Daily Archive: January 14, 2018

வைரமுத்து

வைரமுத்து,ஆண்டாள் எனக்கு வரும் கடிதங்களில் பலர் வைரமுத்து குறித்து வசைபாடி எழுதித்தள்ளுகிறார்கள். முகநூலில் பகிரப்படும் வைரமுத்து குறித்த வசைகளை எனக்கு வெட்டி அனுப்புகிறார்கள். நான் வைரமுத்து ஞானபீடம் பெற எடுத்துக்கொண்ட முயற்சிகளைக்குறித்து எழுதியமையால் இந்த வசைகளுடன் இணைந்துகொள்வேன் என நினைக்கிறார்கள். தெள்ளத்தெளிவாகவே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் எழுதியது இலக்கியவிவகாரம். இதில் மதவெறியர்கள், அரசியல்வெறியர்கள், சாதிவெறியர்களுக்கு இடமில்லை. இவர்கள் இன்று வைரமுத்துவைப்பற்றி எழுதியிருப்பவை கீழ்மை நிறைந்தவை. எந்த நிதானமுள்ள இந்துவும், இந்தியனும்  நாணத்தக்கவை. வைரமுத்து கூறிய கருத்து கண்டிக்கப்படவேண்டியதென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105728

ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி

ஆண்டாள் குறித்த சமகாலப் பார்வைகளில் முக்கியமானது என நான் பெருந்தேவியின் இக்கட்டுரையைக் கருதுகிறேன். இந்த விவாதத்தில் பேசுபவர்கள் எவருமே இது இன்றைய பெண்களை எப்படிச் சென்றடைகிறது என்பதைக் கவனிப்பதில்லை. பெண்ணின் நோக்கில் இச்சொற்களின் ‘எடை’ என்ன என்பதை பெருந்தேவியின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தமிழின் சமகாலக் கவிஞர் என்றவகையிலும் இக்குரல் முக்கியத்துவம் பெறுகிறது.   *   சில கடவுள் ஆளுமைகள் தொன்மத்துக்கும் வரலாற்றுக்குமான இடையரங்கில் நிற்பவை. அவ்வகையில் ஆண்டாள், ராமன் போன்ற கடவுளர்களிடமிருந்து வேறுபடுபவள். எனவே, ஆண்டாளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105764

சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை

அந்த  நகரப்  பேருந்து  மெல்ல  ஊர்ந்து  பள்ளங்களில்  ஏறி  இறங்கி இரண்டுகிலோமீட்டருக்கு   ஒருமுறை  ஆட்களை  இறக்கி   ஏற்றி நன்னிலம் பக்கத்தில்   பட்டூர்சென்ற போது  நேரம்   மாலை  ஐந்து  மணியாயிருந்தது.  சிதம்பரத்திலிருந்து கிளம்பி வந்திருந்தோம்.  ராமநாதன்  மதியம்  பன்னிரண்டு  மணிக்குச் சாப்பிட்டு விட்டுகிளம்பலாம்  என்றார். அவர்கள்  வீட்டில்  அது ஒரு   பெரும் நிகழ்வு.  இரண்டு பேர்இ ருந்தாலும்  பத்து  இருபது பேர்  இருந்தாலும்   பொழுது விடிந்ததிலிருந்து  அவ்வப்போது  காஃபி  குடித்துக்  கொண்டிருப்பார்கள்.   பிரபு மயிலாடுதுறை எழுதிய லீலாவதி   =========================================================================================   முந்தைய கதைகள் சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105446

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3

பேசும் பூனை     அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   போயாக் கதைக்கு பிறகு, இன்று சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை கதையை வாசித்தேன். முற்றிலும் மாறுபட்ட கதைக்களம்.   சிறு வயதில் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளையும் பெற்ற பிறகு, வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனை கொண்ட ஒரு பெண்ணின் கதை.   கதை அப்பெண்ணின் தனிமையை மையப்படுத்தியதாக உணர்கிறேன். தான் விரும்பும் நபருடன் விரும்பும் நேரத்தில் விரும்பியதைப் பேச முடியாமல் போனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105716

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4

    சிறுகதை: போயாக் “எல்லா பேரிலக்கியமும் சொல்வது இரண்டு கதைகளில் ஒன்று தான்; மனிதன் பயணம் மேர்கொள்ளும் கதை, அல்லது ஊருக்குள் அன்னியன் வரும் கதை.”  இது இலக்கியத்தை பற்றிச் சொல்லப்படும் பிரபலமான தேய்வழக்கு. ஒரு வகையில் ‘போயாக்’ சிறுகதை, இரண்டாம் வகை கதை – அதாவது, ஊருக்குள் அன்னியன் வரும் கதை என்ற கதைக்கருவை மறுபரிசீலனை செய்வதாக வாசிக்க முடிகிறது. ஒரு ஊருக்கு அந்த மண்ணை, பாரம்பரியத்தைச் சாராத ஒரு அன்னியன் வரும் பொழுது இரண்டு சாத்தியங்கள் கதைக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105642

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 9

  ஒரு கோப்பை காபி [சிறுகதை] அன்புள்ள ஜெ, மகா அப்பாவின் ஒரு பகுதியே. அப்பாவிடம் தனக்கென்று எதும் இல்லாமல் வாழ்ந்த அதே அடங்கிய வாழ்கையை அப்பாவிற்கு பிறகும் அவன் அம்மா குற்றவுணர்ச்சியில் வாழ வேண்டும் என்ற மகாவின் எதிர்பார்ப்பே, அவன் அம்மா தனக்கான வாழ்க்கையை அறிந்து வாழும் போது தாளாஏமாற்றம் கொள்கிறது.   இதே புள்ளியில் வேறுபட்டு மகாவும் மார்த்தாவும் தன்  வழியே சென்றிருக்கக் கூடும். மார்த்தாவைப் பிரிந்து ஜானகியுடனான அவனது வாழ்வும் இதே புள்ளியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105656

சிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1

சுசித்ரா எழுதிய சிறகதிர்வு ஜெ,   இந்தக் கதையின் பிற அம்சங்களை பற்றி சொல்வதை விட முதலில் அதன் மொழியைப் பற்றி சொல்ல வேண்டும். இதுவரையிலான மூன்று கதைகளிலும் சரளம் இருந்தது. இதில் மொழிச் சரளம் இல்லை. அதுவே இதன் பலம். அந்த சரளம் இணைய மொழியால் வந்த சரளம். அதை விட, பொதுவாக இன்றைய இளம் எழுத்தாளர்கள் எழுதுவது, “எதிர்ப்படும்” அன்றாடத்தின் தருணங்களை. ஆகவே மொழியும் சாதாரணமாக இருக்கிறது. சுசித்ராவின் மொழி தடுமாறுகிறது. பேச்சு மொழியும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105741

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 4 கலையாமல் காலமென நீடிக்கும் என எண்ணமூட்டிய அந்த அமைதி ஏதோ ஒரு கணத்தில் இதோ உடையப்போகிறதென்று தோன்றியது. எவர் எழவிருக்கிறார்கள்? திருதராஷ்டிரர், சகுனி, கணிகர், பீஷ்மர்? அல்லது எவரென்றே அறியாத ஒரு குடித்தலைவர்? அல்லது அவரே அதை உடைக்கப்போகிறார் போலும். மறுசொல் என எழக்கூடுவது எது? ஏற்புக்கும் மறுப்புக்கும் அப்பாற்பட்ட இந்தச் செயலின்மையிலிருந்து முளைப்பது. பெரும்பாறைகளை விலக்கியெழும் சிறு ஆலமரத்துமுளை. விகர்ணன் எழுவதைக் கண்டதும் தாரை அசலையின் கைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105710