Daily Archive: January 16, 2018

சிறுகதை விவாதம் முடிவு

இத்தளத்தில் நிகழ்ந்த சிறுகதைகள் குறித்த விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். இன்னும் இரண்டு கதைகளும் பதினெட்டு தொகுதி கடிதங்களும் இருந்தன. அவை வெளியாகாது.இனிமேல் இத்தளத்தில் இவ்வாறு ஏதும் நிகழாது. அருண்மொழியின் ஆலோசனை, இம்முறை அவள் சொல்வதைக் கேட்கலாமென நினைக்கிறேன். இதை தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலில் அரைநூற்றாண்டாக நிகழ்ந்துவந்த கறாரான இலக்கிய விமர்சனங்களின் நீட்சியாகவே நான் எண்ணினேன். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் மிகக்கடுமையாக விமர்சித்துக்கொண்ட எழுத்தாளர்கள் இன்றும் எழுதுகிறோம், நட்புடனும் இருக்கிறோம். எங்கள் விமர்சனக் கடிதங்களை இன்றுவாசிக்கையில் ஆச்சரியமாக உள்ளது, அதிலுள்ள சமரசமின்மை. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105926

விஜி வரையும் கோலங்கள்

  பெண் சிங்கங்களை வேட்டையாட அனுப்பிவிட்டு படுத்திருக்கும் ஆண்சிங்கம் போல இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் நண்பர் சீடர்களை நாலுதெருவுக்கு திருவோட்டுடன் அனுப்பிவிட்டு சாவடியில் படுத்திருக்கும் சாமியார் போலிருக்கிறீர்கள் என்றார். நண்பர்கள் அவர்கள் வாசித்தவற்றை என்னுடன் தொடர்ந்து பகிர்வதுண்டு. ஆகவே அனேகமாக எந்த இதழையும் நேரடியாக வாசிக்காமலேயே எப்படியோ நல்லன அனைத்தையும் வாசித்துவிடுகிறேன். குறிப்பாக கவிதைகள் தவறுவதே இல்லை   லட்சுமி மணிவண்ணனின் இக்கவிதை சமீபத்தில் வாசித்த அசாதாரணமான படைப்புகளில் ஒன்று. லட்சுமி மணிவண்ணன் கொண்டுள்ள கவிதைமுறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105844

சிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்

  எட்டு பேர் காகிதங்களுக்கும் மேசை நாற்காலிகளுக்கும் இடையே மனிதர்களும் சிலர் உலாவிய அந்த சிறிய அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் நடந்து கொண்டும் காத்திருந்தோம். பத்து மணிக்கு முன்னதாக மெலிந்து சிவந்த உயரமான பெண் ஒருத்தி வலக்கையின் விரல்கள் மதிய உணவிற்கான பையையும் இடக்கையின் தோள் மற்றொரு பையையும் பிடித்திருக்க எங்களை நோக்கிப் பதற்றத்துடன் வந்து கொண்டிருந்தாள். இடைநாழியில் தூரத்தில் இருந்தே மாவட்ட ஆட்சியரின் அறையும் அதையடுத்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105452

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன் அன்புள்ள ஜெ,   சந்தேகமே இல்லாமல் சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என ‘போயாக்’ கைக் கூறலாம். காரணம் அதன் பேசுபொருள். எப்போதெல்லாம் ஒரு மொழிபு வடிவம் (சிறுகதை, நெடுங்கதை, நாவல், கவிதை) காலாதீதமான உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறதோ அப்போதெல்லாம் மிகச் சிறந்த இலக்கியம் உருவாகும். இக்கதை அப்படிப்பட்ட ஒரு ஆதி உணர்வை வெளிக்கொண்டு வந்துள்ளது.   நாகரிக சமூகத்தில் இருந்து வந்திருக்கும் ஒருவன் கனவிலும் செய்யத்தயங்கும் ஒரு காரியத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105696

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5

. பேசும் பூனை அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு,     இது வரை ஆயிரம் முறை எழுத ஆரம்பித்து முடிக்காத என்னை “பேசும் பூனை” பேச வைத்திருக்கிறது.நன்றி. சமீபத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சிறுகதைகளில்  ஒன்று பேசும் பூனை.     அதன் பேசும் பொருள் என் மனதிற்கு மிக அணுக்கமான ஒன்று பெண்ணின் மன ஆழத்திற்குள் உறைந்திருக்கும் அடர்த்தியான, குளிர்ந்த தனிமையை , தொடுகின்ற, நலுங்க வைக்கின்ற எதுவுமே அவளுக்கு அவஸ்தைதான், வேதனைதான், இடர்ப்பாடுதான், அசௌகர்யம்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105743

சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -3

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு     அன்புள்ள ஜெ   சுசித்ரா எழுதிய சிறகதிர்வு கதை நடையில் சிவசங்கரியை நினைவுபடுத்தியது. அது ஏன் என்று பார்த்தேன். நிகழ்காலத்திலேயே கதையைச் சொல்வது ஒரு காரணம் என தோன்றியது. அந்த நடை ஒரு சுயமான நடைக்கான முயற்சி என ஒருவர் எழுதியிருந்தார். எனக்கு அது ஆயாசமூட்டியது. ஏனென்றால் அது ஒரு நிகழ்காலத்தை உருவாக்கிவிடுகிறது. அது திரில்லர் கதைகளுக்குத்தான் சரியாக வரும் என நினைக்கிறேன்   மேலும் இந்தக்கதையில் அந்தப்பறவையின் இறப்புக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105802

சிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2

சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை அன்புள்ள ஜெ, லீலாவதி சிறுகதையில் முதலில் ராமநாதன் வீட்டின் பழக்கவழக்கங்கள் கதைசொல்லியின் பார்வையில் சித்தரிக்கப்படுகிறது. அந்த வீட்டின் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். பின்பு கதைசொல்லியின் வீட்டு மனிதர்களும் அவர்களின் குணச்சித்திரங்கள் பழக்கவழக்கங்கள் சித்தரிக்கப்படுகின்றன. சைவ அசைவ உணவுப்பழக்கம், உத்யோகங்கள், வைணவம் X சைவம், கர்நாடக சங்கீதம் X திருவாசகம், தமிழ் X வடமொழி என் இருவர்களின் வாழ்க்கையும் வேறுபாடுகள் கொண்டது போல முதலில் தெரிகிறது. ஆனால் பழக்கத்தில் வரும் வேறுபாடுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105835

சிறுகதை விவாதம்- இரு கோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்

  சிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம் அன்புள்ள ஜெ, இருகோப்பைகள் காதலின் வலிமையை நேரடியாகச் சொல்லும் கதை. மனைவி இறந்தபின் அந்த ஒருவாரம் மார்க்கின் கொந்தளிப்புகள் எதுவும் சொல்லப்படவில்லை. அந்த இறப்பில் இருந்து மீண்டு மிக துரிதமாக அவர் அமைதிகொள்வது மார்க் சோஃபியா இருவரிடையே இருந்த காதலின் ஆழத்தை காட்டுகிறது. காபியைப் போலவே நல்ல மணம் பரவும் காதல். எக்காலத்திலும் தனித்துவிட்டுப் பிரிய மாட்டேன் என்ற வாக்கின் செயல்வடிவமாக அந்த காலி இருக்கையின் முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105868

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 6 அசலையும் தாரையும் அவைக்குள் நுழைந்தபோது மீண்டும் அவை கூடத்தொடங்கியிருந்தது. பெண்டிரவையில் அவர்கள் இருவர் மட்டுமே சென்றனர். அனைத்துப் பீடங்களும் ஒழிந்து கிடந்தன. அசலை அவற்றை நோக்கிவிட்டு “இந்த அவைக்கு சொல்லப்பட்ட மிக ஆழ்ந்த மறுதலிப்பு இது என எண்ணுகிறேன், இளையவளே. எவராவது இதை கேட்பாராயின் நன்று” என்றாள். தாரை எதுவும் சொல்லாமலிருக்கவே திரும்பி நோக்கி “என்ன செய்கிறாய்?” என்றாள். அவள் கையை ஆடைக்குள் ஒளிக்க “என்ன அது?” என்றாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105755