Daily Archive: January 10, 2018

சூரியதிசைப்பயணம்

கிழக்குநோக்கிய இரு பயணங்களின் நேர்விவரிப்பு இது. பயணக்கட்டுரைகள் என்றல்ல அன்றாடப்பயணக்குறிப்புகள் என்றுதான் சொல்லமுடியும். பயணம் முடிந்து திரும்பிவந்து நினைவுகளைத் தொகுத்துக்கொள்வது பயணக்கட்டுரைகளின் இயல்பு. இவை அன்றன்று கண்ணுக்கும் கருத்துக்கும் பட்டவற்றின் பதிவு. முக்கியமானவை விடுபட்டிருக்கலாம். அல்லாதவை பதிவாகியிருக்கலாம். ஆனால் ஒரு பயணத்தின் அன்றாட ஒழுக்கில் எவையெல்லாம் நிகழ்கின்றன, உள்ளம் எவற்றுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றுகிறது என்பது இக்குறிப்புகளில் இருக்கும். வ்டகிழக்கு நோக்கி என்னும் பயணம் 2011 மே மாதம் எங்களால் மேற்கொள்ளப்பட்டது.கல்கத்தா சென்று அங்கிருந்து சிலிகுரி வழியாக சிக்கிம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104048/

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்

அண்மையில் இளம்நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது அவர் கதை எழுதியபோது கிடைத்த அனுபவம் பற்றிச் சொன்னார். பாராட்டுக்கள் வந்தன, சம்பிரதாயமானவை. கதையில் அவர் விட்டிருந்த வாசக இடைவெளிகளை நிரப்பும் முயற்சி இல்லாதவை. கடுமையான எதிர்விமர்சனங்களைவிட அவை சோர்வளிப்பதாகச் சொன்னார். அது உண்மை. நான் எழுதவந்தகாலகட்டத்தில் உண்மையில் இச்சிக்கல் இல்லை. வாசகர்கள் நூறுபேர்தான், அவர்களில் இருபதுபேர் எதிர்வினையாற்றுவார்கள், பத்தொன்பது எதிர்வினைகள் நிறைவளிக்கும் வாசிப்பு கொண்டிருக்கும். இன்றையசூழலில் அடிக்கோடிட்டாலொழிய படைப்புகளுக்கான கூரிய கவனம் கிடைக்காமலாகிறதா? நான் சமீபத்தில் கவனித்த சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105432/

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 5

ஒரு கோப்பை காபி [சிறுகதை] ஜெ ஒரு கோப்பை காபி சிறுகதை தந்தை மகன் இருவரின் வாழ்வையும் இந்திய மரபு பண்பாடு நவீன பண்பாடு இரண்டுக்கும் இடையில் ஊசலாடும் ஒருவனின் மனசித்திரத்தையும் அளித்தது. இச்சிறுகதையில் இரு தலைமுறையில் தந்தையிடம் எந்த ஊசலாட்டமும் இல்லாமல் தன்நலனை பேணும் பொருட்டு வெளியில் மற்றவரிடம் தன் ஆளுமையை சுருக்கி வீட்டில் தன் மனைவி மற்றும் மகனிடம் தன் ஆளுமையை பெரிதாக காட்ட திமிரையும் வசைச்சொல்லையும் ஆயுதமாய் பயன்படுத்துவதில் எவ்வித குற்ற உணர்வும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105495/

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

  விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  நலம் , நலமறிய ஆவல் , ராஜ் கௌதமன் அவர்களுக்கு விளக்கு விருது கிடைத்தமைக்கு பெரு மகிழ்ச்சி , தற்போது நான் ரெண்டு வாரமாக சிலுவை ராஜ் சரித்திரம் படித்து வருகிறேன். பால்யம் இத்தனை  துல்லியமாக உயிரோட்டமாக வெகு சில படைப்புகளில் மட்டுமே பதிவாகி இருக்கிறது. அரசியல் சரி தவறுகளுக்கு அப்பால் மதம் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் சார்ந்த உரையாடல்கள் தாண்டி மிளிரும் சிலுவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105473/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 8 தன் தனியறைக்குள் விஜயை மஞ்சத்தில் கண்மூடி, கைகால்கள் முற்றிலும் தளர்ந்து வாழைத்தண்டுகள் என எடைகொண்டு இறகுச் சேக்கைமேல் படிந்திருக்க, புதைந்தவள்போல கிடந்தாள். அன்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற ஓவியங்களாக அவள் முன் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. மிக அப்பால் சிறுவர்கள் விளையாடும் ஓசையை அவள் கேட்டாள். ஒரு சுவருக்கு அப்பாலென அவர்கள் அங்கே துரத்தி விளையாடுகிறார்கள் என்று தோன்றியது. அல்லது அவர்கள் நடுவே ஒரு குட்டிப்புரவி இருக்கக்கூடும். அவள் எழுந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105572/