Daily Archive: February 6, 2018

மாத்ருபூமி இலக்கியவிழா

இலக்கியத்திருவிழாக்களில் எனக்கு எப்போதுமே ஒர் ஒவ்வாமை உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இருந்தாலும்கூட அவ்வப்போது கலந்துகொள்ளும்  கட்டாயம் நிகழ்வதுண்டு. சென்ற ஆண்டு மும்பை கேட்வே இலக்கியவிழா, கேந்திர சாகித்ய அக்காதமி இலக்கியவிழா இரண்டிலும் கலந்துகொண்டேன்.   இத்தகைய விழாக்கள், வேறு எந்த விழாக்களையும்போலவே, மாபெரும் சராசரித்தனம் கொண்டவை. அதில் பங்குகொள்பவர்களின் சராசரி அது. கூர்மையாகவும் தீவிரமாகவும் எதுவும் நிகழ அங்கே வாய்ப்பில்லை. காரணம் அனைத்துக்குரல்களுக்கும் இடம் கொடுக்கவேண்டும். பெருந்திரளாக வாசகர்கள் பங்கேற்கவேண்டும். அவ்வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் தோராயமாகவே அறிமுகமாகியிருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106532/

அஞ்சலி –தகடூர் கோபி

அஞ்சலி –தகடூர் கோபி அன்பிற்குரிய நண்பர் தகடூர் கோபாலகிருஷ்ணன் 41 வயதில் மறைந்துவிட்டார். மகள், மகன், மனைவிக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நாங்கள் எல்லாம் யூனிகோட் எழுதுருவை தமிழின் எழுதுரு ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது தகடூர் கோபியின் பங்களிப்பு அற்புதமாக இருந்தது. உயர்நிலைப்பள்ளிகள் எல்லாவற்றிலும் இணையத்தில் வலைப்பதிவுகள், … எழுத விருப்பப்பாடமாக தமிழில் தட்டெழுதுதல், ப்ளாகர், வொர்ட்ப்ரெஸ், முகநூல், ட்விட்டர், … பற்றிய அறிமுகம் வைப்பதை தமிழ்நாடு அரசு செய்தால் கோபி போன்றோருக்குச் செய்யும் நல்ல அஞ்சலியாய் அமையும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106519/

காவிய வாசிப்பு -கடிதம்

வணக்கம் திரு ஜெயமோகன் போன  வருடம் படிக்க வேண்டும் என முடிவு  செய்து மார்ஸல் ப்ரௌஸ்ட் இன் in search of lost time படித்து முடித்தேன் அதேபோல  இந்த முறைஜேம்ஸ்  ஜாய்ஸ்   இன்  யூலிஸ்ஸஸ்  படிக்க வேண்டும் என நினைத்தேன்  அதற்காக ஹோமர் இன்  ஒடிசி மற்றும் இலியட் படித்து முடித்து பிறகு கிரேக்க  நாடகங்களையும்  படித்தேன் குறிப்பாக aeschylus oresteia பற்றி கூற வேண்டும் .   கொலைக்கு கொலை தான் பதில் என்பதை  போல  முதல் இரண்டு நாடகங்களில் கூறி  பிறகு வஞ்சம்  என்றும்  வஞ்சத்தையே  பெற்று தரும்  கொலை யை கூட   தேவைப்பட்டால் நீதியை கொண்டு தான்  தண்டிக்கவேண்டும் என கூறி முடித்தது என்னை மிகவும் கவர்தது  காந்தி ஒரு கண்னுக்கு பதில் மற்றொரு  கண் என்றால் இந்த உலகமே குருடாகிவிடும்என்றது  புரிந்தது.  5 BC நூற்றாண்டில்  இவ்வாறான ஒரு செறிந்த  அரசியல் கட்டமைப்பும்  அவற்றை மைய படுத்தி  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106375/

ஜப்பானில் நாஞ்சில்நாடன்

அன்புள்ள ஜெ, முழுமதி அறக்கட்டளையின் 2018ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்திருந்தோம். பிப்ரவரி ஒன்றாம் தேதி தோக்கியோ வந்து சேர்ந்தார். மூன்றாம் தேதி கவாசாகியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துக்கொண்டு, தாய்மொழியின் அவசியம் குறித்தும், சங்க இலக்கியம், கம்ப ராமாயணம் குறித்தும் மிகச்சிறப்பான உரையை வழங்கினார். அவருக்கு விழாவில் நான் அளித்த சிறிய வரவேற்புரையை இணைத்துள்ளேன். என்றும் அன்புடன் செந்தில்குமார் தோக்கியோ     அனைவருக்கும் வணக்கம். நண்பர்களே, நாஞ்சில் நாடனின் ஒரு கதையிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். காளியம்மைக்கு திருமணமாகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106522/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 2 பலந்தரை காசிநாட்டுக்கு திரும்பி வந்தபோது அவள் அன்னை துறைமுகப்பிலேயே அவளுக்காகக் காத்து நின்றிருந்தாள். படகிலிருந்து அவள் இறங்கியதும் ஓடிவந்து தோள்தழுவி நெஞ்சோடணைந்து “மீண்டு வந்தாயா? நன்று, அங்கேயே இருந்துவிடுவாயோ என்று அஞ்சினேன்” என்றாள். “அங்கு எனக்கென ஏதுள்ளது?” என்றாள் பலந்தரை. “அங்கு பிற அரசியர் இருக்கக்கூடுமென எனக்கு சொல்லப்பட்டது” என்றாள் அன்னை. “பிறந்த நாட்டிற்குச் செல்ல சேதிநாட்டு அரசியர்களுக்கு வாய்ப்பில்லையல்லவா? அவர்களின் தமையன் இளைய யாதவரால் கொல்லப்பட்டபின் அந்நகர் அவர்களை எதிர்கொள்ளாது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106349/