Daily Archive: January 15, 2018

அஞ்சலி ஞாநி

ஞாநியைப்பற்றி  நான் முதலில் அறிந்தது எழுபதுகளின் இறுதியில். தமிழ்நாடகம் என்னநிலையில் இருக்கிறது என்று குமுதம் நாளிதழ் எழுபதுகளில் பலரிடம் பேட்டி எடுத்துப்போட்டிருந்தது. அதில் ஞாநி ‘ருத்ராட்சப்பூனைகளே’ என ஆக்ரோஷமாக பேட்டிகொடுத்திருந்தார். அந்த தோரணையும், சொல்லாட்சியும், கூடவே வெளியான ஹிப்பி ஸ்டைல் புகைப்படமும் என்னைக் கவர்ந்தது. எனக்கு அப்போது பதினைந்து வயது என நினைக்கிறேன். நெடுநாட்களுக்குப்பின் ஞாநியைச் சந்தித்தபோது குமுதத்தின் அந்தப்பக்கம் நினைவில் இருக்கிறது என்றேன். அவர் அந்தப்பேட்டிதான் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்று சொன்னார். அவர் பாதல்சர்க்காரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105837

இதழாளர்கள்!

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். இந்தியர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியும்படி இன்று ஊடகத்தில் ஒரு செய்தி வந்துள்ளது.சமீபத்தில் தனது மாநிலத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு மேற்குவங்க முதல்வர் தனது மாநில முன்னணி பத்திரிகையாளர்களுடன் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டதாகவும் அப்போது லண்டனில் பல தொழிலதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற இரவு விருந்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளிக்கரண்டிகளை மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் திருடி தங்கள் பைகளில் வைத்துக்கொண்டதை கண்காணிப்பு கேமிரா மூலம் அறிந்த விடுதியை சார்ந்தவர்கள். நாசுக்காக யாரவது தவறுதலாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105630

சிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்

  ஞாயிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன். முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105449

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5

சிறுகதை விவாதம் –1 போயாக்- ம.நவீன் ஒரு சிறுகதை எந்தெந்த அம்சங்கள் எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என பலமுறை தங்கள் தளங்களில் விவாதங்கள் நடந்திருக்கிறது. சென்ற ஆண்டில் கூட பல புதிய எழுத்தாளா்களின் கதைகளையும் அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்திருக்கிறேன். இந்த வருடத்தின் தொடக்கமாக இந்த விவாதம் அமையட்டும். என்னளவில் ஒரு புனைவு எழுத்தாளன் – எதேனும் ஒரு நிகழ்வையோ, ஒரு படிமத்தையோ, ஒரு தத்துவத்தையோ தன் கண்ணோடத்தின் மூலமாக தனக்கு கிடைத்த திறப்பை மொழியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105669

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4

பேசும் பூனை அன்புள்ள ஜெ சுநீல் கிருஷ்ணனின் பேசும்பூனை ஒரு நல்ல கதைதான். ஆனால் கதையின் சலிப்பூட்டும் அம்சம் ஒன்று உண்டு. அதை ஓரளவுக்கு போயாக் கதையிலும் காண்கிறேன்.  சுவாரசியமே இல்லாத சாதாரண டேட்டா மாதிரியான விஷயங்களை ஏன் கதையிலே சொல்லவேண்டும். தேன்மொழியின் வாழ்க்கை சலிப்பானது. ஆனால் ஏன் அவ்வளவு டீடெயில் அதற்கு? அவள் வாழ்க்கை சலிப்பானது என நமக்குச் சொல்லும் அளவுக்கு செய்திகள் போதுமே. சிறுகதையின் அழகு என்பதே சுருக்கம்தானே ஒரு சிறுகதையில் ஒரு விவரிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105719

சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு அன்புள்ள ஜெ, சுசித்ரா எழுதிய சிறகதிர்வு சிறுகதையில் இரு உலகங்கள் சித்தரிக்கப்படுகின்றன. அன்னை மகன் என இரு பாத்திரங்கள். அவர்கள் அந்த இரு உலகங்களின் பிரதிநிதியாக வருகிறார்கள். ஒன்று அறிவியல் உலகம். இரண்டாவது கவிதை, ஓவியம் என விரியும் கலை உலகம். அறிவியலாளனுக்கு சாவு என்பது ஒர் அறைகூவல். வென்றெடுக்கவேண்டியது. கவிதை வாசிக்கும் அன்னைக்கு அது ஒர் ஆன்மீக விடுதலை. பறவை அதற்கு சரியான குறியீடாக வந்து அமர்கிறது. காலா உன்னை புல்லென …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105780

சிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1

சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பிரபுவின் கதையைக் குறித்து, சமகாலக் கலை வடிவத்திலிருந்தும் குடும்ப சூழலிலிருந்தும் என்றென்றைக்குமான ஒரு விஷயத்தை தொன்மத்தின் வழி சென்று சேர வாய்ப்பு கொண்ட கதை. படிக்கவே ஆனந்தமாக இருந்தது. பிரகலாதன் எந்த உறுதிக்காக தந்தையை பலி கொடுத்தானோ அதற்கு நேர் எதிராக தன் விருப்பத்தினை [இந்தக் கதையில் அழகர்சாமிக்கு ஒரு காதலாக இருந்திருக்கலாம்] ஏற்க மறுத்த அப்பாவிற்கு எதிராக தன்னை பலி கொடுத்தவனாக எழுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105807

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 5 யுயுத்ஸு எழுந்து “ஆன்றோரே, இப்போது அவையில் இளைய யாதவரின் தூதுச்செய்தியும் அதன்மேல் பேரரசரும் அமைச்சரும் கொண்ட உணர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. ஆகவே பிதாமகர் பீஷ்மரும் ஆசிரியர்களான துரோணரும் கிருபரும் தங்கள் எண்ணங்களையும் முன்வைக்கவேண்டுமென கோருகிறேன். பிறிதெவரேனும் தங்கள் வழிச்சொற்களை உரைப்பதென்றாலும் ஆகலாம். அதன் பின்னர் இந்த அவையில் ஒரு முடிவை நோக்கி செல்லும் முயற்சிகள் நிகழ்வதே முறையென்றாகும்” என்றான். அவனுடைய எண்ணம் என்னவென்று அவையினரால் உய்த்துணர முடியவில்லை. ஆனால் விதுரரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105737