Daily Archive: January 17, 2018

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சிலுவைராஜ் சரித்திரம் குறித்த என்னுடைய கட்டுரை ஆம்னிபஸ் தளத்தில் வெளியாகி உள்ளது http://www.omnibusonline.in/2018/01/blog-post_14.html கட்டுரை குறித்து ,தங்கள் கருத்துக்களை அறிய ஆவல் வி மணிகண்டன் *** அன்புள்ள மணிகண்டன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். புத்தக மதிப்புரை என்பது பொதுவாக அந்த நூலைப்பற்றிய உங்கள் அப்போதைய மதிப்பீட்டை பதிவுசெய்வது. இது மதிப்புரை விமர்சனம் என்பது சற்று மேம்பட்ட ஒன்று. அது பிறிதொரு பெரிய அறிவுப்புலத்தில் ஒரு புத்தகத்தை நிறுத்தி ஆராய்கிறது. உதாரணமாக இந்தியாவில் எழுதப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105941

பேலியோ -ஓர் அனுபவக் கடிதம்

பேலியோ அன்பின் ஜெ, வணக்கம். நலம்தானே? பேலியோ குறித்த வெற்றிச்செல்வன் கேள்விக்கு தங்களின் பதில் கண்டேன். கடந்த எட்டு மாதங்களாக பேலியோ உணவுமுறையில் இருப்பவன் என்ற முறையில் எனது சில அவதானிப்புகள். 2016 ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் கோவையில் ஒரு புதுவாசகர் சந்திப்பில் உங்களுடன் இருந்தபோது, எனது எடையையும், இளம்பிள்ளை வாதத்தால் சிறுவயதிலிருந்தே கொஞ்சம் பாதிக்கப்பட்டிருந்த வலதுகாலினால் நான் கொண்ட சிரமங்களைக் கவனித்த நீங்கள், “நீங்க பேலியோ ட்ரை பண்ணுங்க” என்று அறிவுறுத்தினீர்கள். அப்போதுதான் நான் பேலியோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105920

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு

இனிய ஜெயம், கடந்த வாரம் ஒரு நண்பர், இலக்கிய ஆர்வம் கொண்டவர், பதினோராம் வகுப்பில் இருக்கும் அவரது மகன் [அவருக்கும் வாசிப்பில் விருப்பம் உண்டு] வாசிப்புக்குள் நுழையும் வகையில் சில நூல்களை பரிந்துரை செய்ய சொன்னார். இந்த நூல்களை பரிந்துரைத்தேன் அதற்கான காரணங்களையும் சொன்னேன். முதலில் பள்ளி கல்வி ஒரு மாணவனுக்கு அளிப்பது, இங்கே பிழைத்து இருக்க என்ன தேவையோ அதை. பள்ளி கல்விக்கு வெளியே உள்ள நூல்கள் வழங்குவது ஒரு நிறைவை. என்றும் துணை நிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105851

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32

பகுதி ஐந்து :  நிலநஞ்சு – 1 சேதிநாட்டு அரசியர் பிந்துமதியும் கரேணுமதியும் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து உபப்பிலாவ்யத்திற்கு வந்துசேர்ந்தபோது முன்மதியம் எழுந்து நகர்மேல் வெண்ணிற வெயில் அலைகொண்டு நின்றிருந்தது. தேர் நகரத்தின் சிறிய தெருக்களினூடாக எதிரே வந்த தேர்களுக்கும் பல்லக்குகளுக்கும் வழிவிட்டு ஒதுங்கியும் இருபுறமும் முட்டி மோதிய மக்கள் திரளை ஊடறுத்தும் அரண்மனையை சென்று சேர இரண்டு நாழிகைக்குமேல் பொழுதாகியது. தேரின் கூரைக் கும்மட்டம் வெயிலில் வெந்து உள்ளே அனலை இறக்கியது. காற்றிலாமல் திரைச்சீலைகள் அசைவிழந்து சகட அசைவுக்கேற்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105774