Daily Archive: January 9, 2018

விடுபட்ட ஆளுமைகள்

கேரளத்தில் உருவான பெரும்பாலான புனைவிலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எதிர்மறைக்கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். வளைந்த மூக்குடன் நாசர் கூட சி.பி.ராமசாமி ஐயரின் ’வில்லன்’ வேடத்தை நடித்திருக்கிறார். ஆனால் குமரி மாவட்டத்தில் 80 வயது தாண்டிய எவரிடம் பேசினாலும் சி.பி.யின் ஆட்சியை பொற்கால ஆட்சியென்றே தான் சொல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல் துறையில் சாலையைத் தோண்டி தொலைபேசி இணைப்பு அளிப்பதற்காக முயன்றபோது ஒப்பந்ததாரர் வந்து  “அச்சாலையை உடைக்க முடியாது” என்றார் ஏறத்தாழ நான்கடி தடிமனாக தரமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105231

சீ முத்துசாமி பற்றி பாலமுருகன்

அன்பின் ஜெயமோகன் அண்ணனுக்கு, 2017ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்ற மலேசிய நவீன இலக்கியத்தின் படைப்பிலக்கியக் குரலான சீ.முத்துசாமி அவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழ் இலக்கியம் என்றால் அது தமிழகம்தான் என்கிற மாயையைக் களைத்தெறிந்து தமிழர்கள் வாழும் நிலத்தில் பரவியிருக்கும் தமிழிலக்கிய படைப்புகளை, இலக்கிய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து அதன்பால் தன் ஆழ்ந்த வாசிப்பை முன்னெடுத்து விஷ்ணுபுரம் எனும் அங்கீகாரத்தைத் தந்தமைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி. விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு சுவாமி பிரம்மாநந்தாவுடன் வருவதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105461

ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4

ஒரு கோப்பை காபி [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், இவ்வளவு எளிமையாக ஒரு சிறுகதை அமையமுடிமா என்ற ஆச்சரியமே ‘ஒரு கோப்பை காபி’ படித்தவுடன் எழுந்தது. எந்த ஒரு சிறு மொழிச்சிடுக்குமின்றி அப்பட்டமான வாழ்க்கையை காட்டி மட்டுமே ஒரு சிறுகதை நிலைபெற முடியுமென்பதற்கு இக்கதை ஓர் சாட்சி. தலைப்பிலிருந்து ஆரம்பிக்கிறது இதன் எளிமை. கதை ஆரம்பத்தில் காபிக்கு ஒரு குறிப்பு ஏற்றப்படுகிறது. இந்திய நவீனப் பண்பாட்டின் உருவகமாக. மூன்று வெவ்வேறு கூறுகளின் கலவையாக. அதன் வழியே கதைசொல்லியின் உளச்சிக்கல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105391

தேவிபாரதி கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன்,   விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்கள் கடந்த டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி வெள்ளகோவிலில் உள்ள என் வீட்டுக்கு வருகை தந்ததையும் அந்தச் சந்திப்பின்போதான உரையாடல்கள் பற்றியும் நண்பர் கிருஷ்ணன் எழுதிய குறிப்புக்களைத் தங்கள் தளத்தில் படித்தேன். அதுபற்றிய என் நினைவுப் பதிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி இது என் வலைப்பூவிலும் முகநூலிலும் சற்றுமுன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.   தேவிபாரதி   அன்புள்ள தேவிபாரதி,   உண்மையில் நீங்கள்ளி இறுக்கமானவர் என்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105562

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 7 சிற்றவையின் வாயிலை தேவிகையும் விஜயையும் அடைந்தபோது அங்கு நின்றிருந்த காவலன் தலைவணங்கி “அவை கூடிக்கொண்டிருக்கிறது, அரசியரே. தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றான். அவன் உள்ளே செல்ல தேவிகை “இப்புவியில் தனிச்சொல்லவைகளைப்போல நான் வெறுப்பவை பிறிதில்லை. அங்கே மானுடர் கூடியிருந்து ஊழுக்கும் தெய்வங்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள் என எண்ணுவேன்” என்றாள். விஜயை “இம்முறை இந்த அவையில் அவர் இருப்பார்” என்றாள். “ஆம், நான் வந்தது அதற்காக மட்டுமே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105557