Daily Archive: January 25, 2018

மண்மணம்

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வரும் வழி பெரும்பாலான குமரி மாவட்டத்துக்காரர்களுக்குப் பிடித்தமானது. அவர்கள் குமரி எல்லையைத் தாண்டிச்சென்ற முதல் அனுபவமே திருச்செந்தூர் பயணமாகத்தான் இருந்திருக்கும். விடியற்காலை நாலரை மணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பும் பஸ்ஸில் தான் அனேகமாக சென்றிருப்பார்கள். பஸ் இலைவெளுக்கும் நேரத்தில் நெல்லைக்குள் நுழைந்து மண்வெளுக்கும் நேரத்தில் சாத்தான்குளம் தாண்டிச்செல்லும். நெல்லை நாகர்கோயில் சாலைபோல அகலமானதல்ல செந்தூர்சாலை. சின்ன ஓடை போல வளைந்து வளைந்து பல இடங்களில் தேங்கி நின்று தயங்கிச் செல்லக்கூடியது. வழியில் என்னன்னவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34389/

வைரத்தின் ஒளிபட்ட சிறு வளைவு

  அப்போது ஜெயமோகன் அறிவித்தார். இவ்வாண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை சீ.முத்துசாமிக்கு கொடுக்கவுள்ளோம். எனக்கு அது அதிர்ச்சியையும் கூடவே மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்தக் கூட்டத்தில் நான் எதிர்ப்பார்த்த சலசலப்பு இருக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே சிலர் அவர்களுக்குள் முகபாவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். என் கண்கள் சீ.முத்துசாமியைத் தேடின. தூரத்தில் அவர் அமர்ந்திருந்தார். யாருக்கோ என்னவோ நடப்பது போல அங்கும் இங்கும் ஒரு பார்வை பார்த்தார். கூலிம் பிரம்மானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இரண்டு நாட்களுக்கான இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்ற சமயத்தில்தான் இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106116/

காந்தி, இளையராஜா

அன்புள்ள ஜெயமோகன்,   காந்தியின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்த இந்த அற்புதம் இன்று காணக் கிடைத்தது https://www.youtube.com/watch?v=Z86LscyJhNY   நம் தளத்திலுள்ள காந்தி பற்றிய கட்டுரைகளாலும் உங்கள் உரைகளாலும் நானடைந்த மக்களுக்கும் காந்திக்குமான உறவைக் குறித்த சித்திரத்தின் ஒரு பகுதி அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.   துவக்கத்தில், தன் வீட்டின்முன் நடந்து வரும் காந்தியைக் கண்ட முதிய பெண்மணி கடவுளைக் கண்டவர்போல் அதிர்ந்து வணங்குகிறார். தெருவில் நிற்கும் முதியவரோ தெய்வ சந்நிதியில்போல் பணிந்து நிற்கிறார்.   வீட்டினுள்ளிருந்து ஓடிவந்து கைகூப்பும் இளம்தாயின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106039/

சிறுகதை விவாதம் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ,   சிவா கிருஷ்ணமூர்த்தியின் “மறவோம்” குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். உண்மையிலேயே மிக நல்ல கதை. இந்தக் கதையை சென்னையின் வாசாகசாலை அமைப்பின் “கதையாடல்” நிகழ்வில் மிக விரிவாகப் பேசினேன் (கதை வெளியான மாதம்). நினைவுகள் எழுகின்றன.     இப்போது உங்களுடைய “பனி மனிதன்” வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் மற்றைய புனைவுகளில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது. முழுதும் முடித்து அனுபவம் பகிர்வேன்.     அன்புடன், தீனதயாளன்     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106112/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40

பகுதி ஆறு : பொற்பன்றி – 5 கரிய புரவியின் உடலில் செங்குருதியுமிழும் சிறு புண் என தொலைவில் காட்டின் நிழல்அலைகளுக்குள் சிவந்த சிறிய வெளிச்சம் தெரிந்தது. தாரை “அடிகளை அளந்து வைக்கவும். நாம் நடந்துவருவதை பறவைகளும் குரங்குகளும் நோக்கிவிட்டன. அவை நாம் சீராக சென்றுகொண்டிருப்பதுவரை மெல்லிய ஒலியே எழுப்பும். நம்மில் எவரேனும் அடிசறுக்கி மிகையசைவு அளித்தால் அஞ்சி ஓலமிடத் தொடங்கிவிடும்” என்றாள். “உலர்ந்த சுள்ளிகள், சருகுக் குழிகள், பெரிய கூழாங்கற்கள் ஆகியவற்றின்மேல் கால் ஊன்றவேண்டாம்… நான் கால்வைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106119/