2018 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2018

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’

ஜன்னல் இதழில் தொடராக வெளிவந்த   ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ இதுவரை நூல்வடிவம் பெறவில்லை. இணையத்திலும் வெளியாகவில்லை. அருண்மொழி அவற்றைத் தொகுத்து மின்னூலாக ஆக்கியிருக்கிறாள். இணைப்பு கீழே ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ நூல் முன்னுரை இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள்...

எழுத்தாளனின் ரயிலடி

ஜெ, இந்தக்கடிதம் உங்கள் பார்வைக்கு, இந்த ரயிலடி விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன? விமலாதித்த மாமல்லன் மின்நூல்களுக்கான உரிமையை ஆசிரியர் விட்டுக்கொடுக்கவேகூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார் ஜெயராம் *** அன்புள்ள ஜெயராம், ஓர் ஆண்டுக்கு முன் என நினைக்கிறேன், சோ.தருமன் அழைத்திருந்தார்....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74

பகுதி பத்து : பெருங்கொடை – 13 கர்ணன் இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருப்பதை சுப்ரியை கண்டாள். அவை அவருடைய சொல்லுக்காகவே முதற்கணம் முதல் காத்திருந்தது எனத் தெரிந்தது. காசியப கிருசர் “அவையின் ஆணை அவ்வாறென்றால்...

கேரளத்தின் காலனி

மலையாள ‘யானை டாக்டர்’ ஒரு மொழியாக்கம் அல்ல, மறு ஆக்கம். மூலத்தைவிட முப்பது விழுக்காடு நீளம் மிகுதி. அதில் ஒரு பகுதி அந்நூல் வெளியானதுமே வாதமாக ஆகியது. வசைகளும் இருந்தன. அதில் மலையாளிகள்...

திராவிட இயக்கங்கள் -கடிதம்

திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு   ஜெ, திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு கட்டுரையை வாசித்தேன். அடிப்படையில் திராவிட இயக்கங்களின் பிறப்பு சாதிக்காழ்ப்பிலிருந்து. பரப்பியல் அரசியலில் இருந்து. ஆனால் அதிலிருந்து ஜனநாயக அரசியல் நோக்கிய ஒரு நகர்வை அண்ணா செய்தார்....

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73

பகுதி பத்து : பெருங்கொடை - 12 அவைக்கு வருபவர்களை அறிவிக்கும் சங்கொலிகள் ஓய்ந்ததும் வேள்வியரங்கு முழுமைகொண்டுவிட்டதா என்று காசியப கிருசர் எழுந்து நின்று நோக்கினார். அவருடைய மாணவர்கள் அந்தணர்நிரையிலும் அரசர்நிரையிலும் முனிவர்நிரையிலும் நின்று...

மொழிகள் – ஒரு கேள்வி

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். இன்றைய 'அகாலக்காலம் - கடிதங்கள்' கட்டுரையுடன் இணைத்துள்ள தினமணி நாளிதழில் உள்ள செய்தியில் எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள் "உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருப்பதாக கணக்கிட்டிருப்பதாகவும்,அதில் இரண்டே இரண்டு மொழிகள் தான் இடையறாமல் பேசப்படும் மொழியாகவும்,எழுதப்படும்  மொழியாகவும் உள்ளன...

அடிப்படைவாதம் பற்றி…

தேசியகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் புர்க்காவும் சவூதி அரேபியாவும் அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு நிசார் அகமது அவர்களின் கேள்வி அதற்கு தாங்கள் அளித்திருந்த பதில் இன்று காலை வாசித்துக்கொண்டிருந்த போது எழுதத் தோன்றியது. வேண்டுமென்றே தவிர்த்தேன். இன்று மாலை இங்கு...

துளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்

ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா ஜெ     நான் ஒருபோதும் சலிப்பூட்டும் உரையாடல்காரனாக இருக்க விரும்புவதில்லை. -  கீழ்ப்படிதல், முரண்படுதல் பற்றி...   உண்மைதான் சுவாரஸ்யமான அபாரமான உரையாடல்காரர் நீங்கள். வேளிர் மலைப் பயணத்தில் அனுபவப் பூர்வமாய் உணர்ந்து கொண்டேன். அதிகாலை...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72

பகுதி பத்து : பெருங்கொடை - 11 முதற்புலரிக்கு முன்பே அசலையும் தாரையும் கர்ணனின் மாளிகை முகப்புக்கு வந்தனர். வேள்வியில் அமர்வதற்கு உலோகங்களோ, தோலோ, பட்டோ கூடாதென்பதனால் வெண்ணிற பருத்தியாடைகளும், வெண்சங்கு போழ்ந்த வளையல்களும்,...