Daily Archive: February 5, 2018

அஞ்சலி , செழியன் [கனடா]

    கனடாவுக்கு நான் 2001ல் செல்லும்போது அறிமுகமான நண்பர் செழியன். அவருடைய நினைவுகளின் தொகுப்பான  ஒரு போராளியின் நாட்குறிப்பு அப்போது   சிறுநூலாக வெளியிடப்பட்டு விற்காமல் அடுக்கடுக்காக அவரிடம் இருந்தது. நான் சில பிரதிகள் வாங்கிவந்தேன். அதை வாசித்தபோதுதான் முதன்முறையாக ஈழப்போராட்டத்தின் நேரடி அனுபவ முகத்தை வாசித்தேன்.  இன்று மேலோட்டமான எழுத்தாளர்கள் காற்று அடிக்கும் திசைகளைக் கணித்து ஈழப்போராட்டம் பற்றி பொய்களையும் பிரச்சாரங்களையும் புனைவுகளாக எழுதிக்குவிக்கும் ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான நூல் அது.   ஈழப்போராட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106514

ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்?

  காவியத்திற்கும் நாவலுக்குமான வேறுபாடு என்ன? காவியம் என்பது ஒரு பண்பாட்டில் புழங்கும் கதைகளையும் அடிப்படைப் படிமங்களையும் தொகுத்து ஒற்றைக் கட்டுமானமாக ஆக்குகிறது. அதன் வழியாக ஒரு மையத்தை நிறுவுகிறது. அது அந்தக் காவியத்தின் தரிசனம் என்கிறோம்.   கேரளத்திலுள்ள ஆலயங்களில் மையத்தில் குடம் என்ற அமைப்பு உண்டு. எல்லா உத்தரங்களும் ஒன்றுசேரும் இடம். குடம்பூட்டுவது பெருந்தச்சன் செய்யவேண்டிய பணி. காவியம் என்பது ஒரு சமூகத்தின் குடம்.   ஒருசமூகம் என்பது மக்கள் சேர்ந்து ஒன்றாக வாழும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106484

கஞ்சி -கடிதங்கள்

கஞ்சிமலையாளம் அன்பிற்கினிய ஜெ சார்,   மரவள்ளி கிழங்கு, அப்பளம் தவிர மற்ற எல்லா துணை உணவுகளும் அந்த கடையில் நான் சாப்பிட்டுள்ளேன். பலாக்காயை கீறி அதனுடன் உப்பும் காரமும் குறைவாக சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவி இட்டு கஞ்சியுடன் தருவார்கள். எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அரிசியின் மணம்தான் கஞ்சியின் தனிச்சிறப்பு. அந்த மணம் தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக கிடைக்கும் எந்த அரிசியிலும் இல்லை.   கேரளம் வந்தது முதல் பல சத்யாக்களில் சாப்பிட்டுள்ளேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106429

நந்தகுமார் வலைப்பூ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உண்மையில் எளிதில் எதற்கும் சுருங்கிக் கொள்பவனாக உணர்கிறேன். ஆனால் அதனாலேயே செயல் படாமல் போய் விடுவேனோ என்ற பயமும், அடிமண்டிய சதுப்பைப் போல கொள கொளவென்று ஆக்கியிருக்கிறது. விமர்சனங்களையும் எதிர்வினைகளையும் ஏற்கும் தைரியமற்ற எனது சுபாவம் கழிவறையில் தலை மேல் வெறித்து நோக்கும் பல்லியைப் போல அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஆனால் நான் ஏதோ எனக்குள் செய்து கொண்டிருக்கிறேன் எனக்காக என்பது மட்டுமே ஒரு சிறிய ஆசுவாசம். இன்றளவும் இதன் மேல் எந்த நம்பிக்கையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106385

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 1 காசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச் சுழற்றியபடி, தனக்குள் ஓரிரு சொற்களை முனகியபடி, அவ்வப்போது கீழே விரிந்துகிடந்த முற்றத்தை எட்டி நோக்கியபடி காத்திருந்தாள். அரைவட்ட முற்றத்தில் நின்றிருந்த ஏழு புரவிகளும் காற்றில் திரை அசைந்த மூன்று பல்லக்குகளும் பொறுமையிழந்தவைபோல, ஏதோ காற்றில் மண்ணிலிருந்து எழுந்துவிடப்போகின்றவைபோலத் தோன்றின. இருபத்திரண்டு தலைமுறைகளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106336