதிவிட்டேன் என்று நவீன் சொன்னதன் பொருள் இப்படைப்பில் உள்ளது   ஜெ     அவர் தலைமுடியைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106570/

கஞ்சி கடிதங்கள்-2

  கஞ்சிமலையாளம் சார் வணக்கம்   ரொம்பநாளாயிருச்சு சார் இப்படி வாசிச்சு சிரிச்சு. வெண்முரசும் போர் முரசு கொட்டிட்டு இருக்கறதாலயும், கல்லூரியிலும் தரச்சான்றிதழ் பணிகளில்  மூழ்கி இருப்பதாலும் சிரிக்கவே மறந்து போயிருந்தேன். கஞ்சி மலையாளம் படிச்சுத்தான்  வெகுநாட்களுக்கு அப்புறம் சிரித்தேன்,   10 ஆம் வகுப்பு தேர்வுக்கு மும்முரமாக படிப்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்த  தருணையும் வரச்சொல்லி வாசித்துக்காட்டி இரண்டு பேருமாக சிரித்தோம். அதிலும் ’எந்து பட்டீ’ மற்றும் ’பறவை இல்லை’’  எப்போ நினச்சாலும் சிரிச்சுருவொம் இனி   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106493/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 3 அன்னை அருகே வந்ததை பலந்தரை அறியவில்லை. அவள் தன் முன் அமர்ந்த அசைவைக் கண்டு திரும்பி நோக்கினாள். அன்னை நீள்மூச்சுவிட்டு “உன்னிடம் பேசிய பின் சுகேசன் என்னிடம் வந்தான்” என்றாள். முழங்கையை தன் மடியிலூன்றி முன்னால் குனிந்து அவள் விழிகளை நோக்கி “அரசரும் மைந்தரும் அஸ்தினபுரியிலிருந்து மீண்டு வந்துவிட்டனர். அஸ்தினபுரியுடன் படைக்கூட்டில் முத்திரை சாத்திட்டிருக்கின்றனர்” என்று சொன்னாள். “ஆம், அறிவேன்” என்றாள் பலந்தரை. அரசி அவளிடம் மேலும் பேச விரும்பினாள். அதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106352/