Daily Archive: January 12, 2018

சிறுகதை -ஓர் அறிவிப்பு

  இந்தத் தளத்தில் நிகழும் சிறுகதை விவாதத்தில் கடிதங்களை அனுப்புபவர்கள் ஆன்லைன் கூகிள் டிரான்ஸ்லிட்டெரேட்டரில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டாம். அது சொற்றொடர்களை உடைப்பதில்லை. மொத்தக்கடிதத்தை வார்த்தை வார்த்தையாக மறு அமைப்பு செய்யாமல் என் தளத்தில் பதிவுசெய்ய முடியாது. பெரும் பணி அது. என்.எச்.எம் போன்ற நிரலிகளைக்கொண்டு எம்.எஸ் வேர்ட் போன்ற பக்கங்களில் தட்டச்சு செய்து வெட்டி ஒட்டியோ இணைத்தோ அனுப்பவும்.   இது சிறுகதைப்போட்டி அல்ல. ஏராளமானவர்கள் தங்கள் சிறுகதைகளை அனுப்புகிறார்கள். நான் நாளும் வெண்முரசு எழுதவேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105706/

பேலியோ

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   பேலியோ டயட் குறித்து தங்கள் கருத்தென்ன? இன்றைக்கு மிகப்பரவலாக  திட்டவட்டமான பலனை தரக்கூடிய டயட் என இதுவே கூறப்படுகிறது. தங்கள் கருத்தறிய ஆவல்   வெற்றிச்செல்வன்     அன்புள்ள வெற்றிச்செல்வன்,   என் நண்பர்களில் குறைந்தது இருபதுபேர் இப்போது பேலியோ எனப்படும் கொழுப்புணவுமுறைமையில் இருக்கிறார்கள். அதேயளவு நண்பர்கள் ஆரம்பித்து விட்டுவிட்டார்கள். சொல்லப்போனால் திருச்சி வழக்கறிஞரான செல்வராணி மட்டுமே தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக அந்த உணவுமுறையில் நீடிக்கிறார்   நண்பர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105596/

சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -1

  பேசும் பூனை   அன்புள்ள ஜெ   சந்தேகமில்லாமல் தமிழில் எழுதப்பட்ட நல்ல சிறுகதைகளின் பட்டியலில் பேசும்பூனையைச் சேர்க்கலாம். வாழ்க்கையின் வெறுமையையும் ஒவ்வாமையையும் விதவிதமாக தமிழ்ச்சிறுகதை எழுதிக்காட்டியிருக்கிறது. அதிலும் இங்கே பெண்களுக்கு வாழ்க்கையில் ’சாய்ஸ்’ ஏதும் இல்லை. வாய்த்த வாழ்க்கையை வாழவேண்டியதுதான். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும். அந்த எலிப்பொறிவாழ்க்கையை வெவ்வேறுவகையாக நம் கதைகள் சொல்லியிருக்கின்றன. இன்றைய நவீனத்தொழில்நுட்பத்தின் குறியீட்டைக்கொண்டு மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் சுனில்கிருஷ்னன்   தேன்மொழி ஒரு சராசரி கீழ்நடுத்தர பெண். அவளுக்கு வாய்க்கக்கூடிய இன்னொரு கீழ்நடுத்தரச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105670/

சிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -2

    சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்     அன்புள்ள ஜெ ஒர் இளம் படைப்பாளி என்றால் உடனே பலர் ஆலோசனை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள். நவீன் தளத்திலும் உங்கள் தளத்திலும் சில கடிதங்களை படிக்க அலுப்பாக இருந்தது. இதே கதையை நீங்கள் எழுதியிருந்தால் இப்படியெல்லாம் எழுத துணிவார்களா? கதையின் நுண்ணுர்வுகளை சற்றும் அணுகாமல் சித்தரிப்பு சரியில்லை, முன்னாலேயே முடித்திருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னால் என்ன செய்வது? நவீன் பொறுமையுடன் சகித்துக்கொள்கிறார் என்று நினைக்கிறேன். ஏதோ முரண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105650/

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 7

ஒரு கோப்பை காபி [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, தாமதமானது என்றபோதும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.  ராமாயணம் பிரசங்கம் செய்கிறேன் என்று தஞ்சாவூர் அம்மாப்பேட்டை போய் (அது ஒரு தனி கதை) ஓரளவுக்கு சுமாராக ஒப்பேற்றினேன்.  ‘ஒரு கோப்பை காபி’ இப்போது வாசித்து விட்டு இந்த கடிதம் டைப் செய்கிறேன்.  அழகான சிறுகதை.  இந்திய சூழலில் உண்டான ஒரு சிக்கலை மேற்கின் அணுகுமுறை கொண்டு தீர்ப்பது.  உண்மையில் இங்கு எந்தவொரு சிக்கலுக்கும் அபத்தங்களையே கைக்கொண்டு, சரி செய்ய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105592/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–27

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 2 தாரை அசலையின் அறைவாயிலுக்குச் சென்றபோது முன்னரே அவள் தன் சேடியருடன் பேரவைக்கு கிளம்பிச் சென்றிருக்கும் செய்தியை அறிந்தாள். இடைநாழியினூடாக விரைந்து ஓடியபோது கழுத்தணிகளும் வளையல்களும் சிலம்புகளும் இணைந்து குலுங்கும் ஓசை பெரிதாக ஒலிக்கக்கேட்டு நின்று நெஞ்சில் கைவைத்து மூச்சிழுத்துவிட்டாள். பின்னர் பெருநடையாக தாவி ஓடி படிகளில் இறங்கி சிறுகூடத்திற்கு வந்து அங்கு நின்றிருந்த முதுசேடியிடம் “இளைய அரசி நெடுந்தொலைவு சென்றுவிட்டார்களா?” என்றாள். அவள் “இல்லை அரசி, நான்காவது வளைவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105661/