Daily Archive: January 24, 2018

சென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை

சென்ற பதினைந்துநாட்களாகவே கடுமையான வேலை. வெண்முரசு தொடங்கியபின் இது ஒரு நோன்பு போல. பத்துநாள் பயணம் என்றால் பத்து வெண்முரசு அத்தியாயங்கள் முன்னால் சென்றுவிட்டிருக்க வேண்டும். அதற்கு நாளொன்றுக்கு இரண்டு அத்தியாயங்கள் எழுதவேண்டும். கூடவே வேறு எழுத்துவேலைகள். வெண்முரசு இப்போது நிறைய குறிப்புகள் தேடி எழுதவேண்டிய நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே நாளொன்றுக்கு எட்டுமணிநேரமாவது எழுதியாகவேண்டிய நிலை.   19 ஆம் தேதி முதல் ஒருவாரம் ஊரில் இருக்கமுடியாதபடி பயணங்கள். நடுவே வீட்டுக்கு வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். பாளையங்கோட்டையிலிருந்து இசக்கிராஜா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106078

ஞாநி,முகநூல் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ..   ஞாநி என்றால் அன்பு… அவர் வீடு என்பது ஒரு வேடந்தாங்கல்… அவரது வாழ்க்கை என்பது சமரசமற்ற நேர்மையான கறாரான பார்வை கொண்டது..உங்கள் அஞ்சலிக் கட்டுரை அவரது மிகப் பெரிய ரசிகன் என்ற முறையில் எனக்கு நெகிழ்ச்சி அளித்தது..   ஏதாவது நிகழச்சி என்றால் தனக்கே உரித்தான கரகர குரலில் கண்டிப்பா வந்துருங்க , என்ன என்பார்..  நான் இருக்கிறேனா என தெரிந்து கொண்டு  எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு வாங்க என்பார்…  நேரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106076

புதுச்சேரி,கடலூர் கூடுகை -கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான நிலப்பரப்பில் பயணித்த போது நான் நேரடியாக அடைந்த முக்கியமான அனுபவம் என்பது இந்த தேசம் இராமாயணத்தாலும் மகாபாரதத்தாலும் இணைக்கப்பட்டுள்ளது என்பதே. அவர்களுக்கு நான் பேசும் மொழி தெரியாது; புரியாது. ஆனால் கங்கை என்ற ஒற்றை வார்த்தை அவர்களுக்கு அனைத்தையும் உணர்த்திவிடுகிறது என்பதைக் கண்டேன். அந்த ஒற்றை வார்த்தையின் சக்தியே என் மீது அவர்கள் பரிவு கொள்ள காரணமாயிருந்தது. பயணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106073

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39

பகுதி ஆறு : பொற்பன்றி – 4 காந்தாரியின் அறைமுன்னால் வெளியேவந்து துச்சளையை கைபற்றி அழைத்துச்சென்ற சுதேஷ்ணை “என்னடி களைத்துப்போயிருக்கிறாய்?” என்றாள். துச்சளை “நானா? நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள் சுதேஷ்ணை. “இங்கே நிகழ்வனவற்றை கேட்டால் சிரிப்பா வரும்? வாடி” என்று தேஸ்ரவை அவள் இன்னொரு கையை பற்றினாள். தசார்ணை தாரையிடம் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றாள். “பேரரசரை பார்க்கச் சென்றோம்” என்றாள் தாரை. எப்படி இருக்கிறார் என அவள் கேட்பாளென தாரை எண்ணினாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106001