Daily Archive: January 26, 2018

இளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் – பத்ம விருதுகள்

இவ்வாண்டுக்கான பத்மவிபூஷண் விருது இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துவகையிலும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது இது. இளையராஜா தமிழ்மக்களால் ஏற்கப்பட்டு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இது அவரை தேசம் தன் தலைமக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் தருணம்.   ராஜா எனக்கு ஓர் இசையமைப்பாளர் மட்டும் அல்ல. இன்றிருப்பவர்களில். படைப்பூக்கத்தின் பொருட்டு நான் நிமிர்ந்து ஆசிரியரென நோக்கத்தக்க ஒரே ஆளுமை. நம் மரபின் பெருவெளியிலிருந்து தனக்குரிய மெய்மையை எடுத்துக்கொண்ட நல்லாசிரியன். கலையே மெய்யுசாவும் வழியுமாகும் என காட்டும் ஞானி. நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106162/

வானம்

  நினைவுநாள் என ஒரு குறிப்பு எழுதினால் அது சம்பிரதாயமாக ஆகிவிடும். எனவே அப்படி எழுதும் வழக்கம் எனக்கில்லை. ஆனால் இறப்புகள் அலைக்கழிக்கின்றன. சென்னைக்கு பத்தொன்பதாம் தேதி ரயில் ஏறும்போது வானவன் மாதேவி நினைவு வந்தது. முழு முயற்சி கொண்டு அந்நினைவைத் தள்ளி வைத்தேன். இரவில் மீண்டும் அவர் நினைவு. இறந்தவர்கள் விண்மீன்களாக ஆகிறார்கள் என்பது ஒரு சிறுவயது நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கைகளை இப்போதும் இறுக்கி வைத்துக்கொள்ள முடியும் என்றால் எத்தனை நன்று.   ஊழ் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106159/

காலம் செல்வம் வேளாங்கண்ணியில்…

  அன்பின் ஜெ,   வணக்கம். கடலூர் சீனு வீட்டில் கடைசியாய் குடித்த சுக்குகாபி சிறு ஏப்பமாய் வெளியேறுகையில் நாகப்பட்டினத்தை கடந்திருந்தேன். இரவு உணவிற்க்கு வேளாங்கண்ணியில் “காலம்” செல்வம் அவர்களுடன் அமர்வதாக ஏற்ப்பாடு. “தம்பதி சமேதரா வந்திருக்காங்க, கியூபா புரட்சி பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டு பீதிய கிளப்பிடாத என்று கதிரேசனிடம் ஏற்கனவே சத்தியம் வாங்கியிருந்தாலும் ” நீங்க வந்து சேர இன்னும் எவ்வளவு நேரமாகும்?” ந்னு செல்வம் போனில் அழைத்து  கேட்க, ஆக்ஹா…. நம்ம ஆளு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106134/

பாண்டி,கடலூர் -கடிதங்கள்

19.01.2018 மாலை பாண்டி சென்று ஷிவாத்மாவை சந்தித்தபோதுதான் ஹரி கிருஷ்ணனை முதல் முதலில் பார்த்தேன்.பாண்டி வெண்முரசு நிகழ்வுகளை முன்னத்தி ஏர்,உடன் மணிமாறன்,பேராசிரியர் நாகராஜன் போன்றவர்களின் பக்கபலத்தோடு ஒரு வருடமாக இந்நிகழ்வை நடத்தி வருவதையும் அதற்கு சென்னை நண்பர்களின் கருத்துதவிகளையும் பற்றி விளாவரியாக கூறினார்கள்.கடலூர் சீனு மற்றும் ஷிவாத்மா போன்றோரின் கூட்டு வலு சேர்த்ததைபற்றியும் சொன்னார்கள். இரவு இனிமையான பேச்சுகளால் நிறைந்தது.   மறுநாள் காலை ஷிவாத்மா வீட்டில் ராகியின் பில்டர் காபியை  ரசித்து குடித்துவிட்டு ஆஸ்த்ரேலியா கார்த்தியுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106139/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41

பகுதி ஆறு : பொற்பன்றி – 6 கலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் நின்றிருந்த கலிங்கப்பூசகர் ஊர்வர் கைதூக்க அனைத்து இசைக்கலங்களும் ஒலியவிந்தன. அவர் உரத்த குரலில் “இருள்முகத்தோன் வெல்க! எதிரிலான் வெல்க! விழிவலியன் வெல்க!” என்று கூவினார். “வெல்க! வெல்க!” என குரல்கள் இணைந்தொலித்தன. ஊர்வரின் உடல் மழைபட்ட கரும்பாறையென இறுகித்திரண்டிருந்தது. பெரிய குடவயிற்றின்மேல் வெள்ளெலும்பில் செதுக்கிய மணிகளாலான மாலை துவண்டது. எலும்புமணிக் கங்கணம் அணிந்த வலக்கையின் சுட்டுவிரலில் நீலமணியாழி அணிந்திருந்தார். அவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் அவரைப்போலவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106157/