Daily Archive: January 29, 2018

இயற்கையை அறிபவனின் அறம்

  ஆசிரியருக்கு , நாம் 3 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் ஒரு வனப்பயணம் போயிருந்தோம், அப்போது காலை நடைக்குக் கிளம்பும் முன் ஒரு மலபார் அணிலைப் பார்த்தோம். நான் இயற்கை மற்றும் அத்வைதம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் D.H. Lawrence ” இந்துக்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களின் மதச் சடங்குகளிலும் அன்றாட வாழ்விலும் இயற்கை இணைந்துள்ளது, உதயம் -அஸ்தமனம் -சந்த்யா வந்தனம் போல , இயற்கையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ” எனக் கூறி உள்ளார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31237

கடிதங்கள்

அன்பின் ஜெ,   வணக்கம்.   புதியவர்களின் சிறுகதைகள் பற்றிய விவாதம் தொடங்கியதும் இலக்கியம் தொடர்பாக உரையாடும் நண்பர்களை உள்ளடக்கிய எங்கள் வாட்சப் குழுவில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தினமும் காலையில் ஒரு சிறுகதையை வாசிப்பது. நாள் முழுவதும் அதை அசைபோட்டு, நண்பர்களுக்கிடையே விவாதித்து, முடிந்தவரையில் அவற்றைப் பற்றி எழுதியும் விட வேண்டும் என்றெண்ணியே செயல்பட்டோம். சங்கர் உங்களுக்கு எழுதிய கடிதத்தைவிட இன்னும் காத்திரமாகவே எங்களுடன் உரையாடினார். அதன் தொடர்ச்சியாகவே கதைகளைப் பற்றிய எங்களுடைய கடிதங்களும் உங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106238

அஞ்சலி- தர்மசேன பத்திராஜ

இலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர் திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை , கண்டியில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக செய்தி வந்தது. இன்றைய தினமே மாலையில் கண்டி மஹியாவ மயானத்தில் அவருக்கு இறுதிநிகழ்வுகளும் நடந்துவிட்டன! திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/106297

விஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்

அன்புள்ள ஜெயமோகன்,   விஷால் ராஜா  எழுதிய ‘முடிவின்மையில்  நிகழ்பவை’ ஏற்கனவே  வாசித்தாலும் நீங்கள்  குறிப்பிட்டதைத்  தொடர்ந்து   மீண்டும் இக்கதையை  வாசித்தேன்.  அதையொட்டி  அவர் தளத்தில்  இருந்த  வேறு   சில  கதைகளையும்   ஒருசேரமீண்டும் வாசித்தேன்.  என்  அபிப்பிராயத்தை  பகிர்ந்துகொள்ளத்  தோன்றியது.   ஆகவே இப்பதிவு.       “முடிவின்மையில் நிகழ்பவை”   காலங்கள் மாறுவது  போல உணர்வுகளும்  மாறிக்கொண்டே  இருக்கின்றன.  சிவப்பு, மஞ்சள்,  நீலம் என்று மூன்றாகஉறவின் நிலைகள் பிரிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் உணர்தலிலும்  பகிர்தலிலும்  இருக்கும் அன்பு சற்றுக்காலம்செ ல்ல வடிகிறது, சந்தர்ப்பவசமாக நீர்ந்து போகிறது.  பின்பு துளிர்க்கும்  அன்பு  சொல்லப்படாமலோ  ஏற்றுக்கொள்ளப்படாமலோ போவதற்கான வாய்ப்பைக்  கொண்டிருக்கின்றது.  இதுதான் அதீத பிரிவையும்வேதனையும் தருகிறது.  இதற்குள் தோய்ந்து  எழுதல்தான்  கடினமானதாக இருக்கிறது. உண்மையில்  இந்த உறவின் உணர்வுகள் எல்லாம் தனித்தனியே  மூன்று  பிரிவாக  நிகழ்கின்றனவா என்றால்  இல்லைஎன்றே தோன்றுகின்றது. எல்லா நேரத்தில்  மூன்று  வர்ணங்களும்  உள்ளுக்குள் மாறிக்கொண்டே  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106217

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 2 அசலை வந்திருப்பதை அறிவிக்க லதை வந்து வாயிலில் நின்றாள். கையிலிருந்த பீலியை பேழைக்குள் வைத்தபடி உள்ளே அனுப்பும்படி பானுமதி தலையசைத்தாள். அவள் பீடத்தில் அமர்ந்தபோது அசலை உள்ளே வந்தாள். அமரும்படி பானுமதி கைகாட்ட அசலை அமர்ந்து ஆடையை கால்கள் நடுவே அமைத்தாள். பானுமதி “அரசரின் சேடி வந்திருந்தாள்” என்றாள். “வல்லபையா? அவள் வந்தால் அது அரசரின் செய்தி அல்ல, கணிகர் அனுப்பியது” என்றாள் அசலை. “ஆம், அறிவேன்” என்றாள் பானுமதி. “நாம் கோட்டைமுகப்புக்குச் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106206