Daily Archive: January 8, 2018

வண்ணதாசனுக்கு இயல்

  2018 ஆம் ஆண்டுக்கான இயல் விருது வண்ணதாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கனடாவிலிருந்து வழங்கப்படும் இயல் விருது தமிழின் முதன்மையான இலக்கிய விருதுகளில் ஒன்று. தேர்ந்த படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவது. பெருமைக்குரிய இவ்விருது வண்ணதாசனுக்கு அளிக்கப்பட்டிருப்பது தமிழிலக்கிய வாசகர்களுக்கு அளிக்கப்படும் கௌரவம்   வண்ணதாசனுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும்   விருது அறிவிப்பு   வண்ணதாசனுக்கு  இயல் விருது – 2017   கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது (2017)இவ்வருடம்  வண்ணதாசன்  அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வண்ணதாசன் என சிறுகதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105559

அ.மார்க்ஸின் அரசியல்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் அ.மார்க்ஸ் அவர்களுடைய இந்துத்துவத்தின் பன்முகங்கள் நூலினை வாசித்தேன். அதனைப் பற்றிய என்னுடைய மதிப்பீட்டினை பதிவிட்டுள்ளேன், நேரமிருப்பின் வாசிக்கவும். http://www.mahiznan.com/2017/12/25/inthuththuvaththin-panmuhangal/ இத்தனை வெளிப்படையான வெறுப்புக் கட்டுரைகள எப்படி நடுநிலைமை என்ற பெயரில் எழுத முடிகிறது? பெரும்பாலான கட்டுரைகளில் பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட என்று வருகிறது? இந்த வரி பெரும்பாலும் எல்லாருடைய புத்தகங்களிலும் வருகின்றது. ஒரு வாசகன் எதனை நம்புவது? எதனை நம்பாமல் இருப்பது? இன்னும் பல்வேறு புத்தகங்களைப் படித்தே முடிவுக்கு வரவேண்டியதுதானா? மற்றொன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105286

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

      அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு வாசிப்பு சென்ற ஆண்டின் இறுதி நாட்களை தீவிரமான மறக்க முடியாத அனுபவமாக்கியது. எனது வாசக அனுபவப் பதிவு உங்கள் பார்வைக்கு. முதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உச்ச தருணங்களும், மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது. மரணக் குறிகளை முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105504

எதிர்ப்பும் ஏற்பும் –கடிதங்கள்.

 வைரமுத்துவுக்கு விருது – எதிர்ப்பு மனு அன்புள்ள ஜெ விளக்கு விருதுகள் அறிவிப்புக்கு நீங்கள் அளித்திருந்த வாழ்த்துச்செய்தியை வாசித்தேன். இணையத்தில் நீங்கள் எந்தெந்த இலக்கியவாதிகள் விருதும் அங்கீகாரமும் பெறும்போதெல்லாம் வாழ்த்தியிருக்கிறீர்கள் என்று சென்று வாசித்துப்பார்த்தேன். முக்கியமான படைப்பாளிகள் என நீங்கள் நினைக்கும் எவர் விருதும் அங்கீகாரமும் பெற்றாலும் மனம்திறந்து வாழ்த்தியிருக்கிறீர்கள். வெறும் வாழ்த்தாக அது அமைவதுமில்லை. பொதுவாசகருக்கு அந்த விருதுபெறுபவரின் தகுதி என்ன, அவருடைய பங்களிப்பு என்ன என்று சுருக்கமாக விளக்கியபின் அந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள்.ரு இந்தக்குறிப்பிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105410

மூக்கனூர்ப்பட்டி

சூழ இருத்தல்  1988 முதல் 1997 வரை தர்மபுரியில் இருந்த நினைவுகளில் மிக இனிமையானது மொரப்பூர் அருகே உள்ள மூக்கனூர்ப்பட்டி. நண்பர் தங்கமணியின் பண்ணை அங்கிருந்தது. இலக்கியவாசகர், நல்ல விவசாயி, இப்போது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர். அன்று அடிக்கடி அவருடைய பண்ணைவீட்டுக்குச் சென்று தங்குவோம். அங்கே நாஞ்சில்நாடன் உட்பட பல இலக்கியவாதிகள் சென்று தங்கியதுண்டு. அவரும் அவருடைய அண்ணனும் தந்தையும் கூட நல்ல வாசகர்கள். கொங்குவட்டாரத்திலிருந்து நூறாண்டுகளுக்கு முன்பு அங்கே சென்று நிலம் வாங்கி வேளாண்மைசெய்தவர்கள் அவர்களுடைய முன்னோர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105498

ஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3

ஒரு கோப்பை காபி [சிறுகதை] அன்புள்ள சார்! ‘ஒரு கோப்பை காபி’.. இந்திய ஆண்களின் ஆழ்மண இக்கட்டுகளை மிகவும் நேர்த்தியாக, படிம தன்மையுடன், மெல்லிய குறிப்புக்களுடன் சொல்லி செல்கிறது. நம்மை நாம் உள்ளூர பார்க்க சொல்கிறது. தொடக்கத்திலேயே.. ‘நாங்கள் பில்டர் காபியை போலவே.. மூன்று குணங்களின் கலவை’ என்பது பெண்கள் சார்ந்து தற்போது நம் மன நிலைதான் என்று படுகிறது. பெண்ணை நம் சம்பிரதாய பிம்பத்துடன் பார்க்கும் மன நிலை முதலாவது. தாயாக, தன் வாழ்க்கையை குடும்பத்துக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105361

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 6 வாயிற்காவலன் ஆற்றுப்படுத்தி தலைவணங்க உயரமற்ற கதவைத் திறந்து விஜயை சிற்றவைக்குள் நுழைந்தபோது முன்னரே அங்கு யுதிஷ்டிரரும் திரௌபதியும் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். சாளரத்தருகே உடல் சரித்து சாய்ந்து பீமன் நின்றிருந்தான். சௌனகர் மறுபுறம் நின்று யுதிஷ்டிரரிடம் உளவுச்செய்தி எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்ததும் அவைக்கு தலைவணங்கி தனியாக அமர்ந்திருந்த தேவிகையின் அருகே சென்று உயரமற்ற பீடத்தில் கால்மடித்து அமர்ந்தாள். சௌனகர் தொடரலாமா என்று விழிகளால் சகதேவனிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105519