Daily Archive: January 11, 2018

வைரமுத்து,ஆண்டாள்

வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது. ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105607

சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

  ஆள்காட்டி விரலால் அதன் அழகிய தொப்பையை வருடியவுடன் வெக்கத்தில் நெளிந்து சிரித்தது சாம்பல் நிற பூனை. “இங்கேருமா…” என கூவிச் சிரித்தாள் ஹர்ஷிதா. கீச் குரலில் பூனையும் “இங்கேருமா” என்றது. “நீ பாயா கேர்ளா?’ என அவள் பூனையிடம் கேட்டதும் அதையே திரும்பிச் சொன்னது பூனை. தேன்மொழி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியபடி சிரித்தாள். சுனில் கிருஷ்ணனின் பேசும்பூனை குறிப்பு சமீபத்தில் வெளிவந்து பரவலாகக் கவனிக்கப்பட்ட இளம்தலைமுறைப் படைப்பாளிகளின் கதைகளின் சிறு தொகுப்பு இது. வாசகர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105436

சிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1

சிறுகதை: போயாக் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமறிய ஆவல். தங்கள் சிறுகதை விவாதம் தொடரில் ‘போயாக்’ சிறுகதைப் பற்றிய எனது எண்ணங்களை அனுப்புவதில் மகிழ்கிறேன். இது விவாதம் என்பதால், முதல் எண்ண ஓட்டங்களிலிருந்தே என் குறிப்புகளை வைக்கிறேன். ஒரு புது நிலத்தில் பணி நிமித்தமாகச் செல்லும், இளைஞனின் மன ஓட்டங்களிலிருந்து பின்னப்பட்ட கதை. கதையின் துவக்கத்தில், ஏற்படும் மனக் குழப்பங்களுக்கு அவன், டாக்சி ஓட்டியின் சிகரெட்டினைத் தூண்டுதலாய்ச் சொல்கிறான். ஆனால், அவனது மனநிலை, ஏற்கனவே சமநிலை இழக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105623

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 6

ஒரு கோப்பை காபி [சிறுகதை] அன்பு ஜெ, தங்கள் “ஒரு கோப்பை காபி” சிறுகதையை முன்வைத்து என் எண்ணங்கள் கீழே- ஐரோப்பாவிற்கு மத்தியகிழக்கு/அரபியர்கள் கொடுத்த ”அரான்சினி” ஒரு சிசிலி (இத்தாலி) மத்திய தரைக்கடல் உணவாக பார்க்கப்படுகிறது.வேகவைத்த அரிசி ப்ரெட் துகள் இணைந்த சைவ /அசைவ பொறித்த உருண்டை. ஏழு வருடங்களுக்கு முன்னாள் நடந்த இறப்பும் அதன் தொடர்ச்சியுமே முடிச்சு.ஒரு இந்திய ஃபில்டர் காபியில் அமைதியுறும் மகாவிற்கு கதை இறுதியில் இந்தியப் பலகாரம் போல் உள்ள ”அரான்சினி”யும் பிடிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105589

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26

பகுதி நான்கு : ஒளிர்பரல் – 1 பித்தளை எண்ணெய்க்குடங்களும் ஏற்றுவிளக்குகளின் செம்மணிச்சுடர்களுமாக விளக்கேற்றிகள் அரண்மனைத் தூண்களிலிருந்த பொருத்துவிளக்குகளையும், நிலைவிளக்குகளையும், தட்டுவிளக்குகளையும், மேலிருந்து தொங்கிய தூக்குவிளக்குகளையும், அறைமூலைகளில் முத்துச்சிப்பிகள் மாற்றொளி பரப்ப நின்ற கொத்துவிளக்குகளையும் சுடர் பொருத்தியபடியே கடந்து சென்றதை தாரை நோக்கிநின்றாள். காட்டெரி பரவிச் செல்வதுபோல அரண்மனையின் சாளரங்கள் அனைத்தும் செவ்வொளி கொண்டன. சுவருக்கும் கூரைக்குமான இடைவெளிகளினூடாக அனல்சட்டங்கள் அரையிருள் பரவியிருந்த வானில் நீட்டிப் புதைத்திருந்தன. அவற்றினூடாக பறந்து சென்ற பறவைகள் கனல்கொண்டு இருளில் அமிழ்ந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105601