Daily Archive: January 7, 2018

கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை

இந்திய இலக்கியம் என்னும் நவீனச்செவ்வியல் திரண்டு வரும் கூட்டுவிவாதத்தில் எவ்வகையிலும் தமிழ் ஒரு பொருட்டாக எடுக்கப்படுவதில்லை என்பதை முன்னர் இரு கட்டுரைகளில் விரிவாக எழுதியிருந்தேன். [செவ்வியலும் இந்திய இலக்கியமும் , கால்கள் பாதைகள் ]அதற்கான காரணங்களில் ஒன்று நம் பெரும்படைப்பாளிகள் ஞானபீடம் போன்ற தேசிய அளவிலான விருதுக்களை வெல்லவில்லை என்பது. சென்ற சில ஆண்டுகளாகவே அசோகமித்திரன். கி.ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி ஆகிய மூவரும் ஞானபீடப் பரிசுகளுக்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை நாம் போதிய அளவு முன்னிறுத்தாமையாலும், இங்குள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97745

நிலைப்பதும் கலைப்பதும் ஆனது

  முப்பதாண்டுகளுக்கு முன்பு, புத்தகத்துடன் கிளம்பி முற்றிலும் அறியாத ஏதேனும் ஊருக்குச் சென்று அங்கே சிலநாட்கள் தங்கி அந்நூலை வாசித்துமுடிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. மிகச்சிறந்த ஒரு முறை இது. கிளம்பிச்செல்லும் வாய்ப்புள்ள இளம்நண்பர்கள் செய்து பார்க்கலாம். அந்நூலுக்குரிய மனநிலையை உருவாக்கும் சூழலாக இருக்கவேண்டும் நாம் செல்லுமிடம். அதைத்தேர்ந்தெடுப்பது அந்நூலைச்சார்ந்த நம்முடைய புரிதலும் உள்ளுணர்வுமாக இருக்கவேண்டும்.யோசித்துப்பாருங்கள், குஜராத்தின் தொழில்முறைத் திருடர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘சோரட் உனது பெருகும் வெள்ளம்’ [ஜாவேர்சந்த் மேகானி] நாவலை குஜராத்தின் கட்ச் பகுதியின் அரைப்பாலைநிலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104554

குறள் அறிதல்- கடிதம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, குறளினிது மீண்டுமொருமுறை கேட்டுமுடித்தேன். நந்தியைச் சுற்றி உள்ளே சென்றேனோ இல்லையோ, கொம்புகளுக்கிடையே சிவ நடனத்தைக் கண்டேன். குறளின் வரலாற்று, சமூகப் பின்புல விளக்கத்திற்குப்பிறகு, வாழ்க்கையில் நிகழும் தருணத்துடன் இணைத்து விளக்கியது ஒரு பரவசத்தை உண்டாக்கியது. இப்படி பள்ளியில் எனக்குச் சொல்லித்தரப்படவில்லையே என்ற வருத்தம் எழுந்தது. இலக்கிய ரசனை தவிர்த்த ஒரு விதி நூலாக மட்டுமே தெரிந்துகொள்ளவும் படிக்கவும் கூடிய சூழல்தான் பள்ளிகளில் இருந்திருக்கிறது. பின்னர் சற்றே ஆர்வமுற்று ஆங்காங்கே தமிழ் இலக்கியப் பரிச்சயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105415

ஒரு கோப்பை காபி- கடிதங்கள் 2

ஒரு கோப்பை காபி [சிறுகதை] அன்புடன் ஆசிரியருக்கு, அனோஜன் சில தினங்களுக்கு முன் இக்கதையை படிக்கத் தந்தபோது இரவு பதினோரு கடந்திருந்தது. உறங்கலாம் எனச் சென்றவன் விரைவாக வாசிக்கக்கூடியதாக இருந்ததால் முழுமையாக வாசித்துவிட்டே உறங்கினேன். ஒரு எளிமையான தோற்றத்தை கொண்டிருக்கும் இக்கதையின் உள்விரிவுகள் மறுவாசிப்பின் போதே சிக்குகின்றன. கெய்ஷா சூரியனுடன் தொற்றிக் கொள்ளுதல் வெற்றி போன்ற கதைகளின் நீட்சியாக இக்கதையை வாசிக்கலாம். கூறல் முறையில் சமீபத்தில் வாசித்தி போகனின் க்ளிஷே என்ற கதையை இது ஒத்திருக்கிறது. நீண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105351

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 5 மரப்படிகளின் ஓசை கேட்டதும் தேவிகை விஜயையின் கையை தொட்டு “அரசர்” என்றாள். “எப்படி தெரியும்?” என்றாள் விஜயை. “அவருடைய காலடி ஓசைதான்” என்றபடி தேவிகை எழுந்து வெளியே சென்றாள். சகதேவனின் காலடியோசை தனக்குத் தெரியாது என்று எண்ணியபடி விஜயை எழுந்து அறைவாயிலில் நின்றுநோக்க கீழிருந்து மரப்படிகளில் யுதிஷ்டிரர் ஏறிவருவதை கண்டாள். தொடர்ந்து நகுலனும் சகதேவனும் வந்தனர். தேவிகை யுதிஷ்டிரரை எதிர்கொண்டு கைகூப்பி “வருக, அரசே!” என்றாள். யுதிஷ்டிரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105493